Saturday, May 18, 2024
Blog

 ‘Haraa’  Movie Audio Launch!

‘Haraa’ produced by Coimbatore S P Mohan Raj and G Media Jaya Sri Vijay to be released across Tamil Nadu by Elma Pictures on June 7

Chennai:

Actor Mohan is the rarest breed of actors in Tamil Cinema, who has consistently delivered box-office hits. He owns a fan-base beyond age groups. He is now making a comeback in cinema by playing the lead in ‘Haraa’. Marking the special occasion of his birthday, the audio launch ‘Haraa’ happened in Chennai.  The event was attended by the film’s crew and eminent personalities from the industry.

On the occasion, actor Mohan was involved in philanthropic activities by giving educational aids to the underserved school kids and sewing machines to women to earn their livelihood.

‘Haraa’ produced by Coimbatore S P Mohan Raj and G Media Jaya Sri Vijay will be released across Tamil Nadu by Elma Pictures on June 7. The film has music by Rashaanth Arwin.

Here are some excerpts from the audio launch event.

Actor-Director K Bhagyaraj said…

“It’s great to see the audio launch celebration of ‘Haraa’ on the special occasion of Mohan’s birthday. It’s gladdening to see the fans gathered here for this moment. Fans have been Gods for both me and Mohan. I am here to reveal something you all don’t know about Mohan. Cinema industry functions on certain practices, but you wouldn’t have seen Mohan participating anywhere. He would always been focussed on his work. You can spot it with his physic, he is maintaining it till today. Maestro Ilaiyaraaja has been the elixir of many actors through his songs, but he has always been special when it comes to Mohan. Mohan would give an impression to everyone that he has crooned a song himself. I have seen this similarity with Sivaji Ganesan sir, a Hindi superstar, and Mohan. Director Vijay Sri G is doing different and unique pattern of movies. He featured Charu Haasan in as protagonist, Nikhil Murukan as actor, and delivered successive hits. He has now re-launched Mohan as hero through this movie. After watching the songs, I am confident that Mohan will raise the bar of success with this movie. This will be a breakthrough in the career of Mohan. I am sure that the success meet of this film will be as grand as this audio launch. My best wishes to the entire team.”
 

Director Vijay Sri G said…

“Mohan sir fans are the main reason behind making this event successful. The audiences and fans will shortly know about the film’s content. The entire cast and crew have worked hard to give their best towards this film. Mohan sir was never concerned about who are part of this project, and he gave me complete creative freedom. He would always look towards encouraging them in exploring their talents. All the songs were filmed during the challenging situations. Mohan sir will be seen in a different dimension in this film. If I am back today to normalcy after a road accident, it’s mainly because of Mohan sir’s kind gesture. He took care of me and made sure of rescheduling the shoot based on my comfortability. Mohan’s sir movies have been successful mainly because of his performance. This film will be a delightful entertainer for everyone.”


Actor Mohan said…

“I am so much privileged to have such wonderful fans, and would never get tired of thanking them. I owe them a lot. I thank them for showering their love irrespective of my presence and absence in the industry. Many people ask me why I don’t act regularly. People who know me know that I act only if I like the story. I agreed to this film only after Vijay Sri G reworked the story for 7 times. I am awe-stricken by the support and love extended by Coimbatore people. Everyone in the team worked so hard.  Vijay Sri G has made this film in such a way that it will appeal to the interests of 2K kids as well. Music director Rashaanth Arwin is the showstopper today. He has delivered tremendous songs for this film, and the one based on father-daughter bonding will be liked by all. This film has proved that a good cinema with unique content will be received very well in trade circles. It has happened with this project. Kovai Brothers, after watching the film, have appreciated the movie. The film is getting ready for release on June 7 by Kovai Brothers. This will be a treat for everyone. Thank you all.”


‘Haraa’ is produced by Coimbatore S P Mohan Raj in association with G Media Jaya Sri Vijay. The film has an ensemble star cast comprising Anumol, Kaushik of ‘Kaalangalil Aval Vasantham’ fame, ‘Powder’ fame Anitra Nair, Yogi Babu, Charu Haasan, Suresh Menon, Vanitha Vijaykumar, Mottai Rajendran, Singampuli, Deepa, Mime Gopi, Chaams , Santhosh Prabhakar and many others. Rashanth is composing music, Prahath Muniyasamy is handling cinematography and Guna is editing this movie.

சவுக்கு சங்கர் விவகாரம்: நீதிபதி போட்ட உத்தரவு!

கஞ்சா வழக்கு தொடர்பாக சவுக்கு சங்கர் நேற்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் மீதான விசாரணை நடைபெற்று வந்தது. மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜரானார். சவுக்கு சங்கருக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்ற வாளகம் முன்பு பெண்கள் காத்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் பலத்த பாதுகாப்புடன் சவுக்கு சங்கரை நீதிமன்றத்திற்குள் அழைத்து சென்றனர். தேனியில் கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சவுக்கு சங்கருக்கு மே 22 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு அளித்தனர். சங்கருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகள் பெண் காவலர்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக மேலும் கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். பெண் போலீஸ் குறித்து அவதூறாக பேசியதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் இன்று தேனியில் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் சவுக்கு சங்கரை மே 17 ம் தேதி வரை கோவை மத்திய சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சவுக்கு சங்கர் மீது தகாத வார்த்தையில் பேசுதல், பெண்கள் குறித்து அவதூறாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தகவல் தொழில்நுட்ப சட்டத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். இது மட்டுமல்லாமல் சவுக்கு சங்கரை கைது செய்த போது அவருடன் இருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் காரில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதனையடுத்து அவர் மீது கஞ்சா வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் விசாரணைக்காக மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சவுக்கு சங்கரை போலீசார் ஆஜர்படுத்தினார்கள். அவருக்கு 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு அளித்துள்ளனர். மே 22 வரை நீதிமன்ற காவலில் இருக்க வேண்டும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிக்கினார் கிராம நிர்வாக அலுவலர்!

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த ஆத்துரை கிராமத்தைச் சோ்ந்த சேகா் மகன் மாணிக்கம் (30). இவருக்கு 3 சகோதரா்கள். திருமணமாகி வெளியூா்களில் பணியாற்றி வருகின்றனா். மாணிக்கம் தனது தந்தைக்கு உதவியாக குடும்பத்துக்குச் சொந்தமான 2 ஏக்கா் 75 சென்ட் நிலத்தில் விவசாயம் செய்து வந்தாா். இந்த நிலையில், மாணிக்கத்துக்கு அவரது தந்தை சேகா் 50 சென்ட் விவசாய நிலத்தை கிரையமாக வழங்கினாா்.

சாா்-பதிவாளா் அலுவலகம் மூலம் பதிவு செய்த பிறகு பட்டா மாறுதலுக்காக ஆன்லைன் மூலம் மாணிக்கம் விண்ணப்பித்தாராம். அதற்கான அரசு கட்டணத்தையும் செலுத்தினாா். ஆத்துரை கிராம நிா்வாக அலுவலா் சிலம்பரசன், உதவியாளா் பூங்கொடி ஆகியோா் பட்டா மாறுதல் விண்ணப்பம் குறித்து கேட்டனராம். மேலும், பட்டா மாறுதலுக்கு ரூ.3000 லஞ்சமாகக் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தனராம்.

மாணிக்கம் பணம் கொடுக்காததால் அவரது மனு 3 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டதாம். ஆத்துரை கிராம நிா்வாக அலுவலரை கடந்த 3-ஆம் தேதி மாணிக்கம் தொடா்பு கொண்டு கேட்ட போது, ரூ.3,000 பணம் தந்தால் பட்டா பெயா் மாற்றம் செய்து தருவதாகக் கூறினாராம்.

இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸில் மாணிக்கம் புகாா் அளித்தாா். அவா்களின் அறிவுறுத்தலின் பேரில், செவ்வாய்க்கிழமை கிராம நிா்வாக அலுவலா் சிலம்பரசனிடம் ரசாயனம் தடவிய ரூ.3,000-ஐ மாணிக்கம் கொடுத்தாா். அப்போது, ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சிலம்பரசனைக் கைது செய்தனா்.

ஊழல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி வேல்முருகன், ஆய்வாளா் மைதிலி ஆகியோா் கொண்ட குழுவினா் சிலம்பரசனிடம் விசாரணை நடத்தி வழக்குப் பதிந்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

Indian Bank Q4 standalone net rises 55% to ₹2,247 crore!

Chennai:

Indian Bank’s standalone net profit for the quarter ended March rose 55% to ₹2,247 crore YoY due to an increase in interest income, reduction in provisions, and improvement in asset quality. Net interest income increased by 9% to ₹6,015 crore, while net interest margin contracted to 3.44% from 3.56%, the public sector lender said in a statement. Gross non-performing assets decreased by 200 bps to 3.95% and net NPA by 47 bps to 0.43%. Provision coverage ratio improved by 252 bps to 96.34%. Capital Adequacy Ratio stood at 16.44% against 16.49%.

Fresh slippages was ₹1,238 crore, while recovery including technical write-off was ₹2,679 crore. Total business grew by 12% to ₹12.22 lakh crore, of which deposits increased by 11% to ₹6.88 lakh crore, while current account savings account deposit grew by 8%, savings deposit by 7% and current deposit by 9%.

Gross advances improved to ₹5.34 lakh crore from ₹4.74 lakh crore. Retail, Agriculture and MSME (RAM) advances grew 14% to ₹3.10 lakh crore. RAM contribution to gross domestic advances was 62.21%. Retail, Agri & MSME advances grew by 15%, 19% and 6% respectively. Within the retail sector, home loan (including mortgage) grew by 11%, auto loan by 49% and personal loan by 10%. Corporate credit stood at 10% (₹1.88 lakh crore).

The board recommended a dividend of ₹12 per share.

“Our focus is to deliver value-added and suitable solutions through the acumen of empowered employees and smart use of technology to cater the needs of the customers,” MD & CEO S.L. Jain said, adding that the lender aimed to simplify banking, making it more accessible, convenient and secure for everyone.

Bank’s Global Business reached ₹12.22 lakh Cr, up by 12% YoY

Key Highlights (Quarter ended Mar’24 over Mar’23)

·        Net Profit up by 55% YoY at ₹2247 Cr in Mar’24 from ₹1447 Cr in Mar’23

·       Profit Before Taxes up by 111% YoY at ₹3057 Cr in Mar’24 from ₹1452 Cr in Mar’23

·          Operating Profit improved by 7% YoY to ₹4305 Cr in Mar’24 from ₹4016 Cr in Mar’23

·          Net Interest Income increased by 9% YoY to ₹6015 Cr in Mar’24 from ₹5508 Cr in Mar’23

·          Fee based income grew by 6% YoY to ₹970 Cr in Mar’24 from ₹914 Cr in Mar’23 

·          Return on Assets (RoA) up by 33 bps to 1.15% in Mar’24 from 0.82% in Mar’23

·          Return on Equity (RoE) increased by 358 bps to 19.06% in Mar’24 from 15.48% in Mar’23

·          Yield on Advances (YoA) up by 64 bps to 8.81% in Mar’24 from 8.17% in Mar’23

·          Yield on Investments (YoI) increased by 26 bps to 6.88% in Mar’24 from 6.62% in Mar’23

·          Gross Advances increased by 13% YoY to ₹533773 Cr in Mar’24 from ₹473586 Cr in Mar’23

·          RAM (Retail, Agriculture & MSME) advances grew by 14% YoY to ₹309918 Cr in Mar’24 from ₹272679 Cr in Mar’23

·          RAM contribution to gross domestic advances is 62.21%. Retail, Agri & MSME advances grew by 15%, 19% and 6% YoY respectively. Home Loan (Including mortgage) grew by 11% YoY, Auto Loan by 49% YoY and Personal Loan by 10% YoY

·          Priority sector advances as a percentage of ANBC stood at 43.82% at ₹178527 Cr in Mar’24 as against the regulatory requirement of 40%

·          Total Deposits increased by 11% YoY and reached to ₹688000 Cr in Mar’24. CASA deposit grew by 8%, savings deposit grew by 7% and Current deposit by 9% YoY

·          Domestic CASA ratio stood at 42.31% as on 31st Mar’24

·          CD ratio stood at 77.58% as on 31st Mar’24

·          GNPA decreased by 200 bps YoY to 3.95% in Mar’24 from 5.95%, NNPA reduced by 47 bps to 0.43% from 0.90% in Mar’23

·          Provision Coverage Ratio (PCR, including TWO) improved by 252 bps YoY to 96.34% in Mar’24 from 93.82% in Mar’23

·          Slippage Ratio contained to 1.11% in Mar’24 in comparison to 2.43% in Mar’23 i.e improvement of 132 bps YoY

·          Capital Adequacy Ratio stood at 16.44%. CET-I improved by 63 bps YoY to 13.52%

Tier I Capital improved by 55 bps YoY to 14.03%

Key Highlights (Quarter ended Mar’24 over Dec’23)

·          Net Profit up by 6% QoQ to ₹2247 Cr in Mar’24 from ₹2119 Cr in Dec’23

·          Operating Profit improved by 5% YoY ₹4305 Cr in Mar’24 from ₹4097 Cr in Dec’23

·          Net Interest Income improved to ₹6015 Cr in Mar’24 as against ₹5815 Cr in Dec’23

·          Return on Assets (RoA) improved to 1.15% in Mar’24 from 1.11% in Dec’23

·          Yield on Advances (YoA) improved to 8.81% from 8.78% in Dec’23 and Yield on Investments (YoI) improved to 6.88% in Mar’24 from 6.80% in Dec’23

·          Domestic Net Interest Margin (NIM) improved to 3.52% in Mar’24 from 3.49% in Dec’23

The Board of Directors recommended a dividend @ 120% amounting ₹12 per equity share for FY24 subject to requisite approvals.

Key Highlights (Year ended Mar’24 over Mar’23)                                                                                                                     

·          Net Profit up by 53% YoY to ₹8063 Cr in FY24 from ₹5282 Cr in FY23

·          Profit Before Taxes up by 85% YoY at ₹10951 Cr in FY24 from ₹5915 Cr in FY23

·          Operating Profit increased by 10% at ₹16840 Cr in FY24 from ₹15271 Cr in FY23

·          Net Interest Income grew by 15% to ₹23274 Cr in FY24 from ₹20225 Cr in FY23

·          Return on Assets (RoA) increased by 30 bps to 1.07% in FY24 from 0.77% in FY23

·          Return on Equity (RoE) up by 451 bps to 19.24% in FY24 from 14.73% in FY23

·          Domestic Net Interest Margin (NIM) increased by 13 bps to 3.54% in FY24 from 3.41% in FY23

·          Yield on Advances (YoA) up by 96 bps to 8.72% in FY24 from 7.76% in FY23

·          Yield on Investments (YoI) increased by 35 bps to 6.80% in FY24 from 6.45% in FY23

·          Cost to Income Ratio is 45.92% for FY24

Network:

·          The Bank has 5847 domestic branches (including 3 DBUs), out of which 1985 are Rural, 1530 are Semi-Urban, 1174 are Urban & 1158 are in Metro category. The Bank has 3 overseas branches & 1 IBU.

·          The Bank has 4937 ATMs & BNAs and 11297 number of BCs.

Digital Banking:

·          Business through Digital Channels has reached to ₹81,250 Cr. A total of 78 Digital Journeys, Utilities and Processes have been launched so far.

·          The number of Mobile Banking users has grown by 45% year over year, reaching 1.67 Cr.

·          Both UPI users and Net Banking Users have seen a 37% YoY increase, reaching 1.75 Crores and 1.06 Crores respectively.

·          The count of UPI QR merchants on-boarded has risen by 43% YoY, while the total number of Point of Sale (PoS) terminals has increased by 58% YoY, reaching a total of 21,580.

 டி இமான் இசையில் முதல் முறையாக பாடிய மனோ!

ஏ ஆர் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா, ரியா ஹரி நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் விறுவிறுப்பான புலனாய்வு திரில்லர் ‘லெவன்’

பல ஆண்டுகளாக திரையுலகில் தொடர்ந்து பயணித்து வரும் நிலையிலும் இதுவரை இணைந்து பணிபுரியாத இசையமைப்பாளர் டி இமானும் பிரபல பாடகர் மனோவும் முதல் முறையாக கைகோர்த்துள்ளனர். விரைவில் வெளியாக உள்ள ‘லெவன்’ திரைப்படத்திற்காக இமான் இசையில் மனோ பாடியுள்ளார்.

உணர்ச்சிப் பூர்வமான இந்த பாடல் குறித்து பேசிய மனோ:

“இமான் இசையை தொடர்ந்து ரசித்து வருகிறேன். அவர் இசையமைத்துள்ள பாடல் ஒன்றுக்கு முதல் முறையாக பாடுவது மிக்க மகிழ்ச்சி. உயிரோட்டமிக்க இந்த பாடல் பெரிதும் வரவேற்கப்படும் என்று நம்புகிறேன்,” என்றார்.

இது குறித்து பேசிய இசையமைப்பாளர் டி இமான்:

“மனோ அவர்களுடன் இணைந்து பணியாற்றவில்லை என்ற ஏக்கம் பல காலமாக இருந்தது, இன்று அது பூர்த்தியாகி உள்ளது அவரது குரலுக்கு மிகவும் உகந்த பாடலை உணர்ச்சிப்பூர்வமாக அவர் பாடியுள்ளார்,” என்று தெரிவித்தார்.

‘லெவன்’ திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ், “திரைப்படத்தின் முக்கியமான கட்டத்தில் இந்த பாடல் இடம்பெறுகிறது. இமான் இசையில் மனோ அவர்கள் முதல் முறையாக பாடியது ‘லெவன்’ திரைப்படத்திற்காக என்பது மிகுந்த பெருமை,” என்று கூறினார். இப்பாடலின் வரிகளை கபிலன் எழுதியுள்ளார்.
 
‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ மற்றும் ‘செம்பி’ ஆகிய பெரிதும் பாராட்டப்பட்ட வெற்றி படங்களை தொடர்ந்து விறுவிறுப்பான புலனாய்வு திரில்லரான ‘லெவன்’ திரைப்படத்தை தங்களது மூன்றாவது திரைப்படமாக ஏ ஆர் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி தயாரிக்கின்றனர்.

இயக்குநர் சுந்தர் சி இடம் ‘கலகலப்பு 2’, ‘வந்தா ராஜாவா தான் வருவேன், மற்றும் ‘ஆக்ஷன்’ ஆகிய திரைப்படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய லோகேஷ் அஜில்ஸ் இந்த புதிய திரைப்படத்தை இயக்குகிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாக உள்ள இத்திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நவீன் சந்திரா நாயகனாக நடிக்கிறார். ‘சரபம்’, ‘சிவப்பு’ மற்றும் ‘பிரம்மன்’ உள்ளிட்ட தமிழ் படங்களிலும் சமீபத்தில் வெளியாகி பெரிதும் பாராட்டப்பட்ட வெப் சீரிஸான ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’யிலும்  நடித்துள்ள இவர், இயக்குநர் ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’ உள்ளிட்ட பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தில் நடித்துள்ள ரியா ஹரி நாயகியாக நடிக்கும் இப்படத்தில் ‘விருமாண்டி’ புகழ் அபிராமி, ஆடுகளம் நரேன், ‘வத்திக்குச்சி’ புகழ் திலீபன்,  ‘மெட்ராஸ்’ புகழ் ரித்விகா, அர்ஜை உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கான இசையை டி. இமான் அமைக்க, பாலிவுட்டில் பணியாற்றிய அனுபவமுள்ள கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவை கவனிக்கிறார். படத்தொகுப்புக்கு தேசிய விருது பெற்ற ஸ்ரீகாந்த் என்.பி. பொறுப்பேற்றுள்ளார்.

‘லெவன்’ திரைப்படம் குறித்த மேலும் தகவல்களை பகிர்ந்து கொண்ட இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ்:

“ஆரம்பம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வரும் விறுவிறுப்பான புலனாய்வு திரில்லராக ‘லெவன்’ அமையும். திறமைமிக்க நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்திற்காக இணைந்துள்ளார்கள். அனைவரையும் கவரும் விதத்தில் திரைப்படம் அமையும் என்று நம்புகிறேன்,” என்று கூறினார்.
 
ஏ ஆர் என்டர்டைன்மென்ட் பேனரில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி தயாரிப்பில் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் திரைப்படமான ‘லெவன்’ படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாட்டுக்கே பெரிய ஹீரோ கோபுரம் பிலிம்ஸ் அன்பு செழியன் தான் – நடிகர் சந்தானம்

சென்னை:

கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில்,  நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் கலக்கலான காமெடி கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம், ‘இங்க நான் தான் கிங்கு’. உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் மே 10 அன்று பிரமாண்டமான முறையில் வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

இந்நிகழ்வினில்

எழுத்தாளர் எழிச்சூர் அரவிந்தன் பேசியதாவது…

கோபுரம் பிலிம்ஸ் தயாரித்த முதல் படமான ‘வெள்ளக்கார துரை’ எழுத்தாளரும் நான் தான். 10 வருடம் கழித்து அடுத்த வெற்றிப்படமான ‘இங்க நான் தான் கிங்கு’ படத்திற்கு எழுதியுள்ளேன். அன்புசெழியன் சாரிடம் கதை சொன்னேன். அவருக்கு கதை பிடித்திருந்தது, உடனே எல்லாம் ஆரம்பித்துவிட்டது. என்னுடன் இக்கதைக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. மாதா, பிதா, குரு, தெய்வம் என்பார்கள் இந்த காலத்தில் ஒரு படத்திற்கு உயிர் கொடுக்கும் தயாரிப்பாளர் இன்னொரு கடவுள். கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் மற்றும் சுஷ்மிதா அன்புசெழியன் இருவருக்கும் என் நன்றிகள். அடுத்ததாக இப்படம் முழுமை பெற மிகமுக்கிய காரணமான, எனக்கு வழிகாட்டியாக இருந்த சந்தானம் சாருக்கு நன்றி. என் இயக்குநர் ஆனந்த் சார், எங்களுக்குள் எப்போதும் ஊடல்கள் இருக்கும். என் கதையை முழுமையான சினிமாவாக மாற்றியுள்ள அவருக்கு நன்றி. தம்பி ராமையா சார் அருமையாக வேலை பார்த்துள்ளார் அவருக்கும் என் நன்றிகள். பாடலில் பட்டையை கிளப்பியுள்ள இமான் சாருக்கு என் நன்றிகள். அழகான தமிழ் பேசும் ஹீரோயினுக்கு வாழ்த்துகள். இந்தப்படம் மிகப்பெரிய ஹிட்டாகும். படத்தின் நிறை குறைகளை கூறி ஆதரவு தாருங்கள், அனைவருக்கும் நன்றி.   

சரிகமா நிறுவனம் சார்பில் ஆனந்த் பேசியதாவது….

கோபுரம் பிலிம்ஸ் உடன் சரிகமாவின் முதல் படம் இது. அன்புசெழியன் சாருக்கு நன்றி. இந்த சம்மருக்கு மிகப்பெரிய விருந்தாக இப்படம் இருக்கும். சந்தானம் சார் கேங் கலக்கியிருக்கிறார்கள். நல்ல பாடல்கள் தந்துள்ள இமானுக்கு நன்றி.  இந்தப்படம் எல்லோரும் கொண்டாடும் படமாக இருக்கும்.  அனைவருக்கும் நன்றி. 

நடிகர் கூல் சுரேஷ் பேசியதாவது…

இந்த படத்தில் நடித்ததற்கு நான் மிக சந்தோஷப்படுகிறேன் எனக்கு நல்ல சம்பளம் தந்தார்கள். இதற்கு முன் ‘வெள்ளக்கார துரை’ படம் செய்தேன், என்னை நன்றாக பார்த்துக் கொண்டார்கள். மிகச்சிறந்த தயாரிப்பாளர். சந்தானம் சாரை புகழ்ந்து கொண்டே இருக்கிறீர்கள் எனக் கேட்கிறார்கள் அவர் உங்களுக்கு அதிகம் வாய்ப்பு தரவில்லை என சொல்கிறார்கள் ஆனால் என் வாழ்க்கைக்கே அவர் தான் அதிகம் வாய்ப்பு தந்துள்ளார். இந்தப்படத்திற்கும் அவர் தான் வாய்ப்பு வாங்கி தந்தார். அவருக்கு என்றும் நன்றியுணர்வுடன் இருப்பேன். இப்படத்தில் இமான் சார் நல்ல பாடல்கள் தந்துள்ளார். என்னை தியேட்டருக்கு வராதே என பலர் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள் ஆனால் இந்தக்காலத்தில் நேரடியாக சென்று விளம்பரம் செய்தால் தான் படத்திற்கு கூட்டம் வரும். நான் என்னால் முடிந்ததை செய்வேன். ‘இங்க நான் தான் கிங்கு’ மிகப்பெரிய வெற்றியடையும். 

ஒளிப்பதிவாளர் ஓம் நாராயண் பேசியதாவது…

இது ஒரு ஃபேமிலி எண்டர்டெயினர் மூவி. அத்றகேற்றாற் போல கேமரா செய்துள்ளேன். நான் சந்தானம் சாரின் ரசிகன். அவரின் நடிப்பை ஷூட்டிங்கில் பார்த்து சிரித்து விடுவேன். இந்த படத்தில் வாய்ப்பு தந்த அன்பு சாருக்கு நன்றி. சந்தானம் மற்றும் இயக்குநருக்கு நன்றிகள். 

இயக்குநர் ஆனந்த் நாராயண் பேசியதாவது…

இதுவரையிலும் படத்திற்கு ஆதரவு தந்து வரும் அனைவருக்கும் நன்றி. தயாரிப்பாளர் அன்பு சார் கதை கேட்கிறார் என்றதும் அவரை நெருங்க முயற்சித்தேன். செந்தில் சார் மூலம் தான் அவரை சந்தித்தேன். ஒரு படம் செய்வதாக கதை சொன்னார்கள், உடனே  ஒப்புக்கொண்டேன். எனக்காக முழு டீமையே கொடுத்தார்கள். படம் டாக்கி போர்ஷன் முடித்தவுடன் என்னைக் கூப்பிட்டு பாராட்டினார்.  சந்தானம் சாரை ‘இந்தியா பாகிஸ்தான்’ படத்திற்காக சந்தித்துள்ளேன், அவருக்கு நான் ரசிகன். இப்போது அவருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. முதல் நாளே என்னைக் கூப்பிட்டு பாராட்டினார். ஷூட்டிங்கில் செட்டிலேயே இருந்து என்னுடன் விவாதிப்பார். அவர் டீமுக்கு முக்கியமாக நன்றி. இமான் சார் மியூசிக் அட்டகாசமாக வந்துள்ளது. சந்தானம் சார் எமோஷன் காட்சி ஒன்று இருக்கிறது, அதில் சந்தானம் சாரா இசையா என போட்டியே இருக்கும். சந்தானம் சாருக்கு இணையாக புதுமுகம் லயா சூப்பராக நடித்துள்ளார். தம்பி ராமையா சார் அருமையாக நடித்துள்ளார்.  எல்லோருடைய பெஸ்ட் இந்தப்படத்தில் தந்துள்ளனர் அனைவருக்கும் என் நன்றிகள்.  தொழில்நுட்ப குழுவினர் அனைவருக்கும் நன்றி. கண்டிப்பாக குடும்பத்தோடு சந்தோஷமாக கொண்டாடும் படமாக இது இருக்கும், அதற்கு ரைட்டருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். மே 10 படம் பார்த்து ஆதரவு தாருங்கள். 

இயக்குநர் செல்லா அய்யாவு பேசியதாவது…

கோபுரம் பிலிம்ஸ் தயாரித்த ‘வெள்ளக்கார துரை’ படத்தில், நான் அஸிஸ்டெண்ட். தயாரிப்பாளர் அன்பு சார் சினிமாவை எவ்வளவு நேசிப்பார் என்பது தெரியும். ஒரு படம் வெற்றி பெற்றால் அதைப்பற்றி நிறைய பேசுவார். திரைத்துறையில் இருப்பவர்களுக்கு பொறுப்பு மிக அதிகம் என்பதை எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பார். கொஞ்ச காலத்திற்கு பிறகு இப்போது மீண்டும் தயாரிப்பில் இறங்கியுள்ளார் வருடத்திற்கு நாலைந்து படங்கள் செய்ய வேண்டும். இந்தப்படம் நான் பார்த்துவிட்டேன். சந்தானம் சார் ரசிகன் நான். இந்தப்படத்தில் எல்லோரும் சிரித்து கொண்டே இருக்கலாம். அவருடன் இணைந்து விரைவில் படம் செய்வேன். படம் வெற்றிபெற வாழ்த்துகள். 

தம்பி ராமையா பேசியதாவது…

‘இங்க நான் தான் கிங்கு’, குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும். இப்போது படங்கள் நிறைய விவாதிக்கப்படுகிறது. மலையாள படங்கள் பற்றி சொல்கிறார்கள். ஆனால் எல்லாவற்றிற்கும் தாய் தமிழ் சினிமா தான். முன்பெல்லாம் தயாரிப்பு தரப்பில் கதை இலாகா இருக்கும். ஒரு கதை தயாராக பல அடுக்குகள் இருக்கும் தேவரய்யா ஆரம்பித்து ஆர் பி சௌத்திரி வரை கதையை தேர்ந்தெடுத்து தயாரிப்பதில் மிகுந்த கவனம் இருக்கும். அது போல் கோபுரம் பிலிம்ஸ் தேர்ந்தெடுத்து படம் செய்கிறார்கள். அன்புசெழியன் சார் தனது மகளை இந்த துறைக்கு கூட்டி வந்துள்ளார். தெளிவானவராக இருக்கிறார், வாழ்த்துகள் மகளே. இப்படம் காம வாடை இல்லாத காமெடிப்படம்.  நல்ல கலைஞர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர். அன்பு தம்பி இமான் பெரிய அளவில் சிறப்பான பாடல்கள் தந்துள்ளார். சந்தானத்தின் வெற்றிக்கு காரணம் அவர் மனது தான். அவர் நிஜ ஹீரோ. தன் பழைய நண்பர்களை வைத்து காப்பாற்றுவது மிகப்பெரிய விஷயம். ஒரு காட்சியை கடைசி ரசிகன் வரை ரசிக்க வெண்டும் என்பதில் கடும் முயற்சி செய்வார் சந்தானம். அவருடன் பயணிப்பது மிகுந்த சந்தோஷம். லியா அறிமுக நடிகை என்ற தயக்கம் இல்லாமல் எங்களுக்கு ஈடு கொடுத்து நடித்துள்ளார், நல்ல எதிர்காலம் உள்ளது வாழ்த்துகள். இப்படத்தில் முழு நீள காமெடி பாத்திரம் செய்துள்ளேன். அனைவருக்கும் இப்படம் பிடிக்கும். மே 10 அனைவரும் படம் பார்த்து ஆதரவு தாருங்கள், நன்றி. 

நடிகை பிரியாலயா பேசியதாவது…

இந்த நாள் எனக்கு மிக முக்கியமான நாள். என் முதல் பட மேடை, கடவுளுக்கும் என் அப்பா அம்மாவுக்கும் நன்றி. என் தயாரிப்பாளர் அன்பு சார், சுஷ்மிதா மேடம் இருவருக்கும் நன்றி. எப்போதும் ஆதரவாக என்னை விசாரித்து பார்த்துக்கொண்டார்கள். கோபுரம் பிலிம்ஸில் என் முதல் படம் செய்ததை பெருமையாக நினைக்கிறேன். எல்லோருக்கும் பிடித்த சந்தானம் சார், அவருடன் பழகிய யாருக்கும் அவரை பிடிக்காமல் போகாது. அவ்வளவு எளிமையானவர். முதலில் செட்டில் என்னுடன் இங்கிலீஷில் பேசினார். அவருக்கு நான் தமிழ் என்பது தெரியாது, நான் சொன்ன பிறகு ஜாலியாக பேசினார் அவருடன் நடித்தது மகிழ்ச்சி. கேப்டன் கூல் ஆனந்த் சார் ஜாலியாக பேசி வேலை வாங்கி விடுவார். தம்பி ராமையா சாரின் எனர்ஜி பிரமிப்பாக இருக்கும். அவர் தமிழுக்கு ரசிகை நான். இந்தப்படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும்  என் நன்றிகள். மியூசிக் தான் படத்தின் ஆன்மா. இமான் சாருக்கு என் நன்றிகள். படம் பார்த்து ஆதரவு தாருங்கள். 

இசையமைப்பாளர் இமான்  பேசியதாவது…

கோபுரம் பிலிம்ஸில் ‘வெள்ளக்கார துரை’ படம் செய்துள்ளேன். ஒரு இடைவேளைக்குப் பிறகு அன்புசெழியன் சாருடன் இணைகிறேன். என் மீது அவருக்கு தனித்த அன்பு இருக்கிறது. அவர் எல்லாப் படத்திலும் என் இசை இருக்க வேண்டுமென நினைப்பார்.  அவருக்கு என் நன்றிகள். இப்படம் மூலம் அறிமுகமாகும் சுஷ்மிதாவிற்கு வாழ்த்துக்கள்.  சந்தானம் சார் காமெடி தான் என் வீட்டில் ஓடிக்கொண்டே இருக்கும், அவருடன் வேலை பார்க்க வேண்டுமென பல காலமாக ஆசைப்பட்டேன், அது இந்தப்படத்தில் அமைந்தது மகிழ்ச்சி. ஒரு ஹீரோயினுக்கு ஒரு வெற்றிப்பாடல் அமைந்தால் அது மிகப்பெரிய விளம்பரமாக இருக்கும் ‘மாயோன்…’ பாடல் லயாவுக்கு மிக அருமையான பாடலாக அமைந்துள்ளது. சந்தானம் சாரும் கலக்கியுள்ளார். இப்படத்தில் மூன்று பாடல்கள்.  ‘மாயோன்…’ எனக்கு நெருக்கமான பாடல், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பாடியுள்ளார், அவருக்கு நன்றி. இந்தப்படத்தில் காமெடியைத் தாண்டி எமோஷனல் காட்சிகளிலும் சந்தானம் அசத்தியுள்ளார். இசையில் பல காட்சிகள் சவாலாக இருந்தன. மிக மகிழ்ச்சியாகவும் இருந்தது. 

சுஷ்மிதா அன்புசெழியன் பேசியதாவது… 

என்னை தயாரிப்பாளராக்கிய அப்பாவுக்கு நன்றி. நான் படம் பார்த்து விட்டேன். குடும்பத்தோடு என்ஜாய் செய்து பார்க்கும் படமாக இருக்கும். சந்தானம் சார் கலக்கியிருகிறார். லயா அருமையாக நடித்துள்ளார். ஒரு கலக்கலான விருந்தாக இப்படம் இருக்கும்.

தயாரிப்பாளர் அன்புசெழியன் பேசியதாவது… 

சந்தானம் சாரை வைத்து ஒரு படம் செய்ய ஆசைப்பட்டேன். கொஞ்ச காலம் தயாரிப்பில் இல்லை. இந்தக்கதை வந்த போது சந்தானம் சரியாக இருப்பார் எனத் தோன்றியது.  அவர் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு தந்து படத்திற்காக அர்ப்பணிப்போடு உழைத்துள்ளார்.  என்னுடைய பார்ட்னராக சரிகமா ஆனந்த் இணைந்துள்ளார், அவருக்கு நன்றி. தம்பி ராமையா சார், நாயகி லயா, கூல் சுரேஷ் எல்லோருக்கும் வாழ்த்துகள். இமான் சார் அருமையான பாடல்கள் தந்துள்ளார். சந்தானம் சார் இந்தப்படத்திற்காக ஸ்பெஷலாக உழைத்து தந்தார், நன்றி. செல்லா இந்தப்படத்திற்காக எனக்காக வந்து உழைத்து தந்தார் அவருக்கு என் நன்றிகள். அவருடன் படம் செய்ய பேசிக்கொண்டிருக்கிறேன். அடுத்தடுத்து இன்னும் நிறைய படம் செய்யவுள்ளேன், உங்கள் ஆதரவைத் தாருங்கள். முதன் முதலாக தனது எக்ஸ் தளத்தில் இப்படத்தைப் பற்றி பதிவிட்டு எங்களுக்கு ஆதரவு தந்த உலக நாயகன் கமலஹாசன் சாருக்கு நன்றி. என் மகள் சுஷ்மிதா இப்படம் மூலம் திரைத்துறைக்கு வந்துள்ளார் அவருக்கு ஆதரவு தாருங்கள். படத்திற்கும் உங்கள் ஆதரவைத் தாருங்கள், நன்றி. 

நடிகர் சந்தானம் பேசியதாவது… 

‘இங்க நான் தான் கிங்கு’ படத்தில் ஹீரோ என்னவோ நான் தான் ஆனால் கிங்கு அன்புசெழியன் சார் தான். தமிழ்நாட்டுக்கே பெரிய ஹீரோ அவர் தான். அவர் ஆபிஸுக்கு வராத ஹீரோவே இல்லை. அவரிடம் நானே காசு கேட்டுதான் போனேன், என்னை அவருக்கு பிடித்தது, வீடு வாங்க காசு கேட்டுப்போனேன், ஆனால் அப்படி செய்யாதீர்கள், படத்திற்கு அட்வான்ஸ் தருகிறேன், படம் செய்யலாம் என்றார். அவர் மனதளவில் மிக நல்ல மனிதர். என்னுடன் எப்போதும் ஜாலியாக பேசுவார். அவர் என்னிடம் இந்தப்படம் செய்யலாம் என்றார், எனக்கும் பிடித்திருந்தது என்றவுடன் உடனே செய்யலாம் என்றார். அவருடன் இணைந்து படம் செய்தது சந்தோஷம். படம் பார்க்க வருபவர்கள் சிரித்துவிட்டு போக வேண்டும் என்றார், தயாரிப்பாளராக இல்லாமல் தியேட்டர் ஓனராக  இப்படத்தை எடுத்துள்ளார்.

சுஷ்மிதா என் படம் மூலம் தயாரிப்பாளராக வந்துள்ளார், வாழ்த்துகள். இமான் இதுவரை என் படத்தில் இல்லாத கலரில் எனக்கு மிக வித்தியாசமான இசையை தந்துள்ளார், நன்றி. இயக்குநர் ஆனந்த் அருமையாக படத்தை எடுத்துள்ளார். தம்பி ராமையா சார் மாதிரி இண்டலிஜண்ட் பார்க்க முடியாது, அவருடன் பேசும்போது பிரமிப்பாக இருக்கும். அவர் இப்படத்தில் அருமையான பாத்திரம் செய்துள்ளார். ஹீரோயின் லயா நம்ம சேலத்துப் பெண், அவரை பாலிவுட் என நினைத்தேன் நன்றாக நடித்துள்ளார். என் படத்தில் எப்போதும் இருக்கும் மாறன், சேஷு, கூல் சுரேஷ், மனோபாலா என நிறைய பேர் இதிலும் இருக்கிறார்கள். ‘கட்டா குஸ்தி’ படம் ஹிட் தந்துவிட்டு இப்படத்தில் வந்து எங்களுக்காக உழைத்து தந்த செல்லா அய்யாவு சாருக்கு நன்றிகள். 90 கிட்ஸ் 2K கிட்ஸ் லைஃப் எப்படி இருக்கும் என்பது தான் இந்தப்படம். எல்லோரும் ரசிக்கும்படியான மேஜிக்காக இப்படம் இருக்கும். உங்கள் ஆதரவைத் தாருங்கள், நன்றி. 

தம்பி ராமையா, சேஷு, முனீஷ்காந்த், கூல் சுரேஷ், பால சரவணன், விவேக் பிரசன்னா, மாறன், சுவாமிநாதன் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய வேடங்களில் இப்படத்தில் நடித்துள்ளனர். அனைத்து இளைஞர்களும் ரசித்து கொண்டாடும் விதமாக சந்தானத்தின் கதாபாத்திரம் உருவாகியுள்ளது.

சந்தானத்தின் ஜோடியாக பிரியாலயா கதாநாயகியாக அறிமுகமாகிறார். D. இமானின் இசையில் பாடல்கள் மிக சிறப்பாக வந்துள்ளன. கதை, திரைக்கதை, வசனத்தை எழிச்சூர் அரவிந்தன் எழுதியுள்ளார். பல்வேறு வெற்றி படங்களுக்கு இவர் எழுத்தாளராக பங்காற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. பாடல் வரிகளை இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் முத்தமிழ் எழுதியுள்ளனர். ஒளிப்பதிவு – ஓம் நாராயண், எடிட்டிங் – எம். தியாகராஜன், 

கலை – எம். சக்தி வெங்கட்ராஜ், ஸ்டண்ட் – மிராக்கிள் மைக்கேல், பிரமாண்டமான பாடல் காட்சிகளுக்கு நடனம் அமைத்து இயக்கியுள்ளனர் கல்யாண் – பாபா பாஸ்கர். ‘இங்க நான் தான் கிங்கு’ திரைப்படத்தை ஆனந்த் நாராயண் இயக்கியுள்ளார். கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரித்துள்ளார். மே 10 அன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. 

சவுக்கு சங்கரை கைது செய்து கொண்டு சென்ற வாகனம் விபத்து!

காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக சமூகவலைதளங்களில் பேசியதாக எழுந்த புகாரில், யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஐபிசி பிரிவுகள் 294(பி), 509, 353 ஆகியவற்றின் கீழ் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 பிரிவு 67 இன் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது. இந்த நிலையில், தேனி மாவட்டத்தில் தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை நேற்று (மே.4) அதிகாலை கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார்  கைது செய்தனர்.

இதையடுத்து, தேனியில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கரை காவல்துறை வாகனம் மூலம் கோவைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக, தாராபுரம் ஐடிஐ சந்திப்பு அருகே காவல்துறை வாகனம் மீது, அவ்வழியாகச் சென்ற கார் ஒன்று மோதியதாகக் கூறப்படுகிறது.

இந்த விபத்தில் வாகனத்தில் இருந்த காவலர்களுக்கும், சவுக்கு சங்கருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து தாராபுரம் மருத்துவமனையில் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், அதிகாரிகள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, சவுக்கு சங்கர் கோவைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மே7ஆம் தேதி முதல் ஜூன் 31-ம் தேதி வரை இ-பாஸ்!

நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை சீசனின் நிலவி வருகிறது. இச்சமயங்களில் உள்நாடுகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தங்களது சொந்த வாகனங்களில் உதகைக்கு படையெடுத்து வருகின்றனர்.

இதனால் குறுகிய நகரமான உதகை நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் அதனை தடுக்கும் வகையில் வரும் மே7ஆம் தேதி முதல் ஜூன் 31-ம் தேதி வரை இ-பாஸ் பெற்று நீலகிரி மாவட்டத்திற்கு வர வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்களது வாகனங்களை இ-பஸ் பதிவு செய்த பின்னே மாவட்டத்திற்குள் வர வேண்டும் எனவும், வாகனத்தில் வரும் எத்தனை நபர்கள் என்று இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் எனவும் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

புதிய இணையதளம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும், இந்த இணையதளம் மூலம் இ-பாஸ் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் வாகனங்கள் எண்ணிக்கை குறித்த எந்தவிதமான தடையும் இல்லை எனவும், முறையாக இ-பாஸ் பெற்று வரும் அனைத்து வாகனங்களும் நீலகிரிக்கு வரலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

ஒப்புதல் தர லஞ்சம் கேட்ட 2 நீர்வளத்துறை அதிகாரிகள்!

மதுரை நாராயணபுரத்தை சேர்ந்தவர் சபீர் காசிம், 32 ஏற்றுமதி தொழில் செய்பவர். தபால்தந்தி நகரில் இவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம் உள்ளது. தங்கள் இடத்தில் கட்டுமான பணியை துவங்க ஒப்புதல் கேட்டு நீர்வளத்துறை பாசன உதவி பொறியாளர் மாயகிருஷ்ணன், 47, ஆய்வாளர் தியாகராஜன் ஆகியோரை அணுகினார்.

அவர்கள் ஒப்புதல் தர, 5 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டனர். முன்பணமாக, 1 லட்சம் ரூபாய் கேட்டனர். லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. சத்தியசீலனிடம் சபீர் காசிம் புகார் அளித்தார். போலீசாரின் அறிவுரை படி,  தல்லாகுளம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் மாயகிருஷ்ணன், தியாக ராஜனிடம் 1 லட்சம் ரூபாய் லஞ்சத்தை சபீர் காசிம் வழங்கினார். அப்போது, இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

பேஸ்புக்கில் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய கில்லாடிகள்! நடந்தது என்ன?!

சேலம் மாவட்டம் அய்யன் பெருமாள் பட்டியை சேர்ந்தவர் தொழிலதிபர் நித்தியானந்தம் (47). இவர் காற்றாலைகளுக்கு உதிரி பாகங்கள் சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், நெல்லை அருகே பொன்னாக்குடி பகுதியில் பெண் உட்பட ஐந்து பேர் சேர்ந்து நித்தியானந்தத்தை கடத்தி வைத்திருந்துள்ளதாக நித்தியானந்ததின் நண்பர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அக்கும்பலிடம் இருந்து நித்தியானந்தத்தை மீட்டு நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதாவது, நெல்லை பெருமாள் வரும் என் ஜிஓ காலனி சேர்ந்த பானுமதி(40) என்ற பெண் முகநூல் மூலம் நித்தியானந்தத்திடம் பழகி வந்துள்ளார். பின்னர், ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருக்கலாம் வாங்க என நெல்லைக்கு வரும்படி அழைத்துள்ளார். பானுமதியின் பேச்சை நம்பி நெல்லைக்கு வந்த நித்தியானந்தம் பெருமாள்புரம் பகுதிதியில் உள்ள ஒரு விடுதியில் வைத்து பானுமதியை தனியாக சந்தித்துள்ளார்.

திடீரென நான்கு பேர் கொண்ட கும்பல் அந்த அறைக்குள் நுழைந்துள்ளனர். இதனையடுத்து அப்பெண் தன்னை ஏமாற்றியுள்ளார் என நித்யானந்தத்திற்கு தெரியவந்துள்ளது. பானுமதி மற்றும் அவரது கூட்டாளிகளான தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வெள்ளத்துரை பார்த்தசாரதி, ரஞ்சித், சுடலை ஐந்து பேரும் சேர்ந்து கத்தி முனையில் நித்தியானந்தம் அணிந்திருந்த மூன்றரை பவுன் தங்க நகைகளை பறித்ததோடு ஏடிஎம் கார்டில் இருந்து 60,000 ஆன்லைன் பண பரிவர்த்தனை முறையில் 75,000 என ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து காசோலையில் கையெழுத்து வாங்கி 10 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து தரும்படி வங்கி ஒன்றிற்கு நித்தியானந்தத்தை அக்கும்பல் அழைத்து சென்றுள்ளது. பணம் தரவில்லை என்றால் தன்னை கற்பழித்து விட்டதாக போலீசாரிடம் புகார் அளித்து விடுவேன் என்று பானுமதி மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதற்கு ஒப்பு கொண்டு இவர், தனது பணத்தை இழந்தநிலையில், தனது நண்பரிடம் தான் ஏமாற்றப்பட்டது குறித்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, போலீசார் அதிரடியாக களத்தில் இறங்கி முப்பது நிமிடத்திற்குள் பானுமதி மற்றும் அக்கும்பலை சுற்றி வளைத்து நித்தியானந்தத்தை மீட்டுள்ளனர். இதனை தொடர்ந்து அக்கும்பலிடம் நடத்திய விசாரணையில் பானுமதி இது போன்று பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளம் மூலம் அரசு ஊழியர்கள் தொழிலதிபர்கள் என பல்வேறு நபர்களை ஏமாற்றி பல லட்சம் பணத்தை பறித்தது தெரியவந்துள்ளது.