முன்னிலை நிலவரம் தமிழகம்: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. அதன்படி தவெக: 63, திமுக: 49, அதிமுக: 42 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன.
சென்னையில் பெரம்பூர், ராயபுரம், வேளச்சேரி ஆகிய 3 தொகுதிகளில் தவெக முன்னிலை வகிக்கிறது.
புதுச்சேரி முன்னிலை நிலவரம்: புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 30 தொகுதிகள் வாக்கு எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி ஆளும் என்டிஏ கூட்டணி: 22 தொகுதிகளிலும், இண்டியா கூட்டணி: 6 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.
மேற்கு வங்க முன்னிலை நிலவரம்: மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும், எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. திரிணமூல் காங்கிரஸ்: 106, பாஜக: 105, காங்கிரஸ்: 3 என முன்னிலை வகிக்கின்றன.
கேரளா முன்னிலை நிலவரம்: கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கே வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்துக் கணிப்புகள் கூறிய நிலையில், தற்போதைய நிலவரப்படி ஆளும் எல்டிஎஃப் கூட்டணி: 59, யுடிஎஃப் கூட்டணி: 74, என்டிஏ கூட்டணி: 3 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.
அசாம் முன்னிலை நிலவரம்: அசாம் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. மொத்தமுள்ள 126 தொகுதிகளில் பாஜக: 69 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ்: 9 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.

















