ந்திய விமானப்படையின் வீரராக இருக்கும் தனுஷ், தனது கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல், தனக்கு மேல் உள்ள அதிகாரிகள் பேச்சை கூட கேட்காமல் தன் மனதிற்கு சரி என பட்டதை செய்து வருகிறார். கட்டுப்பாடுடன் இவர் செயல்பட வேண்டும் என்பதற்காக தனுஷை சைக்காலஜி மருத்துவரிடம் கவுசிலிங் எடுக்க வேண்டும் என உத்தரவிடப்படுகிறது. இந்த உத்தரவு கதாநாயகி க்ரித்தி சனோன் இடம் செல்ல, தானே முன் வந்து தனுஷுக்கு கவுன்சிலிங் தருவதாக கூறுகிறார். இருவரும் சந்திக்க முன் கதை தொடங்குகிறது.  கல்லூரியில் படித்து வரும் தனுஷ் மிகவும் வன்முறையான மனிதனாக இருக்கிறார்.

மறுபக்கம் தனது ஆய்வறிக்கை மூலம் எப்படிப்பட்ட வன்முறையான மனிதனாக இருந்தாலும், அவரை நார்மலான மனிதனாக மாற்ற முடியும் என நம்புகிறார் க்ரீத்தி. வன்முறையான மனிதராக இருக்கும் தனுஷை மாற்றிவிட்டால், கீர்த்தியின் ஆய்வறிக்கை நிறைவு பெறும். இதனால் தனுஷுடன் பழக ஆரம்பிக்கிறார். ஆனால், தனுஷுக்கோ தன்னை காதலித்தால் ஆய்வறிக்கைக்கு உதவுகிறேன் என கூறுகிறார்.

சரி, நான் இதை காதலாக பார்க்கவில்லை, நீ வேண்டும் என்றால் காதலித்துக் கொள் என கீர்த்தி கூற, இருவரும் பழக ஆரம்பிக்கிறார்கள். இதில் இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது. ஆனால், வன்முறையோடு இருக்கும் இப்படி ஒரு மனிதனை கீர்த்தியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனாலும், தனது தந்தையை வந்து பார்க்கும்படி தனுஷிடம் கூறுகிறார். பிறகு என்ன நடந்தது? என்பதே கதை 

மனிதனிடம் நீங்காத வன்முறை மட்டுமல்ல அன்பும் அவனுக்கு மிகப்பெரிய எதிரியே என்பதை தனுஷ் மற்றும் க்ரித்தி சனோனின் வாழ்க்கையுடன் ஒப்பிட்டு இருவரும் ஒருவர் மீது ஒருவர் செலுத்தும் உணர்ச்சி கொந்தளிப்புகளுடன் காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கிறது. முதல் பாகத்தில் நகைச்சுவை, காதல் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. இரண்டாம் பாகத்தில் காதலின் வலி என்ன என்கிற அழுத்தமாக வசனங்கள் உணர்வுப்பூர்வமாக மாறுகின்றன.

இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் கதையின் இன்னொரு நாயகனாக அசத்தியிருக்கிறார்.  இயக்குநர் ஆனந்த் எல். ராய் தனது வழக்கமான காதல் கதையில் மீண்டும் பட்டையை கிளப்பியுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக எமோஷனல் காட்சிகள் நம்மை வெகுவாக கவருகிறது. ராஞ்சனா படத்தில் எப்படி குந்தன் நம்மை கண்கலங்க வைத்தாரோ, அதே போல் இப்படத்தில் சங்கரும் நம்மை கலங்க வைத்துவிட்டார். அதுவே படத்தின் மிகப்பெரிய வெற்றி.  

மைனஸ்: தமிழில் சரியாக டப்பிங் பணி செய்யவில்லை, கதை யூகிக்க கூடிய அளவில் இருக்கிறது….

தேரே இஷ்க் மே – சிறந்த காதல் சப்தம்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here