திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நட்சத்திர ஏரி பகுதியில் இடிக்கப்பட்ட பொதுக் கழிப்பறையின் கட்டடக் கழிவுகளை நகராட்சி ஒப்பந்தக்காரர்கள் எரிச்சாலையின் மற்றொரு பகுதியான கால்டன் ஹோட்டல் பகுதியில் கொட்டி உள்ளார்கள், ஏற்கனவே எரிச்சாலையை சுற்றி உள்ள நடைபாதை முழுவதுமாக முடிக்கப்படாத நிலையில் இந்த பொதுக் கழிப்பறையில் இடிக்கப்பட்ட கழிவுகளை எரிச்சாலையின் பகுதியில் கொட்டி வைத்திருப்பது சுற்றுலா பயணிகளையும் பொதுமக்களையும் முகம் சுழிக்கும் நிலைக்கு ஆளாக்கி உள்ளது. கொடைக்கானல் நகராட்சி அதிகாரிகள் உடனே சீர் செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
எமது நிருபர்- S. வினோத்