பெங்களூரு:

கர்நாடகத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் மக்கள் பிரதிநிதிகளையும் கொரோனா தனது வலையில் வீழ்த்தி வருகிறது. ஏற்கனவே முதல்-மந்திரி எடியூரப்பா, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மந்திரிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் என 60-க்கும் மேற்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

 

                           2 எம்.எல்.ஏ.க்கள்

மைசூரு மாவட்டம் உன்சூர் தொகுதியில் இருந்து கர்நாடக சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டவர் எச்.பி.மஞ்சுநாத். இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் ஆவார். இந்த நிலையில் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த மஞ்சுநாத் எம்.எல்.ஏ. தன்னை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி இருந்தார்.

அந்த பரிசோதனை முடிவில் மஞ்சுநாத் எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால் அவர் சிகிச்சைக்காக பெங்களூருவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இதுபோல மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அனில் சிக்கமாது. இவர் கடந்த சில தினங்களாக காய்ச்சல், சளி தொல்லையால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு கொரோனா அறிகுறியும் இருந்தது. இதனால் அனில் சிக்கமாது எம்.எல்.ஏ. கொரோனா பரிசோதனை செய்து இருந்தார்.

இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அனில் சிக்கமாது எம்.எல்.ஏ. சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here