பள்ளியில் படிக்கும் சிறுவர்கள், வெளிநாடுகளைப் போல் நம் நாட்டிலும் பிள்ளைகளுக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும் எனத் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர். அதனை நாமே கையில் எடுக்க வேண்டும் என எண்ணும் அந்தச் சிறுவர்கள் அவர்களுக்குள் உள்ள ஒரு பெண்ணின் சொந்த கிராமத்திற்கு ஸ்கூலை கட் அடித்து விட்டு செல்கின்றனர்.
அப்போது ரோட்டில் நடக்கும் போராட்டம் காரணமாக, பேருந்து செல்லாது என்று போலீசார் சொல்கின்றனர். பிறகு ஒரு ஆட்டோ டிரைவரும் கைவிரித்ததால், காட்டுப்பாதையைத் தேர்வு செய்து 13 பேரும் நடந்து செல்கின்றனர். அப்போது ஒருவர் பின் ஒருவராக மாயமாகின்றனர். இவர்களுக்கு உதவ பார்த்திபன் வருகிறார். ஏன் மாயமானார்கள்? பார்த்திபன் வந்து என்ன செய்தார்? என்பதே மீதி கதை.
13 சிறுவர்களை வைத்துக்கொண்டு அவர்களுக்குள் நடக்கும் ஹைடெக்காண பேச்சுகளும், அதற்கேற்ற அவர்களின் உடல் மொழிகளையும் வைத்துக்கொண்டு தன் திரைக்கதையை வித்தியாசமாக அமைத்து புதுவித அனுபவத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் நடிகர் பார்த்திபன். 13 சிறுவர்களின் நடிப்பு சிறப்பு. இசை ஓகே. ஆனால் கிளைமேக்ஸ் காட்சி கொஞ்சம் சொதப்பல் மற்றும் கதையின் நீளத்தை குறைத்திருக்கலாம்.
டீன்ஸ்- சிறுவர், சிறுமியுடன் ஒரு முறை சுற்றி வரலாம்.

















