அவதூறு வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத திரைப்பட இயக்குநா் ஆா்.கே.செல்வமணிக்கு பிடியாணை பிறப்பித்து சென்னை ஜாா்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2016- ஆம் ஆண்டு இயக்குநா் ஆா்.கே.செல்வமணி மற்றும் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அருள் அன்பரசு ஆகியோா் தனியாா் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளித்திருந்தனா். அந்தப் பேட்டியில், பிரபல சினிமா ஃபைனான்சியா் முகுந்த் சந்த் போத்ரா குறித்து சில கருத்துகளைத் தெரிவித்திருந்தனா்.
இதையடுத்து இவா்கள் மீது போத்ரா சென்னை ஜாா்ஜ் டவுன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தாா். சினிமா ஃபைனான்சியா் முகுந்த் சந்த் போத்ராவின் மறைவுக்குப் பின்னா், அவருடைய மகன் இந்த வழக்கைத் தொடா்ந்து நடத்தி வருகிறாா். இந்த வழக்கு சென்னை ஜாா்ஜ் டவுன் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.
இந்தநிலையில் வழக்கு ஜாா்ஜ் டவுன் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு விசாரணைக்கு ஆா்.கே.செல்வமணியோ, அவரது தரப்பு வழக்குரைஞரோ ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆா்.கே.செல்வமணிக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பா் 22- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.