றிமுக இயக்குநர் ரங்கராஜ் இயக்கத்தில் டெல்லி கணேஷ், ஸ்ருதி நாராயணன், சாய் தீனா, பிர்லா போஸ், ஸ்ரீ லேகா, அறந்தாங்கி நிஷா, நான்சி, படத்தின் இயக்குநர் ரங்கராஜ் ஆகியோர் நடித்துள்ள படம் தான் “கட்ஸ்”

விமர்சனம்:

ரங்கராஜ் (அப்பா கதாபாத்திரம்) தனது கர்ப்பிணி மனைவியான ஸ்ருதி நாராயணன் அவரை நள்ளிரவில் ஒரு ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார். அப்போது மர்ம நபர்கள் ஸ்ருதி நாராயணனை கொலை செய்து விடுகின்றனர். அவருக்கு ஒரு மகன் பிறக்கிறது. அதை பார்த்து ரங்கராஜ் (அப்பா கதாபாத்திரம்) இறந்துவிடுகிறார். இளம் வயதிலேயே தனது தாயையும் தந்தையையும் இழந்த ஹீரோ ரங்கராஜ் போலீஸ் ஆய்வாளராகி தனது தாயின் விருப்பத்தை நிறைவேற்றுகிறார். பிறகு அவர் எதிர்கொண்ட சவால்கள் என்ன? கொலையின் பின்னணி என்ன? என்பதே மீதி கதை…

அறிமுக இயக்குநர் ரங்கராஜ் இரண்டு கதாபாத்திரங்களிலும் தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கிராமத்து நாயகன், போலீஸ் நாயகன் ஆகிய வித்தியாசமான கதாபாத்திரங்களில் ஒன்றுக்கொன்று வித்தியாசமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். மஞ்ச்ரேக்கர் மற்றும் கார்ப்பரேட் புள்ளியுமாக அர்ஜுன் தேவ் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்கள்.

பெத்தனசாமியின் அம்மாவாக வரும் ஸ்ரீலேகா ராஜேந்திரன், ரங்கராஜின் தாய்மாமா பாண்டியனாக வரும் சாய் தீனா, சப்-இன்ஸ்பெக்டர் தாமஸாக வரும் பிர்லா போஸ், சீனியர் கான்ஸ்டபிள் கரீம் பாயாக வரும் டெல்லி கணேஷ், பெண் கான்ஸ்டபிள் மகாலட்சுமியாக வரும் அறந்தாங்கி நிஷா உள்ளிட்டோர் தனக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

மைனஸ்:
கதை புதிதாக இல்லை… எடிட்டிங் பணியில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்…..

மொத்தத்தில் இந்த ‘கட்ஸ்’ ஆக்க்ஷன் கலந்த செண்டிமெண்ட்…

#GUTSREVIEW #GUTSVIMARSANAM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here