விமர்சனம்:
தனது நண்பர்களுடன் ஒரு வீட்டில் வசிக்கிறார் சன்னி. எதிர் வீட்டுக்கு புதிதாக வரும் சந்திராவை கண்டதுமே காதல் கொள்கிறார். அவருடன் பழகுவதற்கான வழிகளைக் கண்டுபிடிக்க முயற்சிக்கும் போது, வழக்கத்துக்கு மாறான சந்திரா அமானுஷ்யங்களைக் கொண்ட பெண் என்பது தெரியவருகிறது. காவல் ஆய்வாளராக நடன இயக்குனர் சாண்டி நடித்துள்ளார். காவல் துறை அதிகாரி கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பகுதியில் பெண்கள் ஆண்கள் என்று இருவருமே கடத்தப்படுகிறார்கள்.
சாண்டி வாகன தடுக்கையில் ஈடுபடும்போது ஒரு பெண் கடத்தப்படுவதற்காக துரத்தப்படுகிறார். அந்தப் பெண்ணை காவல்துறை அதிகாரி சாண்டி விசாரித்துக் கொண்டிருக்கும் போது அவரது மேல் அதிகாரி எதற்காக அந்த பெண் இருக்கிறாள் என்று கேட்டு அவருடன் கூட்டி செல்கிறார். சந்திராவுக்கு எப்படி அந்த அதித சக்தி வருகிறது? என்பதை பின்னோட்டக் காட்சி மூலமாக (பிளாஷ் பேக்) காண்பிக்கப்படுகிறது. பிறகு அந்த அமானுஷ்யம் என்ன என்பதே கதை…
நண்பர்கள், பார்ட்டி, உடல் உறுப்புகள் திருடும் கும்பல் என செல்லும் முதல் பாதியில் சந்திரா, மர்மமானவர் என்பது தெரிந்த பிறகு, கதை விறுவிறுப்பாகிறது. அதற்கு ஜேக்ஸ் பிஜோயின் பின்னணி இசையும் காரணம். ஒரு வித பயத்துடனும் ஏதோ நடக்கப் போகிறது என்கிற எதிர்பார்ப்புடனும் கதைக்குள் இழுத்துப் போக வைக்கிறது இசை.
போலீஸ் இன்ஸ்பெக்டர் நாச்சியப்பா கவுடா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடன இயக்குநர் சாண்டியின் வில்லத்தனம் மிரள வைக்கிறது. சிறப்பு தோற்றத்தில் வரும் டோவினோ தாமஸ், துல்கர் சல்மான் மற்றும் திரையில் தோன்றாத பெரியவர் கதாபாத்திரங்கள் எதிர்பார்ப்பை தூண்டும் விதத்தில் திரைக்கதையில் கையாளப்பட்டுள்ளது. சந்திரா கதாபாத்திரத்தின் அறிமுகம் மற்றும் அவரது நிஜ முகத்தை வெளிப்படுத்தும் காட்சிகள் அனைத்தும், சூப்பர் மேன் கதாபாத்திரத்தை கொண்டாடும் விதமாக மட்டும் இன்றி, பார்வையாளர்களை படத்துடன் ஒன்றிவிட செய்கிறது.
மைனஸ்: சந்திரா நடிக்கும் காட்சிகளில் கதை தெளிவாக சொல்லவில்லை…. கிளைமேக்ஸ் காட்சியில் கூடுதல் கவனம் தேவை…
மொத்தத்தில் இந்த லோகா-அத்தியாயம் 1 சந்திரா விறுவிறுப்பு…..

















