AR என்டேர்டைன்மென் தயாரிப்பில் நவீன் சந்திரா, ரியா ஹரி, அபிராமி, ஆடுகளம் நரேன், திலீபன், ரித்விகா ஆகியோர் நடித்துள்ள படம் தான் ‘லெவன்’
விமர்சனம்:
சென்னையில் மர்மமான முறையில் தொடர் கொலைகள் நடக்கிறது. நாயகன் நவீன் சந்திரா போலீஸ் அதிகாரியாக இருக்கிறார். உடலை எரித்து அதை பொது இடங்களில் போடும் முறையை பின்பற்றும் சைக்கோ கொலையாளி பற்றி சிறு துப்பு கூட கிடைக்காமல் வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி தடுமாறுகிறார். மறுபக்கம் கொலை சம்பவங்கள் தொடர்கிறது.
வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி திடீரென்று விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு சென்று விடுகிறார். இதனால், வழக்கு மற்றொரு காவல்துறை அதிகாரியான நாயகன் நவீன் சந்திராவிடம் ஒப்படைக்கப்படுகிறது. நவீன் சந்திரா வழக்கை விசாரிக்க தொடங்கிய உடன் அவருக்கு ஒரு துப்பு கிடைக்கிறது. இறுதியில் நவீன் சந்திரா சைக்கோ கொலையாளியை கண்டுபிடித்தாரா? அந்த சைக்கோ கொலையாளி யார்? என்பதே கதை
நவீன் சந்திரா, போலீஸ் கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். இவரது அலட்டல் இல்லாத நடிப்பு கவனிக்க வைத்து இருக்கிறது. படம் முழுக்க இறுக்கமான முகத்துடன் நடித்து இருக்கிறார். இவரை காதலிப்பவராக நடித்து இருக்கும் ரியா ஹரி, தலைமை ஆசிரியராக வரும் அபிராமி, போலீஸ் அதிகாரிகளாக வரும் ஆடுகளம் நரேன், திலீபன் ஆகியோரின் நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.
சிறிது நேரம் மட்டுமே வந்தாலும் மனதில் பதிந்து இருக்கிறார் ரித்விகா. இறுதிக்காட்சி வரை திருப்பங்களுக்குள் திருப்பம், என்று பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் திரைக்கதை பயணிக்கிறது. பின்னணி இசை சிறப்பு. கிளைமாக்ஸில் யாரும் எதிர்பாராத திருப்பம் படத்திற்கு பலம்.
மைனஸ்: படத்தில் பல காட்சிகளில் லாஜிக் மீறல்கள் இருக்கிறது …. பாடல்கள் பெரிய அளவில் இல்லை….
மொத்தத்தில் இந்த ‘லெவன்’ திருப்புமுனை…..

















