சுயநல அரசியல்வாதி மற்றும் காவல் அதிகாரி இருவரால் பாதிக்கப்பட்ட ஒரு சிறு கூட்டம் படும்பாடு தான் இந்த ‘அனந்தன் காடு’

விமர்சனம்:

படத்தின் ஆரம்பத்தில் ஒருவரை துப்பாக்கி முனையில் நிறுத்தி ஒரு கதை சொல்கிறார் ஒரு இளைஞர். அந்தக் கதைப்படி இலங்கை ராணுவத்தால் தன் குடும்பத்தை இழந்த இளைஞன் ஆர்யா கேரளா வருகிறார். அவர் வந்து அங்கு அரசியல்வாதி ஒருவருக்காக கொலைகள் செய்யும் குட்டி கூலிப்படை ஒன்றோடு இணைகிறார். அந்தக்கூலிப்படைக்கு அரசியல்வாதி இன்னொரு வேலையும் கொடுக்கிறார். அதை ஆர்யாவே முன்னின்று செய்கிறார். அதன்பின் அந்த அரசியல்வாதி ஆர்யாவையும் அவர் நண்பர்களையும் கொலை செய்ய திட்டம் தீட்ட அந்தத் திட்டங்களை ஆர்யா முறியடித்தாரா? இல்லையா? துப்பாக்கி முனையில் நின்று கதை சொல்லும் அந்த சிறுவன் யார்? அடுத்து என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை….

சண்டைக்காட்சிகளில் ஆர்யாவின் துடிப்புமிக்க உழைப்பு ஆச்சர்யப்படுத்துகிறது. குற்றப் பின்னணி கொண்ட நால்வர் குழுவினராக நடித்திருக்கும் முரளி கோபி, தேவ் மோகன், இந்திரன்ஸ் மற்றும் அப்பானி சரத் ஆகியோர் கதாபாத்திரங்களுக்கு பொறுத்தமான தேர்வாக இருப்பதோடு, உணர்வுப்பூர்வமான காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கும் முரளி கோபி, ஒரு குறிப்பிட்ட உண்மை சம்பவத்தை மையமாக வைத்துக்கொண்டு அதை கமர்ஷியல் ஆக்‌ஷன் பாணியிலான படமாக கொடுக்க முயற்சித்திருக்கிறார். யுவாவின் ஒளிப்பதிவுக்கு தனியாக ஒரு பாராட்டுப்பத்திரமே வாசிக்கலாம். இரவு ஷாட்ஸ் முதல் சண்டைக்காட்சிகள் வரை அவரது கேமரா அபாரம். எடிட்டர் ரோஹித் வி.எஸ். வாரியத் சிறப்பாக கட்ஸ் கொடுத்துள்ளார்

மைனஸ்: சில காட்சிகள் லாஜிக்கே இல்லை… தமிழர்கள் கதையில் கூடுதல் கவனம் தேவை….

மொத்தத்தில் இந்த ‘அனந்தன் காடு’ மழை வந்து நிற்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here