பா.ரஞ்சித் தயாரிப்பில் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடித்திருக்கும் படம் தான் ‘பாட்டல் ராதா‘.
விமர்சனம்:
டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வருபவர் பாட்டல் ராதா. டைல்ஸ் ஒட்டுவதில் கில்லாடியான அவர் மதுவுக்கு அடிமை. ராதாவை குடிப்பழக்கத்தை நிறுத்த வைக்க கட்டிட வேலைக்கு அழைப்பதாக பொய் சொல்லி மறுவாழ்வு மையத்தில் சேர்த்துவிடுகிறார் மனைவி சஞ்சனா நடராஜன். அசோகன் நடத்தும் அந்த மறுவாழ்வு மையம் ஒரு சிறை போன்று இருக்கிறது. பாட்டல் ராதாவுக்கு அங்கு இருக்க பிடிக்காமல் தப்பியோடிவிடுகிறார். இதை அறிந்து இனியும் இவரை திருத்த முடியாது என குடும்பம் பிரிகிறது. குடும்பத்திற்காக பாட்டல் ராதா திருந்தினாரா? இல்லையா? என்பதே கதை….
குரு சோமசுந்தரம் நிஜமான குடிகாரன் போன்று சிறப்பாக நடித்திருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் சஞ்சனா நடராஜன் கண் கலங்க வைத்துவிடுகிறார். படத்தின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம் . இந்த படத்தை குடிப்பவர்கள், குடிக்க ஆசைப்படுபவர்கள், குடி நோயாளிகள் என அனைத்து குடிமகன்களும் குடும்பத்துடன் பார்க்கலாம் என ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். குடிப்பழக்கத்தால் ஒரு குடும்பம் படும் கஷ்டத்தை அழகாக காட்டியிருக்கிறார் இயக்குநர் தினகரன் சிவலிங்கம்.
படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம்… கதையை கொஞ்சம் புதிதாக திருத்தி மேலும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம்…..
மொத்தத்தில் இந்த ‘பாட்டல் ராதா‘- சிறந்த விழிப்புணர்வு
RAJ KUMAR- CINEMA REPORTER

















