சென்னையில் தீவிரமாக நோய்த்தொற்று பரவி வரும் சூழலில் கடந்த மூன்று தினங்களாக முகக் கவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளி பின்பற்றாதவர்கள் மீது சென்னை போலிசார் கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

ரசீது புத்தகத்தின் மூலம் சட்டம் ஒழுங்கு போலீசார் அபராதம் வசூலித்து வருகின்றனர். இந்த வகையில் தமிழகம் முழுவதும் கடந்த 8ஆம் தேதி முதல் நேற்று வரை முகக்கவசம் அணியாதவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் எண்ணிக்கை 1,30,531. அதன்மூலம் வசூலிக்கப்பட்ட அபராதத் தொகை ரூபாய் 2,52,34,900.

இவற்றுள் தெற்கு காவல் மண்டலத்தில் தான் அதிக அளவில் முகக்கவச அணியாத காரணத்துக்காக வழக்குகள் பதியப்பட்டு, அதிக அளவில் அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. 16336 வழக்குகள் பதியப்பட்டு அவற்றின் மூலம் ரூ.85,74,000 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

முகக்கவசம் அணியாத காரணத்துக்காக குறைவான வழக்குகள் பதியப்பட்டு குறைவான அபராத தொகையை வசூலித்ததாக மேற்கு மண்டலம் திகழ்கிறது. 6858 வழக்கு பதிவுகளும் அதன்மூலம் வசூலிக்கப்பட்ட அபராதத் தொகையானது ரூ.43,40,000.

அதேபோல் தமிழகம் முழுவதும் சமூக இடைவெளி பின்பற்றாதவர்கள் மீது கடந்த4 நாட்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் 6465. அதன்மூலம் வசூலிக்கப்பட்ட அபராத தொகை 25,90,000. இவற்றுள் நேற்று ஒரு நாளில் (11-04-2021) மட்டும் தமிழகம் முழுவதும் வழக்குகள் 46,062. அதன்மூலம் வசூலிக்கப்பட்ட அபராத தொகைதொகை ரூ89,61,300.

அதேபோல சமூக இடைவெளி வழக்குகள் 1,796. அதன்மூலம் வசூலிக்கப்பட்ட அபராத தொகை ரூ. 8,51,800. அதேபோல சென்னையில் கடந்த 8ந்தேதி முதல் நேற்று மாலை வரையிலான 4 நாட்களில் முககவசம்  அணியாதோர்கள் 2351 மீது வழக்குப்பதிவு செய்து அவர்களிடமிருந்து 4,44,600 ரூபாய் அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் என்கிற அடிப்படையில் 119 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.59, 500 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா தடுப்பு நடைமுறைகள், முக கவசம் அணிவதன் அவசியம், சமூக இடைவெளியின் அவசியம் பற்றி வாகன ஓட்டிகளுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here