தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகேயுள்ள ஜம்புலிபுதூரைச் சேர்ந்த சாரதா என்பவர், விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக வந்த குருஞ்செய்தியை நம்பி, 15 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ளார்.
பின்னர் அவருக்கு போலி பணி ஆணை வழங்கப்பட்டதை அடுத்து, அவர் அளித்த புகாரின் அடிப்படையில், தொலைபேசி எண்களை வைத்து டெல்லி விரைந்த தனிப்படை போலீசார், டெல்லி வாழ் தமிழர்களான விஜய், ராமச்சந்திரன் மற்றும் கோவிந்த் ஆகியோரை கைது செய்தனர்.
20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பல லட்சம் ரூபாய் மோசடி செய்து, டெல்லியில் சொகுசு வாழ்க்கை நடத்திய அவர்களிடமிருந்து 31 செல்போன்கள், லேப்டாப், கம்ப்யூட்டர், பிரின்டர், 50க்கும் மேற்பட்ட ஏடிஎம் கார்டுகள், போலி வங்கி காசோலைகள், போலி பணி நியமன ஆவணங்கள், சிம் கார்டுகள் மற்றும் 50 ஆயிரம் பணம் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.