Wednesday, February 19, 2025
Blog

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இச்சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் தமது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் காவலர் ஒருவர் பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பாலியல் தாக்குதலுக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அதே பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் மர்மநபர்கள் வலம் வருவதாக செய்திகள் வருகின்றன. பெண் காவலருக்கே பொது இடத்தில் இப்படியொரு கொடுமை நடக்கிறது என்றால், இந்த ஆட்சியில் பெண்களுக்கு எள்ளளவும் பாதுகாப்பு இல்லை என்பதே உண்மை.

பொது இடத்தில் நடைபெறும் பாலியல் அத்துமீறலும், ஆயுதக் கலாசாரமும் தனிப்பட்ட விஷயங்கள் என்று இந்த திமுக அரசு கடக்க முனைவது வன்மையாக கண்டிக்கதக்கது. இவையெல்லாம் சட்டம் ஒழுங்கில்தான் வரும் என்பதாவது முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியுமா? பெண் காவலர் மீது பாலியல் தாக்குதல் நடத்திய நபர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், தமிழகம் முழுக்க தலைதூக்கியுள்ள ஆயுதக் கலாசாரத்தை ஒடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

IIFC Hosts Retrospective on Late Filmmaker Balu Mahendra’s Legacy with Vels University  

Chennai:

Filmmaker Vetrimaaran’s International Institute of Film and Culture (IIFC), successfully hosted a four-day tribute to the cinematic legacy of late veteran filmmaker Balu Mahendra. Held in collaboration with Vels University (VISTAS) from February 13 to 16, 2025, the event featured a curated showcase of Mahendra’s iconic films, alongside in-depth discussions and retrospectives on his contributions to Indian cinema.  

The closing ceremony saw an illustrious gathering of industry stalwarts, including legendary music composer Ilaiyaraaja, Dr. Ishari K Ganesh, actors Rohini Molleti and Nizhalgal Ravi, Father Rajanayagam, and Akila Balu Mahendra. Their presence underscored the profound impact of Balu Mahendra’s work on the film industry and its ongoing cultural relevance. This initiative by IIFC and Vels University honored the visionary filmmaker’s artistry and aimed to inspire future generations of filmmakers and film enthusiasts.

Dr. Agarwal’s Health Care Limited’s Initial Public Offering!

Chennai: 

Dr. Agarwal’s Health Care Limited, a trusted brand in the eye care services industry and according to the CRISIL MI&A Report is India’s largest eye care service chain by revenue from operations for FY2024, has fixed the price band of ₹382/- to ₹402/-per Equity Share of face value ₹1/- each.

The Initial Public Offering (“IPO” or “Offer”) of the Company will open on Wednesday, January 29, 2025, for subscription and close on Friday, January 31, 2025. Investors can bid for a minimum of 35 Equity Shares and in multiples of 35 Equity Shares thereafter. The issue has an employee reservation portion of up to 1,579,399 equity shares and shareholders reservation of up to 1,129,574 equity shares.

The IPO is a mix of fresh issue of up to Rs 300 crore and an offer of sale up to 67,842,284 equity shares by Promoters, Investors, and Other Selling Shareholders. The proceeds from its fresh issuance to the extent of Rs 195 crore will be utilized for repayment/ prepayment in part or full of certain of its borrowings; and the balance proceeds will be utilized for general corporate purposes and unidentified inorganic acquisitions.

Dr. Agarwal’s Health Carprovides end-to-end comprehensive eye care services, including cataract, refractive and other surgeries; consultations, diagnoses and non-surgical treatments; and sells opticals, contact lenses and accessories, and eye care related pharmaceutical products through its network of 209 Facilities as of September 30, 2024. According to a CRISIL MI&A Report cited in its red herring prospectus, the company held about 25% of the total eye care service chain market in India as of FY2024.

As of September 30, 2024, the Company operates 193 facilities in India across 117 metro and non-metro cities spanning 14 states and four union territories, along with 16 facilities spread across nine countries in Africa. The Company operates through a hub-and-spoke and asset light operating model. According to the CRISIL MI&A Report, the Company has a diversified presence, with 70 facilities located in Tier-I cities and 123 facilities in other cities across India.

Dr. Agarwal’s Health Care, under the aegis of its Chairman, Dr. Amar Agarwal, who has over 35 years of clinical experience in the eye care services industry, has pioneered multiple surgical innovations in ophthalmology and has published several papers in reputed scientific journals globally. Some key surgical capabilities of Dr. Agarwal’s Health Care includes intraocular lens procedures, cornea transplantation, pinhole pupilloplasty, single pass four-throw pupilloplasty and LASIK surgeries.

Kotak Mahindra Capital Company Limited, Morgan Stanley India Company Private Limited, Jefferies India Private Limited, Motilal Oswal Investment Advisors Limited are the book-running lead managers, and KFin Technologies Limited is the registrar of the issue.

The Issue is being made through the book-building process, wherein not more than 50% of the issue shall be available for allocation on a proportionate basis to qualified institutional buyers, not less than 15% and 35% of the offer shall be available for allocation to non-institutional investors, and retail individual bidders respectively.

 Notes for Reference:

Issue Size of the IPO based on the upper and lower end of the price band

 

Fresh Issue   

O (67,842,284 equity shares)

Total

Lower Band (@Rs 382)

Rs 300 crore

Rs 2,591.58 crore

Rs 2,891.58 crore

Upper Band (@Rs 402)

Rs 300 crore

Rs 2,727.26 crore

Rs 3,027.26 crore

 

 

‘ஒத்த ஓட்டு முத்தையா’ விமர்சனம் RATING 2.9/5

சாய் ராஜகோபால் இயக்கத்தில் நடிகர் கவுண்டமணி, மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, வையாப்புரி, சந்தனபாரதி, சிங்கம் முத்து, மதுரை குமார், முத்துக்காளை, வாசன் கார்த்திக், அன்பு மயில்சாமி, கஜேஷ் நாகேஷ், ராஜேஸ்வரி, பிந்து, அபர்ணா, சாய் தன்யா, டெம்பிள் சிட்டி குமார், தாரணி, சென்ராயன், லேகா ஶ்ரீ, டி கே ஶ்ரீநிவாசன் என ஒரு பட்டாளமே நடித்துள்ள படம் தான் ‘ஒத்த ஓட்டு முத்தையா’

விமர்சனம்

அரசியல்வாதியாக இருக்கும் முத்தையா ஒரு ஓட்டு வாங்கி தோற்றதால் அவருக்கு ஒத்த ஓட்டு முத்தையா என்ற பெயர் வருகிறது. விடாமல் மீண்டும் அரசியலில் களம் இறங்குகிறார் கவுண்டமணி. இது ஒருபுறம் இருக்க தன் மனைவியின் தங்கைக்கு ஒரு அவல நிலை ஏற்படுகிறது. இந்த நிலை தனது தங்கைகளுக்கு ஏற்படக் கூடாது என்று நினைத்து தனது மூன்று தங்கைகளுக்கும் மூன்று மகன்கள் உள்ள ஒரே குடும்பம் வேண்டுமென்று திருமண அமைப்பாளரிடம் கூறுகிறார் முத்தையா. பிறகு தங்கைகளுக்கு எப்படிப்பட்ட வாழ்க்கை அமைந்தது? மீண்டும் களம் இறங்கிய கவுண்டமணியை மக்கள் ஓட்டு போட்டு வெற்றி பெற செய்தார்களா? என்பதே கதை….

அரசியல்வாதியாக வரும் கவுண்டமணி மக்களின் மறதியையும், அரசியல்வாதிகளின் ஊழல் திறமைகளையும் மக்களுக்கு தன் நடிப்பின் மூலம் புரிய வைக்க முயற்சி எடுத்திருக்கிறார். வருங்கால வாக்காளர்களுக்கு எது முக்கியம் என்றும் தனது வாக்கின் மூலம் திறமைமிக்க தலைவரை எப்படி? தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை இயக்குனர் சாய் ராஜகோபால் தனது கதையின் மூலம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

அரசியல் வசனங்கள் ரசிக்க வைக்கிறது. நீண்ட வருடங்களுக்கு அப்புறம் கவுண்டமணியோட கவுண்ட்டர் காமெடி இந்த வயதிலும் மாறாமல் இருக்கிறது. மதுரை குமார் காமெடி சிரிக்க வைக்கிறது. நிறைய அரசியல் வசனங்கள் இருக்கும் இத்திரைப்படத்தில் அரசியல் காட்சி வரும் போது ஒரு சில அரசியல்வாதிகளின் நினைவுகள் நமக்கு வந்து போகிறது.

ஆனால் நிறைய நகைச்சுவை பட்டாளங்கள் ஒன்று சேர்ந்து இருந்தாலும் சிறந்த நகைச்சுவை எதுவும் இல்லை என்றே சொல்லலாம். நகைச்சுவை வசனங்களில் கூடுதல் கவனம் தேவை.

மொத்தத்தில் இந்த ‘ஒத்த ஓட்டு முத்தையா’ அரசியல் சூதாட்டம்….

ராஜ் குமார் (சினிமா நிருபர்)

இரு தேர்வுக்கும் சேர்த்து ஒரே ஹால்டிக்கெட்!

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 3 முதல் ஏப்.15-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் பொதுத்தேர்வு தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம், அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பள்ளிக்கல்வித் துறை செயலர் பி.சந்திரமோகன், தமிழக பாடநூல் கழக மேலாண்மை இயக்குநர் பொ.சங்கர், பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், தேர்வுத்துறை இயக்குநர் ந.லதா, தொடக்கக் கல்வி இயக்குநர் பூ.ஆ.நரேஷ், தனியார் பள்ளிகள் இயக்குநர் மு.பழனிசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். 

கூட்டம் முடிவில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் விவரங்கள் வெளியிடப்பட்டன. அதன்படி பிளஸ் 2 தேர்வை 3 லட்சத்து 78,545 மாணவர்கள், 4 லட்சத்து 24,023 மாணவிகள், 18,344 தனித் தேர்வர்கள், 145 கைதிகள் என மொத்தம் 8 லட்சத்து 21,057 பேர் எழுதுகின்றனர். பிளஸ் 1 பொதுத் தேர்வை 3 லட்சத்து 89,423 மாணவர்கள், 4 லட்சத்து 28,946 மாணவிகள், 4,755 தனித்தேர்வர்கள், 137 கைதிகள் என மொத்தம் 8 லட்சத்து 23,261 பேரும் எழுதவுள்ளனர்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 4 லட்சத்து 46,411 மாணவர்கள், 4 லட்சத்து 40,465 மாணவிகள், 25,888 தனித்தேர்வர்கள், 272 கைதிகள் என 9 லட்சத்து 13,036 பேர் எழுத இருக்கின்றனர். ஒட்டுமொத்தமாக 10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை 25 லட்சத்து 57,354 பேர் எழுதுகின்றனர். பொதுத்தேர்வுக்காக 11, 12-ம் வகுப்புகளுக்கு 3,316 மையங்களும், 10-ம் வகுப்புக்கு 4,113 மையங்களும் அமைக்கப்பட உள்ளன. இதுதவிர தேர்வு கண்காணிப்பு சிறப்பு படைகள், தேர்வறை கண்காணிப்பாளர்கள் விவரங்களையும் தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:

பொதுத் தேர்வு என்பது தேர்தலுக்கு சமமானதாகும். இது பல லட்சம் மாணவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்டது. தேர்வெழுத வரும் மாணவர்கள் பதற்றத்தை தவிர்த்து, மகிழ்ச்சியான மனநிலையில் வர வேண்டும். நமது மாணவர்களின் கல்வி நிலை குறித்து தவறான தரவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதற்கு தீர்வாக 10 லட்சம் மாணவர்களிடம் ஆய்வு செய்து தரவுகளை வெளியிட திட்டமிட்டு இருக்கி ம். மாநில திட்டக்குழு இந்த அறிக்கையை வெளியிடும். அப்போது நமது தமிழக மாணவர்களின் நிலை தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள தனித் தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட் இன்று (பிப்.14) மதியம் வெளியிடப்பட உள்ளது. இதையடுத்து தேர்வர்கள் www.dge.tn.gov.in எனும் வலைதளத்தில் ஹால்டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், பிளஸ் 1 (அரியர்) மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதவுள்ள தனித்தேர்வர்களுக்கு இரு தேர்வுக்கும் சேர்த்து ஒரே ஹால்டிக்கெட் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

பூந்தமல்லியில் உள்ள பார்வைத்திறன் குறைபாடுள்ளோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர் ஆனந்த், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை கணினிவழியில் எழுத விருப்பம் தெரிவித்திருந்தார். அவரின் விருப்பத்தை ஏற்று வாசிப்பாளர் உதவியுடன் கணினி வழியில் அவர் தேர்வெழுத தேர்வுத்துறை அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் பொதுத்தேர்வை கணினி வழியில் எழுதும் முதல் மாணவராக இவர் விளங்குவார். வரும் காலங்களில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் தாமாகவே தேர்வெழுத இந்த நிகழ்வு சிறந்த முன்மாதிரியாக விளங்கும் என்று பள்ளிக்கல்வித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ரஜினிகாந்த் இன்றும் இப்படித்தான் இருக்கிறார்- கே. எஸ். ரவிக்குமார்

ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘டிராகன்’ படத்தின் ப்ரீ-ரிலீஸ் ஈவென்ட் தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் ‘யங் ஸ்டார்’ பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி பிப்ரவரி 21ம் தேதி  திரையரங்குகளில் வெளியாகும் ‘டிராகன்’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முன்னரான விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.‌

‘ஓ மை கடவுளே’ புகழ் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘டிராகன்’ திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், கே.எஸ். ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், விஜே சித்து, ஹர்ஷத் கான், மரியம் ஜார்ஜ், இந்துமதி மணிகண்டன், தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்ய லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருக்கிறார். இன்றைய இளைய தலைமுறையினரின் வாழ்வியலை மையப்படுத்திய இந்தத் திரைப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். அர்ச்சனா கல்பாத்தி கிரியேட்டிவ் புரொடியூசராக பணியாற்றியிருக்கிறார்.

வரும் 21ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘டிராகன்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி 1.3 கோடிக்கும் மேற்பட்டவர்களால் பார்வையிடப்பட்டு, படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு எகிறியிருக்கும் நிலையில், படத்தை மேலும் ரசிகர்களிடம்  சென்றடையச் செய்யும் வகையில் சென்னையிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் வெளியீட்டிற்கு முன்னரான பிரத்யேக நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக் குழுவினர் கலந்து கொள்ள இயக்குநர் விக்னேஷ் சிவன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

விக்னேஷ் சிவன் பேசுகையில்:

”திரைப்பட விழாவிற்கு வருகை தந்தது போல் இல்லை. பிரதீப், அஸ்வத், அர்ச்சனா மேடம் என இங்கு என்னுடைய நண்பர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள். பிரதீப்புடன் இணைந்து ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’  திரைப்படத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். இந்தப் படத்திற்காக அவரை சந்திக்கும் போது நான் என்னுடைய திரையுலக பயணத்தில் கடினமான சூழலில் இருந்தேன். இருந்தாலும் உடனடியாக என்னை அழைத்து நான் சொன்ன கதையை கேட்டு நடிக்க ஒப்புக்கொண்டார். அதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். திரையுலகில் திறமையான நடிகர்கள் இருப்பார்கள். நட்சத்திர நடிகர்கள் இருப்பார்கள். ஆனால் சிலரை மட்டும் தான் நாம் தொடர்ச்சியாக பின்பற்றுவோம். அவர்களுடைய உடல் மொழி, நடிப்பு, திரை உலகம் சார்ந்த பணிகள்.என சில நடிகர்களை தொடர்ந்து கவனித்து வரும் போது தான் நாம் அவர்களுடைய ரசிகர்களாக மாறி விடுவோம். இதைப்போல் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் அவர்கள் நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்ந்து விடுவார்கள்.‌ அந்த வகையில் பிரதீப் ரங்கநாதன் தற்போது நடிகராக இருந்து நட்சத்திர நடிகர் என்ற அந்தஸ்துக்கு உயர்ந்திருக்கிறார். அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள். அவர் ஒரு கதாபாத்திரத்தை ஏற்று அவருடைய ஸ்டைலில் நடிக்கும் போது அதை ரசிக்கும் கூட்டம் உண்டு. இதன் எண்ணிக்கை அடுத்தடுத்து அவர் நடிப்பில் உருவாகும் படங்கள் வெளியான பிறகு அதிகரிக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன். இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து- ஈகோ இல்லாத எளிமையாய் பழகக்கூடிய இனிய நண்பர்.‌ அவருடன் இணைந்து பணியாற்றும் போது எளிதாக இருந்தது. இந்த படத்தின் பாடல்களை எழுதும் போதும் மறக்க முடியாத அனுபவங்கள் உண்டு. இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றியும், வாழ்த்தும் தெரிவித்துக் கொள்கிறேன். பொதுவாக ஒவ்வொரு படத்திற்கும் பாடல்களை எழுதும் போது  இதயப்பூர்வமாக எழுதுவேன். சில பாடல்களை உணர்வுப்பூர்வமாக சிந்தித்து எழுதுவேன். நான் முதன்முதலில் பாடல் எழுதும் போது, ‘வரிகள் நன்றாக இருக்கிறது. தொடர்ந்து எழுது’ என என்னை சிலம்பரசன் தான் ஊக்கப்படுத்தினார். அதன் பிறகு ஒவ்வொரு பாடல் எழுதும் போதும் பாடல் வரிகள் மீது கவனம் செலுத்தி வருகிறேன். அந்த வகையில் இந்தப் படத்திற்கு பாடல் எழுத வாய்ப்பு கொடுத்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும், இசையமைப்பாளருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ‘டிராகன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அனைவரும் 21ம் தேதி அன்று திரையரங்கத்திற்கு வருகை தந்து ஆதரவு தரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

இயக்குநர் மிஷ்கின் பேசுகையில்:

”இன்று நான் எந்த கெட்ட வார்த்தையையும் பேச மாட்டேன். ஒரு வருடம் வரை எந்த நிகழ்விலும் கலந்து கொள்ளக் கூடாது என்று நினைத்திருந்தேன். ஆனால் தயாரிப்பாளர் அகோரம் சார், அர்ச்சனா மற்றும் ஐஸ்வர்யா ஆகிய மூவர் மீது வைத்திருக்கும் அன்பின் காரணமாகத்தான் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறேன். அர்ச்சனா மற்றும் ஐஸ்வர்யா என இருவரும்.. அவர்கள் தயாரிக்கும் படங்களின் வெற்றிக்காக கடுமையாக உழைத்து வருகிறார்கள். அவர்கள் மேலும் தொடர்ந்து வெற்றியை பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். பிரதீப், புரூஸ் லீ போன்றவர். அவர் இதுவரை ஆக்ஷன் படங்களில் நடிக்கவில்லை. ஒரு வேளை என்னுடைய இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கலாம். நீண்ட நாள் கழித்து திரையுலகில் நான் ஒரு யங் ஸ்டாராக பிரதீப்பை பார்க்கிறேன். அவர் ஒரு பிரைட்டஸ்ட் ஸ்டார். அவர் இதற்காக கடுமையாக உழைக்கிறார், உழைத்து வருகிறார்.‌ இந்தப் படத்தில் நான் தான் அவருக்கு வில்லன். ஆனால் நல்ல வில்லன். படப்பிடிப்பு தளத்தில் நானும், அவனும் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படும் போது அவனுடைய அர்ப்பணிப்பை கவனித்து பிரமித்தேன். இயக்குநருக்கான நடிகராக இருக்கிறார். நானும் ஒரு இயக்குநர் என்பதால் இதனை என்னால் உறுதியாக கூற முடிகிறது. இதற்காக நான் அவரை மனதார பாராட்டுகிறேன்.  கேரக்டருக்காக தன்னை தயார்படுத்திக் கொண்டே இருக்கிறார். நடிக்கும் போது அவரிடம் ஒரு தனித்துவமான உணர்வு வெளிப்படுகிறது. இது அவரை மேலும் உயரத்திற்கு அழைத்துச் செல்லும். அவருக்கு தொடர்ந்து வெற்றிகள் குவியும். இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து படப்பிடிப்பு தளத்தில் கடுமையாக உழைப்பவர். அவர் இயக்கிய இந்த படம் மிக எளிதாக பெரிய வெற்றியை பெறும். ஏனெனில் இந்தக் கால இளைஞர்களுக்கான ஒரு நீதியை அவர்கள் விரும்பும் ஸ்டைலில் சொல்லி இருக்கிறார். இது ஒரு எளிமையான கதை அல்ல. வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான உந்துதலை வழங்கும் படமாக இருக்கிறது. இதற்காக அவருக்கு நான் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். கல்லூரியில் படிக்கும் இளைஞன் எப்படி இருக்க வேண்டும் என்பதை அவருடைய வாழ்க்கையில் நடைபெற்ற அனுபவத்தின் மூலமாக விவரித்திருக்கிறார். சொன்ன விதமும் உற்சாகத்துடன் இருக்கும். அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது.‌ அவரும் மிக திறமையான படைப்பாளி. இன்னும் கூடுதல் உயரத்திற்கு செல்ல வேண்டும் என வாழ்த்துகிறேன்,” என்றார்.

இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார் பேசுகையில்:

”இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து குறித்து மிஷ்கின் சொன்னது உண்மைதான். படப்பிடிப்பு தளத்தில் அவர் மிகவும் கறாரான பேர்வழி. ஆனால் ஒருபோதும் சோர்வடையாமல் உற்சாகமாக பணியாற்றிக் கொண்டே இருப்பார். படப்பிடிப்பு தளத்தில் நடிக்கும் அனைத்து கலைஞர்களிடமும் காட்சிகளைப் பற்றி விரிவாக விளக்கம் அளிப்பார். நான் தற்போது ஏராளமான புதுமுக இயக்குநர்களுடன் தான் இணைந்து பணியாற்றுகிறேன். ஒவ்வொருவரிடமிருந்தும் ஒவ்வொரு விஷயங்களை கற்றுக் கொள்கிறேன். இந்தப் படத்திலும் படப்பிடிப்பு தளத்தில் இவர் என்னைப் போல் அல்லாமல் அமைதியாக பணிபுரிந்தார். இவருக்கு பதிலாக ஒளிப்பதிவாளர் படப்பிடிப்பு தளத்தில் உரத்த குரலில் ஆணையிட்டுக் கொண்டிருந்தார். அப்போது தான் இனிமேல் நாமும் படப்பிடிப்பு தளத்தில் உரத்த குரலில் பேசுவதை விட ஒளிப்பதிவாளரை பேசவிட வேண்டும் என கற்றுக் கொண்டேன். இருந்தாலும் அஸ்வத் கடின உழைப்பாளி. அவர் கதை சொன்ன விதம் நன்றாக இருந்தது. சொல்வதில் புதிய அம்சங்கள் இருந்தது. அதில் ஒரு இயற்கையான உணர்வும் இருந்தது. இந்தத் திரைப்படத்தில் அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் வகையில் பொழுது போக்கு அம்சங்களும் இருக்கின்றன. இதற்காக இயக்குநர் அஸ்வத்திற்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். ஏ.ஜி.எஸ் தயாரிப்பாளர்களை நீண்ட நாட்களாகவே எனக்கு தெரியும். அவரகளை நான் தூரத்தில் இருந்தே ரசிக்கிறேன். அவர்களின் தயாரிப்பில் வெளியாகும் படங்கள் ஒவ்வொன்றும் தரமானதாகவும், வெற்றி பெறக் கூடியதாகவும் இருக்கிறது. அந்த வரிசையில் இந்த படமும் இணையும். நடிகர் பிரதீப் இயக்கத்தில் உருவான ‘கோமாளி’ படத்தில் நானும் நடித்திருந்தேன். அந்தப் படத்தில் கடுமையாக உழைத்துக் கொண்டே இருப்பார். சாப்பிட கூட பல தருணங்களில் மறந்து விடுவார். இதுகுறித்து அப்படத்தின் நாயகனான ரவியுடனும் பேசி இருக்கிறேன்.‌ ஆனால் இந்தப் படத்தில் அதற்கு நேர் எதிராக இருக்கிறார். இந்த படத்தில் சரியாக சாப்பிடுகிறார். ஆனால் இடைவேளை இல்லாமல் பணியாற்றுகிறார். பிரதீப்பின் நடிப்பு தொடர்பாக இயக்குநர் மிஷ்கின் சொன்ன ஒரு விசயம் உண்மைதான். அவர் இயக்குநர்களின் நடிகர். படப்பிடிப்பு தளத்திற்கு நேரம் தவறாமல் வருவது, இயக்குநரின் கண் பார்வை செல்லும் இடத்தில் நிற்பது, இயக்குநர் என்ன சொன்னாலும் சரி என ஒப்புக் கொள்வது, என பல நல்ல விஷயங்கள் பிரதீப்பிடம் இருக்கிறது. பெருமைக்காக சொல்லவில்லை. 50 ஆண்டுகளுக்கு பிறகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்றும் இப்படித்தான் இருக்கிறார். ரஜினி சார் திரைக்கதை விவாதத்தின் போது தான் கலந்து கொண்டு ஆலோசனைகளை கூறுவார். ஆனால் படப்பிடிப்பு தளத்திற்கு வந்துவிட்டால் இயக்குநர் என்ன சொல்கிறாரோ அதனை அப்படியே ஏற்றுக் கொண்டு நடிப்பார். அவர் செய்து கொண்டிருப்பதை தான் பிரதீப்பும் செய்கிறார். இதனை அவர் தொடர்ந்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். நடிகராக இருந்தாலும் படம் இயக்குவதை தவிர்த்து விட வேண்டாம். படத்தை இயக்குவதிலும் கவனம் செலுத்துங்கள் பிரதீப். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்,” என்றார்.

நடிகை கயாடு லோஹர் பேசுகையில்:

”இது எனக்கு முதல் மேடை. சற்று பதற்றமாக இருக்கிறது. இந்த விழாவிற்காக நேரம் ஒதுக்கி வருகை தந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நடுத்தர குடும்பத்தில் பிறந்து சிறிய வயதில் நடிகை ஸ்ரீதேவியின் நடனத்தாலும், நடிப்பாலும் ஈர்க்கப்பட்டு நடிகையாக வேண்டும் என்று கனவு கண்டு, இன்று இந்த மேடையில் நிற்கிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் சகோதரர்களுக்கு  நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். முதல் நாள் படப்பிடிப்பின் போது எனக்கும் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவுக்கும் சிறிய அளவில் தவறான புரிதல் இருந்தது. அவர் கடுமையான உழைப்பாளி. பொறுமை மிக்க இயக்குநர்.‌ என் மீது நம்பிக்கை வைத்து எனக்கான கேரக்டரை வடிவமைத்திருந்தார். பிரதீப் ஒரு இன்ட்ரோவர்ட் பர்சன்.  ஆனால் படப்பிடிப்பு தளத்தில் அவருடன் பழகும் போது தான் அவர் ஒரு கதாசிரியர், இயக்குநர், நடிகர் என பன்முக ஆளுமை மிக்க திறமைசாலி என தெரியவந்தது. நட்புணர்வு மிக்கவர்.  அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. தற்போது அவர் என்னுடைய இனிய நண்பராக மாறிவிட்டார். இதற்காகவும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குநர்கள் ரவிக்குமார் – கௌதம் வாசுதேவ் மேனன் போன்றவர்களுடன் இணைந்து பணியாற்றிய அனுபவமும் மறக்க முடியாது. அவர்களின் இயக்கத்தில் நடிக்கவும் விரும்புகிறேன். தமிழ் மக்கள் என் மீது அன்பு செலுத்துகிறார்கள். இதற்காக அவர்களுக்கு எப்போதும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 21ம் தேதி அன்று ரசிகர்களை திரையரங்குகளில் சந்திக்கிறேன்,” என்றார்.

இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் பேசுகையில்:

”இந்த மேடையில் நிற்பதற்கு சந்தோஷமாக இருக்கிறது. இந்த வாய்ப்பை அளித்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் டிராகன் திரைப்படத்தில் பணியாற்ற காரணமாக இருந்த என்னுடைய இனிய நண்பர் அஸ்வத் மாரிமுத்துவுக்கும் நன்றி. அஸ்வத் மாரிமுத்து இந்த கதையை என்னிடம் முதன்முதலாக சொல்லும் போதே நான் வியந்து விட்டேன். இன்று முழு திரைப்படத்தையும் பார்க்கும் போது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.  என்னுடைய திரையுலக பயணத்தில் ‘டிராகன்’ ஃபேவரிட் ஆன படம் என உறுதியாக சொல்வேன். படம் பார்க்கும்போது எனக்கு ஏற்பட்ட உணர்வு ரசிகர்களுக்கும் ஏற்படும் என நம்புகிறேன். இந்தப் படத்தின் இடம் பெற்ற பாடல்கள் வெளியான போது கிடைத்த வரவேற்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதற்காக பணியாற்றிய பாடலாசிரியர்கள், பாடகர்கள், பாடகிகள், இசைக் கலைஞர்கள்  என அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

கிரியேட்டிவ் புரொடியூசர் அர்ச்சனா கல்பாத்தி பேசுகையில்:

”இது எங்கள் ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் 26வது திரைப்படம். ரொம்ப ஸ்பெஷலான படம். ஒவ்வொரு தயாரிப்பு நிறுவனத்திற்கும் பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படங்களை தொடர்ந்து கொடுக்க வேண்டும் என்பது இலக்காக இருக்கும். அதே தருணத்தில் அர்த்தமுள்ள படைப்புகளை வழங்க வேண்டும் என்ற கனவும் இருக்கும்.  வெற்றியும், கனவும் இணைந்து ஒரு படத்தை கொடுக்க வேண்டும் என்றால் அது கடினம். ஆனால் அது போன்றதொரு கமர்ஷியல் அம்சங்களும், கனவுகளும் இணைந்த படம்தான் ‘டிராகன்’. இந்தப் படத்தை முதலில் பார்த்துவிட்டு இயக்குநருக்கு வாழ்த்து தெரிவித்தேன். இந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.ஒரு திரைப்படம் தயாராவது எளிதல்ல, அதன் பின்னணியில் மிகப்பெரிய குழுவினரின் கடின உழைப்பு இருக்கும்.

A Decade of Empowerment: Celebrating the Tenth Edition of the Sakthi Awards

Puthiya Thalaimurai TV is proud to launch the 10th Edition of the Sakthi Awards, a prestigious platform celebrating the achievements of women. Over the past decade, the Sakthi Awards have been committed to honoring women who have redefined boundaries and contributed significantly to society in diverse fields.
 
We celebrate the exceptional contributions of women across Tamil Nadu in six distinct categories: Ability, Knowledge, Courage, Leadership, Benevolence, and Lifetime Achievement. These awards recognize individuals who have gone above and beyond, transforming not only their lives but also the lives of others, leaving an indelible mark on society.
 
The Sakthi Awards 2025 promise to be bigger and more inspiring, as we come together to honor the incredible women who have not only inspired but also redefined the future. The essence of 10th edition lies in the theme ‘Accelerate actions towards achieving gender equality’ —a heartfelt reminder that only through collective efforts can we create a world where fairness and inclusion are not just ideals but realities.
 
Join us for the Decennial Anniversary of the Sakthi Awards, scheduled on 15th February 2025 at 6 PM at the Chennai Trade Centre. We as trusted News leader in Tamil Nadu believe that the Sakthi Awards will continue to inspire countless women, fostering a brighter and more inclusive future.

‘தினசரி’ விமர்சனம் RATING 2.9/5

ஜி. சங்கர் இயக்கத்தில் சிந்தியா புரொடக்ஷன் ஹவுஸ் தயாரிப்பில், இசைஞானி இளையராஜா இசையில் ஸ்ரீகாந்த், சிந்தியா லூர்து, பிரேம்ஜி அமரன், எம்.எஸ்.பாஸ்கர், சாம்ஸ், மீரா கிருஷ்ணன், ராதாரவி, வினோதினி வைத்தியநாதன் ஆகியோர் நடித்துள்ள படம் தான் ‘தினசரி’

விமர்சனம்:

நாயகன் ஸ்ரீகாந்த் நன்றாக படித்து ஐடி கம்பெனியில் வேலை செய்கிறார். அவர் தன்னைவிட அதிகம் சம்பளம் வாங்கும் பெண்ணையே திருமணம் செய்ய நிபந்தனைகள் போடுகிறார். அவர் நிபந்தனையை ஏற்க முடியாமல் அவரது திருமணம் தடைபட்டுக் கொண்டே வருகிறது. தன் குடும்பமே தன்னை ஏமாற்றி திருமணம் செய்து வைத்திருக்கிறது என்று தெரிந்த அவர் மனமுடைந்து போகிறார். ஆடம்பர வாழ்க்கைக்கும் பகட்டு கௌரவத்திற்கும் ஆசைப்பட்டு தன் தாய் தந்தை சொல்லையும் மீறி கடன் வாங்கி தனது பேராசையால் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். பிறகு வாங்கிய கடனை திருப்பி செலுத்துகிறாரா? இல்லையா? என்பதே கதை….

பண பேராசையால் எப்படி எல்லாம் மக்கள் துன்பப்படுகிறார்கள் என்பதைப் பற்றி கதை கூறுகிறது. ‘போதும் என்ற மனமே பொன் செய்யும் மனம்’ என்ற பழமொழிக்கு ஏற்ப வாழ வேண்டும் என்பதை உணர்த்துகிறது படம். அம்மாவாக வரும் மீரா கிருஷ்ணன் ஒற்றை ஆளாக வீட்டில் நடக்கும் காட்சிகளைத் தூக்கிச் சுமக்கிறார். இளையராஜாவின் இசை ஓகே. படத்தில் நடித்த ஸ்ரீகாந்த், சிந்தியா லூர்து, பிரேம்ஜி அமரன், எம்.எஸ்.பாஸ்கர், சாம்ஸ், மீரா கிருஷ்ணன், ராதாரவி, வினோதினி என அனைவரும் தனக்கு கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். கதை தெளிவாக இல்லை…. சண்டைக்காட்சிகளில் கூடுதல் கவனம் தேவை….

மொத்தத்தில் இந்த ‘தினசரி’ பேராசை….

ராஜ்குமார் (சினிமா நிருபர்)

‘பயர்’ முதல் பாதி விறுவிறுப்பு…. இரண்டாம் பாதி பிசுபிசுப்பு…. RATING 2.9/5

தயாரிப்பாளர் மற்றும் நடிகர் JSK சதீஷ் இயக்கத்தில் பாலாஜி முருகதாஸ், சாந்தினி தமிழரசன், சாக்ஷி அகர்வால், ரச்சிதா மகாலட்சுமி, காயத்ரி ஷான், ஜேஎஸ்கே சதீஸ், சிங்கம்புலி, எஸ்.கே.ஜீவா, சுரேஷ் சக்ரவர்த்தி, அனு விக்னேஷ், குழந்தை மனோஜ் ஆகியோர் நடித்துள்ள படம் தான் ‘பயர்’.  தற்போது சிறையில் இருக்கும் காசியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தை இயக்கியுள்ளார் JSK சதீஷ்.

விமர்சனம்:

நாகர்கோவிலில் காசி என்ற இளைஞர் பிசியோதெரபி மருத்துவர். இவர் பல இளம் பெண்களை காதலித்து ஏமாற்றி அவர்களின் அந்தரங்க வீடியோக்களை வைத்து மிரட்டி பணம் பறித்து வருகிறார். திடீரென்று காசி காணாமல் போகிறார். உடனே அவரது பெற்றோர்கள் காவல்துறையில் புகார் கொடுக்கிறார்கள். சரவணன் என்ற ஆய்வாளர் குழு விசாரணையை தொடங்குகிறது. இதில் பல திடுக்கிடும் தகவல்கள் விசாரணையில் தெரிய வருகிறது. இதற்கிடையில் அமைச்சர் ஒருவர் அந்த விசாரணை வளையத்தில் சிக்குகிறார். பிறகு என்ன நடந்தது?  காசியை காவல்துறை ஆய்வாளர் கண்டுபிடித்தாரா? இல்லையா என்பதே கதை….

மருத்துவர் கதாபாத்திரத்தில் பாலாஜி முருகதாஸ் ஏமாற்றும் நடிப்பு ஓகே. படத்தில் சாந்தினி தமிழரசன், சாக்ஷி அகர்வால், ரச்சிதா மகாலட்சுமி, காயத்ரி ஷான், சிங்கம் புலி, சுரேஷ் சக்கரவர்த்தி என அனைவரும் தனக்கு கொடுத்த வேலையை செய்துள்ளனர். இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஜேஎஸ்கே சதீஷ் ஒரு போலீஸ் அதிகாரியாக தனது விசாரணையை தெளிவாக தொடங்கியிருக்கிறார். பெண்கள் பிசியோதெரபி மருத்துவமனைக்கு செல்லும் போது மருத்துவரிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று படம் சொல்லுகிறது. ஆனால் கிளைமேக்ஸ் சட்டத்தை மீறி விட்டது.

முதல் பாதி விறுவிறுப்பு…. இரண்டாம் பாதி பிசுபிசுப்பு…. 

மொத்தத்தில் இந்த ‘பயர்’ பத்திட்டு  அணையும்……

நட்பு என்றால் நட்பு …! வேலை என்றால் வேலை..!- பிரதீப் ரங்கநாதன் பேச்சு

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் தயாராகி, வரும் 21ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘டிராகன்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. 
 
‘ஓ மை கடவுளே’ புகழ் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘டிராகன்’ திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், கே. எஸ். ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், வி ஜே சித்து, ஹர்ஷத் கான், மரியம் ஜார்ஜ், இந்துமதி மணிகண்டன், தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருக்கிறார். இன்றைய இளைய தலைமுறையினரின் வாழ்வியலை மையப்படுத்திய இத்திரைப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். அர்ச்சனா கல்பாத்தி கிரியேட்டிவ் புரொடியூசராக பணியாற்றியிருக்கிறார். 
 
படத்தின் முன்னோட்டம் வெளியானதை தொடர்ந்து சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் கிரியேட்டிவ் புரொடியூசர் அர்ச்சனா கல்பாத்தி, இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, இயக்குநர்-நடிகர் பிரதீப் ரங்கநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். வருகை தந்திருந்த பத்திரிகையாளர்களை ஏஜிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரங்கராஜ் வரவேற்றார்.
 
இதனைத் தொடர்ந்து கிரியேட்டிவ் புரொடியூசர் அர்ச்சனா கல்பாத்தி பேசுகையில், ”எங்கள் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘திருட்டுப்பயலே’ படத்திலிருந்து தற்போது உருவாகி இருக்கும் ‘டிராகன்’ திரைப்படம் வரை தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து ஊடகங்களுக்கும், முதலில் எங்களின் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ‘டிராகன்’ எங்களுக்கு ஒரு முக்கியமான படம். என்னுடைய ஃபேவரைட்டான படமும் கூட என்று சொல்லலாம். இந்தப் பயணம் முழுவதும் மகிழ்ச்சியாக இருந்தது. பிரதீப் ரங்கநாதனுடன் இரண்டாவது முறையாக இணைந்திருக்கிறோம். இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவுடன் முதல் முறையாக பணியாற்றி இருக்கிறோம். நல்லதொரு உள்ளுணர்வுடன் டிராகனை தயாரித்திருக்கிறோம். படத்தின் முன்னோட்டத்தை பார்த்திருப்பீர்கள். இதைவிட படத்தில் நிறைய நல்ல அம்சங்கள் இருக்கின்றன. படத்தைப் பார்த்து அனைவரும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
 
இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து பேசுகையில், ”தமிழில் இது என்னுடைய இரண்டாவது படம். ஓ மை கடவுளே படத்திற்குப் பிறகு ஐந்தாண்டுகள் கழித்து மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறேன். ‘ஓ மை கடவுளே’ படத்திற்கு ஊடகங்கள் வழங்கிய ஆதரவு காரணமாக அந்த படம் வசூல் ரீதியாக வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்திற்குப் பிறகு நான்  தெலுங்கு திரையுலகில் பணி புரிந்தேன். மீண்டும் இங்கு வந்து இப்படத்தை இயக்கி இருக்கிறேன். 
 
‘ஓ மை கடவுளே’ படத்தில் சமூக பொறுப்புடன் கூடிய விஷயங்கள் இருந்தது போலவே, சமூக பொறுப்புடன் ‘டிராகன்’ திரைப்படத்திலும் பல விஷயங்களை சொல்லி இருக்கிறோம். ஒரு இயக்குநராக ‘டிராகன்’ படத்தில் என்ன சொல்ல வந்திருக்கிறோம் என்பதில் பத்து சதவீதம் தான் முன்னோட்டத்தில் இடம் பிடித்திருக்கிறது.   திரையரங்கத்திற்கு வருகை தரும் ரசிகர்களுக்கு எதிர்பாராத வகையில் நல்லதொரு அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதற்காக  ஏனையவற்றை மறைத்திருக்கிறோம்.
 
நான் சொன்ன கதையை நம்பி ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர்கள் மற்றும் கிரியேட்டிவ் புரொடியூசர் அர்ச்சனா மேடம் ஆகியோர் வாய்ப்பளித்திருக்கிறார்கள். அதற்காக முதலில் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌ இந்த படத்தை உருவாக்குவதற்கு எனக்கு முழு சுதந்திரத்தை வழங்கினார்கள். நான் சொல்ல நினைத்ததை திரையில் உருவாக்குவதற்கு ஆதரவளித்த அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 
 
படத்தின் நாயகனான பிரதீப் ரங்கநாதனுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் இருவரும் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நண்பர்கள் என்று அனைவருக்கும் தெரியும். இந்த படத்திற்கான அடித்தளத்தை பத்தாண்டுகளுக்கு முன் நாங்கள் பேசி இருக்கிறோம். அதன் பிறகு அது குறித்து நிறைய கனவு கண்டோம். இன்று அதனை திரையில் கொண்டு வந்திருக்கிறோம் இதற்காக நாங்கள் எங்களை தகுதிப்படுத்திக் கொண்டிருக்கிறோம். 
 
பிரதீப் ரங்கநாதன் எனும் என்னுடைய நண்பனை இந்த திரைப்படத்தில் நான் இயக்கவில்லை. ‘லவ் டுடே’ எனும் நூறு கோடி ரூபாய் வசூல் செய்த நட்சத்திர நடிகரான பிரதீப் ரங்கநாதனை தான் நான் இயக்கியிருக்கிறேன். இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்று நம்புகிறேன். இருவரும் நண்பர்கள் என்ற எல்லையை கடந்து தொழில் ரீதியாக நேர்த்தியாக உழைத்திருக்கிறோம். அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் என உறுதியாக நம்புகிறேன்.  ரசிகர்களுடன் திரையரங்கத்தில்  சந்திப்போம்,” என்றார். 
 
இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் பேசுகையில், ”திரையுலகில் ஊடகங்களும் மக்களும் எனக்கு வழங்கியிருக்கும் இந்த இடத்தை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். இதற்காக ஊடகத்தினருக்கும் மக்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 
 
‘லவ் டுடே’ படத்திற்குப் பிறகு என்ன மாதிரியான கதைகளை தேர்வு செய்வது என்பதில் குழப்பம் இருந்தது. ஏனெனில் என் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அதுபோன்ற தருணத்தில் தான் எனக்கு ‘டிராகன்’ படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஏஜிஎஸ் நிறுவனத்துடன் இரண்டாவது முறையாக இணைந்து பணியாற்றுகிறேன். ‘லவ் டுடே’ படத்தின் மூலம் என்னை கதையின் நாயகனாக ஏஜிஎஸ் நிறுவனம் தான் அறிமுகப்படுத்தியது. அதற்காக அந்த நிறுவனத்திற்கு நான் என்றென்றும் நன்றியை தெரிவித்துக் கொண்டே இருப்பேன். 
 
‘ஓ மை கடவுளே’ எனும் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த இயக்குநருடன் இணைந்து, அவருடைய இரண்டாவது படத்தில் பணியாற்றியது மகிழ்ச்சியை அளிக்கிறது.  இதற்கு பிறகு தான் என்னுடைய 10 ஆண்டுகால நண்பரின் இயக்கத்தில் நடிக்கிறேன் என சொல்லலாம்.
 
நாங்கள் இருவரும் நட்பையும், தொழிலையும் தனித்தனியாக பிரித்து வைத்து தான் பழகுகிறோம். அதனால் நட்பு என்றால் நட்பு …! வேலை என்றால் வேலை..!  இதில் எந்த குறுக்கீடும் இருக்காது. இந்தப் படம் அற்புதமாக வந்திருக்கிறது. தொடர்ந்து அனைத்து தரப்பினரின் ஆதரவும் கிடைக்கும் என உறுதியாக நம்புகிறேன்,” என்றார். 
 
‘டிராகன் ‘ படத்தின் முன்னோட்டத்தில் இடம்பெறும் காட்சிகளில் இளமை குறும்பு – கல்லூரியில் சீனியர் மாணவர்களின் அட்ராசிட்டி – நாயகனின் கெத்து –  கௌதம் வாசுதேவ் மேனனின் நடனம்- மிஷ்கினின் நடிப்பு- அனுபமா பரமேஸ்வரனின் கவர்ச்சி – கயாடு லோஹரின் காதல் பேசும் கண்கள்- என ரசிக்கும் படியான காட்சிகள் ரசனையுடன் இடம் பிடித்திருப்பதால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது. அத்துடன் 21ம் தேதியன்று வெளியாகும் இந்த திரைப்படத்தினை ‘முதல் நாள் முதல் காட்சி’யிலேயே பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.