நடிகர் தனுஷ் இயக்கத்தில் அனிகா சுரேந்திரன், சரத்குமார், சரண்யா பொன்வண்ணன், ‘ஆடுகளம்’ நரேன் என பலர் இந்த ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் நடித்துள்ளனர்.
விமர்சனம்
சமையல் கலைஞரான பிரபுவும், சாப்பாட்டு விரும்பியான நிலாவும் (அனிகா சுரேந்திரன்) ஒரு பார்ட்டியில் சந்தித்து காதலில் விழுகின்றனர். பிரபுவை தனது பணக்கார தந்தையிடம் (சரத்குமார்) அறிமுகம் செய்து வைக்கிறார் நிலா. நிலாவின் தந்தைக்கு பிரபுவை சுத்தமாக பிடிக்கவில்லை என்பதால் பழகுவதற்கு கால அவகாசம் கேட்கிறார்.
இந்தச் சூழலில் நிலாவின் தந்தையை பற்றிய ஒரு உண்மை தெரியவருவதால் அது பற்றி வெளியே சொல்லாமல் சைலண்ட் ஆக நிலாவுடனான காதலை முறித்துக் கொள்கிறார் பிரபு. பிறகு ப்ரீத்தி என்ற பெண்ணை தன் குடும்பத்துடன் பெண் பார்க்க செல்கிறார் பிரபு. அங்கு பொய் பார்த்தால் ப்ரீத்தி பிரபுவுடன் பள்ளியில் படித்த பெண். இருவரும் நாங்கள் பேசி பழக அவகாசம் கேட்கின்றனர். சில மாதங்கள் கழித்து நிலாவின் திருமண அழைப்பிதழ் பிரபுவுக்கு கிடைக்கிறது. அந்த திருமணத்துக்கு செல்லுமாறு ப்ரீத்தி பிரபுவை கோவா அனுப்பி வைக்கிறார். பிறகு என்ன ஆனது? என்பதே மீதி கதை….
‘ப.பாண்டி’, ‘ராயன்’ படங்களுக்குப் பிறகு இயக்குநராக தனுஷ் களமிறங்கியுள்ள மூன்றாவது படம் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’. தான் இயக்கிய முதல் இரண்டு படங்களில் தானே நடித்திருந்த தனுஷ், இதில் முழுக்க முழுக்க புதியவர்களை களமிறக்கியுள்ளார். இது ‘Gen 2′ இளைஞர்களை பற்றிய படம். பணக்கார பெண்ணை நடுத்தர குடும்பத்து பையன் காதலிப்பது, அதற்கு அந்த பெண்ணின் தந்தை வில்லனாக மாறுவது, “என்னடா என் பொண்ண கரெக்ட் பண்ண பாக்குறியா?” என்று டைலாக் பேசுவது என எல்லாமே பழைய படங்களில் பார்க்கும் விஷயங்கள்தான், இந்த படத்திலும் இடம் பெற்றுள்ளது.
நட்பு குறித்த டைலாக்குகளும், மிடில் கிளாஸ் பையன் குறித்த பஞ்ச் வசனங்களும் ஓகே. அனேகா, பிரியா வாரியர் ஆகியோர் தங்கள் கதாப்பாத்திரங்களை நியாயப்படுத்தி இருக்கின்றனர். நண்பராக மாத்யூ தாமஸ், ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார். அம்மாவாக வரும் சரண்யா பொன்வண்ணன் ஆங்காங்கே ஆங்கிலம் பேசி அசத்துகிறார்.
சரத்குமார் கொஞ்ச நேரம் வந்தாலும் தனது நடிப்பில் கவர்கிறார். தனுஷ் இன்னும் தெளிவாக சொல்லி தந்திருக்கலாம் ஏனெனில் சொன்னதை அப்படியே புதிய நடிகர்கள் காப்பி அடித்தது போல் தெரிகிறது. சில காட்சிகள் பள்ளி நாடகம் போல் புரிகிறது. எடிட்டர் சரியான இடத்தில் பாடல்கள், இடைவேளை காட்சிகளை வைக்கவில்லை.
இது ஒரு புறம் இருக்க கிளைமேக்ஸ் காட்சியில் அந்த தாலி காட்சி நம்ம தமிழ் கலாச்சாரத்தை இழிவு படுத்தியது போல் தோணுகிறது. என்ன தான் புதிய ஜெனரேஷன் மாறினாலும் தாலிக்கு ஒரு மரியாதை இருக்கு அய்யா… தனுஷ் இதை ஏன்? சிந்திக்கவில்லை என்று தெரியவில்லை. இரண்டாம் பாகத்தில் ஆவது தெளிவாக எடுங்கள் தனுஷ் அவர்களே…. ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ எங்கள் மேல் என்ன கோபம்? என்று ரசிகர்கள் கேட்கின்றனர்.
மொத்தத்தில் இந்த படம் ‘குழந்தை கலாட்டா கல்யாணம்’
ராஜ் குமார்- (சினிமா நிருபர்)

















