தமிழகத்தில் கடந்த ஐந்து மாதங்களுக்கு பிறகு கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தற்போது கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. பேருந்தில் பயணிக்கவும், திரையரங்குகள், மால்களுக்கு வரவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மக்களுக்கு தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசால் தடுப்பூசி திருவிழா என்ற பெயரில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படவுள்ளன.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் நிலவரம் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் நடைபெறும் இக்கூட்டத்துக்கு பிறகு கூடுதல் கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here