தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் . பிரவேஷ் குமார் இ.கா.ப  தலைமையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் . பாலாஜி சரவணன்  முன்னிலையில் குறைதீரக்கும் மனு கூட்டம் நடைபெற்றது.
 
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்  உத்தரவின்படி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
 
அதன்படி மனு கொடுக்க வந்த 24 மனுதாரர்கள் தங்கள் குறைகளை திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் . பிரவேஷ் குமார் இ.கா.ப  மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்  பாலாஜி சரவணன் அவர்களிடம் நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்தனர். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த மேற்படி உயரதிகாரிகள் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here