திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட வேலூர் ஊராட்சியில் பொது விநியோக அரசு நியாய விலைக் கடை, மற்றும் அங்கன்வாடி உண்டு உறைவிடப்பள்ளி புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு திறப்பு விழா நிகழ்வும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து திறந்து வைத்தார். உடன் ஒன்றிய பெருந்தலைவர் பாஸ்கர், ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி செயலர் தினேஷ், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.