ஐ.பி.எல் விமர்சனம்
மதன் கிருஷ்ணன் தயாரிப்பில், ராதா ஃ பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில், டி டி எஃப் வாசன் , கிஷோர், அபிராமி, குஷிதா கல்லப்பு, சிங்கம் புலி, ஹரீஷ் பெராடி, ஆடுகளம் நரேன், ஜான் விஜய், போஸ் வெங்கட், திலீபன்,ஜனனி ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் ‘ஐ.பி.எல்’
விமர்சனம்:
கிஷோர் கேப் டிரைவர் சாலையில் குறுக்கே போக, தவறாக வண்டி ஓட்டி வரும் டி.டி.எப் வாசன் அவரைக் கெட்ட வார்த்தையால் திட்டி விட்டுப் போய் விடுகிறான். அந்த டென்சனில் ரோட்டைக் கடக்கும் போது, ஒரு பைக் மீது அவர் தவறாக மோதி விபத்துக்கு ஆளாகிறார் கேப் டிரைவர். எனினும் பைக் இளைஞன் அவரை மருத்துவமனையில் சேர்த்து விட்டுப் போகிறான். தன்னை கெட்ட வார்த்தையில் திட்டி விட்டுப் போன நபர் தன் தங்கையின் காதலன் என்று அறிந்த கேப் டிரைவர் தங்கையிடம் அவனை மறந்து விடு என்கிறார் .
இன்ஸ்பெக்டர் ஒருவர் லஞ்சம் வாங்க அதை ஒருவர் வீடியோ எடுக்க, அவரை அடித்துத் துவைத்து ஜெயிலில் தள்ளுகிறார் இன்ஸ்பெக்டர். அவனது போனை பிடுங்கி தான் லஞ்சம் வாங்கிய வீடியோவை அழிக்கப் பார்க்க, அங்கே இருக்கும் இன்னொரு வீடியோவைக் கண்டு அதிர்சசி ஆகிறார். அது என்ன? பிறகு டிரைவரின் குடும்பம் என்ன ஆனது? என்பதே கதை…..
அறிமுக நடிகர் டி.டி.எஃப்.வாசன், கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார். காவல்துறை உயர் அதிகாரியாக நடித்திருக்கும் ஹரிஷ் பெராடி கொடூரமான முகத்தை கச்சிதமாக கையாண்டு மிரட்டுகிறார். கிஷோர், அபிராமி இணை ஒரு நடுத்தரக் குடும்பத்தை சிறப்பாகப் பிரதிபலிக்கிறது.
பைக் ரேசர் டி டி எஃப் வாசனுக்கு அவரது பைக் ஓட்டும் நிஜ விசயத்துக்கு பொருத்தமான கேரக்டர். அதோடு இளம் ஹீரோ என்ற நிலையில் நடனமும் உற்சாகமும் இருக்கிறது . கிஷோரின் மனைவியாக நடித்திருக்கு அபிராமி, முதலமைச்சர் வேடத்தில் நடித்திருக்கும் நரேன், போஸ் வெங்கட் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் தங்களது பணியை சரியாக செய்திருக்கிறார்கள். எழுதி இயக்கியிருக்கும் கருணாநிதி, சில உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு பரபரப்பான கற்பனை கதைக்கு விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து படத்தை சுவாரஸ்யமாக இயக்கியிருக்கிறார்.
மைனஸ்: ஹீரோவுக்கு இன்னும் நடிப்பு வரணும்…. இசையில் கூடுதல் கவனம் தேவை…
மொத்தத்தில் இந்த ‘ஐ.பி.எல்’ முதல்வரின் குணத்தை விளக்கும்.

















