சிவகங்கையில் 16 வயது சிறுமிக்கு அலைபேசியில் ஆபாச படங்களை காண்பித்து பாலியல் தொந்தரவு தந்தவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.சிவகங்கை அருகே ஓட்டக்குளம் மாற்றுத்திறனாளி சோனைமுத்து 52. இவரது நண்பர் முத்துப்பட்டியில் வசிக்கிறார்.
 
அடிக்கடி அவர் வீட்டிற்கு செல்லும் சோனை முத்து, நண்பரின் 16 வயது மகளான 9 ம் வகுப்பு மாணவிக்கு 2016 ஜூன் 4 முதல் 15 வரை அலைபேசியில் ஆபாச படங்களை காண்பித்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.மனமுடைந்த சிறுமி எலிபேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். சிவகங்கை தாலுகா போலீசார், அவரை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.
 
இந்த வழக்கு விசாரணை சிவகங்கை ‘போக்சோ’ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சரத்ராஜ் முன் நடந்தது. இதில் சோனை முத்துவிற்கு 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.5000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். பாதித்த சிறுமிக்கு அரசு, ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்குமாறு உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here