துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜெண்ட் சரவணன், ஷாம் , ஆண்ட்ரியா, சந்தோஷ் பிரதாப், பாயல் ராஜ்புத், லால், அமிர்தா ஐயர், விடிவி கணேஷ், ஐஸ்வர்யா பாஸ்கரன், ஜார்ஜ் மரியான் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் ‘லீடர்’

லீடர் விமர்சனம்:

லெஜண்ட் சரவணன் தன் மகளோட ஒரு மெக்கானிக் கடையில் மெக்கானிக் ஆக வாழ்க்கையை நடத்தி வருகிறார், அம்மா இல்லாமல் தன் மகளை உயிராக நினைத்து வாழ்கிறார். அதே நேரத்தில் இன்ஸ்பெக்டர் ஆண்ட்ரியா அந்த கண்டெய்னரில் ஏதோ உள்ளது. கண்டிப்பாக அதை வெளியே கொண்டு வர வேண்டும் என போராட, ஒரு கட்டத்தில் சரவணனுக்கு அந்த ஹார்பரில் சால்ட் என்ற தாதா கார்-யை சர்விஸ் விட்டு அடிக்கடி அங்கு செல்லும் நிலை உருவாகிறது. சரி இது தான் வாய்ப்பு என ஆண்ட்ரியா , சரவணன் மகளை மறைத்து வைத்து விட்டு, சால்ட் தான் உன் மகளை கடத்தினான் என்பது போல் திசை திருப்பி அவர் கையாலேயே அந்த கண்டெய்னரை வெளியே கொண்டு வருகிறார்.

ஆனால், அதன் பின்பு தான் தெரிகிறது, இந்த அத்தனை ஸ்கெட்ச் போட்டது ஆண்ட்ரியா இல்லை என்று…..! பிறகு யார்? எதற்கு செய்தார்? என்பதே கதை….

லெஜண்ட் சரவணன் முதல் படத்தை விட அத்தனை முன்னேற்றம், மகளுடன் பாசம், மகளுக்கால எந்த எல்லைக்கும் செல்லும் போரட்டம், ஆக்‌ஷன் என ஒரு மாஸ் ஹீரோவாக சிறிது தெரிவிட்டார் என்றே சொல்லலாம். ஆண்ட்ரியா, ஷாம் என அனைவருமே நல்ல நடிப்பை தர, வில்லனாக வரும் சந்தோஷ் கதாபாத்திரம் அவரை சார்ந்து வரும் டுவிஸ்ட் எல்லாமே தியேட்டர் மொமண்ட் ஆக ஒர்க் ஆகியுள்ளது.

ஒரு த்ரில்லர் படத்துக்கு தேவையான விறுவிறுப்பான தொடக்கத்துடனே படம் ஆரம்பிக்கிறது. வில்லனின் பின்னணி, அடுத்து ஹீரோவின் வாழ்க்கை, துணை கதாபாத்திரங்களின் அறிமுகம் என அடுத்தடுத்து காட்சிகள் நகர்வது ப்ளஸ். கிட்டத்தட்ட இடைவேளை வரையுமே திரைக்கதை எங்குமே தேங்கிவிடவில்லை. இடைவேளைக்கு முந்தைய 20 நிமிடக் காட்சிகள் நிமிர்ந்து உட்கார வைத்து விடுகின்றன. இடைவேளைக் காட்சியும் பக்கா ‘மாஸ்’ ரகம்.

மைனஸ்: பல லாஜிக் மீறல்கள்…. பிளாஷ்பேக் காட்சியை கொஞ்சம் சுருக்கி இருக்கலாம்….

இந்த ‘லீடர்’ – விறுவிறுப்பு கலந்த பாச போராட்டம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here