தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு ஏற்றத்தாழ்வுகளுடன் காணப்பட்டு வந்த நிலையில், தற்போது மீண்டும் சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு புதிதாக ஆயிரத்து 551 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 21 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கொரோனா தொற்று பாதிப்புக்கு இதுவரை மொத்தமாக 34 ஆயிரத்து 856 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது.
மேலும், தொற்று பாதிப்பில் இருந்து புதிதாக ஆயிரத்து 768 பேர் குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து, சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 17 ஆயிரத்து 559 ஆக உள்ளது. சென்னையில் புதிதாக 182 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கோவையில் தொற்று பாதிப்பு குறைந்து 230ஆக பதிவாகியுள்ளது.

















