குகன் சக்கரவர்த்தி இயக்கத்தில் அவரின் தயாரிப்பில் குகன் சக்கரவர்த்தி, பொன்னம்பலம், வாசு விக்ரம் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் ‘வங்காள விரிகுடா’

விமர்சனம்:

தூத்துக்குடி மாவட்டத்தின் மக்கள் செல்வாக்கு மிக்க தொழிலதிபரான நாயகன் குகன் சக்கரவர்த்தி, இன்பம் இல்லாத இல்லற வாழ்க்கையினால் மனம் உடைந்து கடற்கரையில் தனிமையில் இருக்கும் போது, அவரது முன்னாள் காதலி தற்கொலைக்கு முயற்சிப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து அவரை காப்பாற்றுகிறார். முன்னாள் காதலியின் திருமண வாழ்க்கையும் தன்னைப் போலவே இருப்பதை அறிந்துக் கொள்ளும் குகன் சக்கரவர்த்தி, அவர் வாழ்க்கையின் மறுசீரமைப்புக்காக ஒரு கொலை செய்வதோடு, அவருடன் வாழவும் தொடங்குகிறார்.

இதற்கிடையே குகன் சக்கரவர்த்தியால் கொலை செய்யப்பட்டவர், அவரது காதலியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டுகிறார். இறந்தவர் எப்படி பேச முடியும், என்ற குழப்பத்தில் இருக்கும் போது, தனிமையில் இருக்கும் அவரது காதலியை அச்சப்பட வைக்கும் சில சம்பவங்கள் நடக்கிறது. அவர் திருமணம் செய்து கொண்ட பெண்ணுடன் வாழ்ந்தாரா? அல்லது காதலியுடன் வாழ்ந்தாரா? என்பதே கதை….

90களின் ஹீரோக்கள் எவருக்கும் குறைவில்லாத அளவில் கவனத்தைக் கவர்கிறார் குகன் சக்கரவர்த்தியார். பொன்னம்பலம், வையாபுரி, வாசு விக்ரம் ஆகியோரது அனுபவம் வாய்ந்த நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. பெரும்பாலும் படத்தில் வெள்ளை வேட்டி அணிந்து வரும் குகன் அதற்கு சம்பந்தமே இல்லாமல் சாக்ஸ் போட்டு கருப்பு ஷூவுடன் வருகிறார்.

சட்டைக்கு மேலே கலர் கலராக கையில்லாத ஜாக்கெட்டும் அணிந்து வருகிறார். மாஸான ஆக்‌ஷன் கதையாக தொடங்கும் படம் பிறகு குடும்ப டிராமா வழியில் பயணித்து பிறகு சஸ்பென்ஸ் திரில்லர் பாதைக்கு திரும்புகிறது. தமிழகத்தின் பெருந்தலைவர்கள் அத்தனை பேரும் வங்காள விரிகுடா கடற்கரையில்தான் மீளாத் துயில் கொண்டிருக்கிறார்கள் என்பதால் மெரினா கடற்கரையை ‘திராவிடக் கடற்கரை’ என்ற பெயர் மாற்றம் செய்யும்படி தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்து படத்தை முடிக்கிறார்.

மைனஸ்: கிளைமேக்சில் திமுக வுக்கு ஆதரவா? என்ற கேள்வி எழுகிறது, கதை ஆங்காங்கே பல சொதப்பல்களாக இருக்கிறது.

மொத்தத்தில் இந்த ‘வங்காள விரிகுடா’ குழப்பம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here