சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் நாளை மற்றும் ஞாயிற்றுகிழமை சென்னை தீவுத்திடல் மைதானத்தை சுற்றியிருக்கும் 3.5 கி.மீ. சுற்றளவு சாலைகளில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், இதற்காக சென்னையில் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, காமராஜர் சாலையில் போர் நினைவிடம் நோக்கி செல்லும் வாகனங்கள் உழைப்பாளர் சிலை அருகே திருப்பி விடப்பட்டு வாலாஜா சாலை, அண்ணாசாலை, பெரியார் சிலை, ஈ.வி.ஆர் சாலை வழியாக செல்லலாம்.

அண்ணா சாலையில், வாலாஜா பாயிண்ட் நோக்கி செல்லும் வாகனங்கள் பல்லவன் சாலையில் சென்ட்ரல் லைட் பாயின்ட் நோக்கி திருப்பி விடப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here