விடியல் ஸ்டுடியோஸ் சார்பில் டாக்டர் கே.செந்தில் வேலன் தயாரிப்பில் நட்டி நட்ராஜ், நிஷாந்த் ரூசோ, பாடினி குமார், நிழல்கள் ரவி என பலர் நடித்துள்ள படம் தான் ‘சீசா’
விமர்சனம்:
இளம் தொழிலதிபர் நிஷாந்த் ரூசோ மற்றும் அவரது காதல் மனைவி பாடினி வசிக்கும் வீட்டில் வேலை செய்யும் ஆண் ஒருவர் கொலை செய்யப்படுகிறார். அதே சமயம், அந்த வீட்டில் இருந்த நிஷாந்த் ரூசோ அவரது மனைவி பாடினி குமார் மாயமாகி விட அந்த வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவின் ஹார்டிஸ்யும் மாயமாகி விட கொலை வழக்கை விசாரிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் நட்டி நட்ராஜ், மாயமான தம்பதியை கண்டு பிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார்.
விசாரணையில் நிஷாந்த் ரூசோ பற்றி பல அதிர்ச்சிகரமான தகவல்கள் போலீஸ் இன்ஸ்பெக்டர் நட்டி நட்ராஜுக்கு தெரிய வருகிறது. அதை வைத்து விசாரணையில் அவர் முன்னோக்கி செல்லும் போது மாயமான நிஷாந்த் ரூசோ மட்டும் மீண்டும் தனது வீட்டுக்கு வருகிறார். அவருடன் இருந்த அவரது மனைவி என்ன ஆனார்? என்பது குறித்து போலீஸ் அவரிடம் விசாரிக்கும் போது, அவர் சரியான மனநிலையில் இல்லை என்பது தெரியவர பாடினியின் நிலை என்ன? என்பதை கண்டுபிடிப்பதற்காக, வேறு கோணத்தில் விசாரணை மேற்கொள்ளும் நட்டி நட்ராஜுக்கு, அதிர்ச்சிகரமான உண்மையும், பாடினியின் நிலையும் தெரிய வருகிறது. அது என்ன? கொலைப் பின்னணியில் இருப்பது யார்? என்பதே கதை…
கதையின் நாயகன் நட்டி நட்ராஜ் போலீஸ் இன்ஸ்பெக்டர் முகிலன் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருத்தியுள்ளார். நிஷாந்த் ரூசோ மனநலம் பாதிக்கப்பட்ட கதாபாத்திரத்தில் மிரட்டி இருக்கிறார். சப்-இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் கதாபாத்திரத்தில் ஆதேஷ் பாலா நிறைவான நடிப்பு தந்துள்ளார். கமிஷனராக நிழல்கள் ரவி, ஆதவனின் உறவுக்காரர் கிருஷ்ணமூர்த்தியாக ஜீவா ரவி, விடியல் மருத்துவமனை மருத்துவராக டாக்டர். கே.செந்தில்வேலன் உட்பட அனைத்து நடிகர்கள் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள். இசை ஓகே. பெருமாள் மற்றும் மணிவண்ணன் ஒளிப்பதிவு கச்சிதம்.
இரண்டாம் பாதியில் கதை சற்று நீளமாக செல்கிறது… கதை பெரிய அளவில் பதிய வில்லை….
மொத்தத்தில் இந்த ‘சீசா’ சூதாட்ட விழிப்புணர்வு…..
ராஜ்குமார் – சினிமா நிருபர்