25 டாட்ஸ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் சங்ககிரி ராஜ் குமார் இயக்கத்தில் நடிகர்கள் சங்ககிரி ராஜ் குமார், மாணிக்கம், வெள்ளயம்மாள், முத்தாயி, (சத்யராஜ், சேரன்) இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடித்து 2025 ஜனவரி 3ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் தான் ‘பயாஸ்கோப்’

விமர்சனம்:

கதாநாயகன் ஒரு படித்த பட்டதாரி. அவரின் தாயார் தனது கணவனின் தம்பியின் ஜாதகத்தை எடுத்து போலிச் சாமியாரிடம் ஜாதகம்  பார்க்கிறார். அதற்கு போலி சாமியார் இந்த ஜாதகக்காரன் பிச்சை எடுப்பார் என்று கூறுகிறார். அதைக் கேட்ட கதாநாயகனின் சித்தப்பா இறந்து விடுகிறார். இது போல் எந்த ஒரு உயிரும் போகக்கூடாது என்று எண்ணிய கதாநாயகன். தான் ஒரு படம் எடுத்து வெளியிட வேண்டும் என்று விரும்புகிறார். தன் குடும்பத்தில் இருப்பவர்களையே வைத்து படம் எடுக்க முயற்சி செய்கிறார் அவர் முயற்சியில் வென்றாரா? இல்லையா? என்பதே இக்கதை…..

சிறப்பு தோற்றத்தில் வரும் சத்யராஜ் மற்றும் சேரன் தனது பணியை பக்காவாக செய்துள்ளனர். சங்ககிரி ராஜ் குமார், மாணிக்கம், வெள்ளயம்மாள், முத்தாயி என அனைவரும் இயல்பாக நடித்துள்ளனர். கதாநாயகனின் நண்பர்கள் கதையோடு பொருந்தியிருக்கிறார்கள். முரளி கணேஷ் ஒளிப்பதிவு ஓகே. தாஜ்நூர் இசை பரவாயில்லை.

கதை தெளிவாக இல்லாமல் அங்கும் இங்குமாக செல்கிறது… கதையில் கூடுதல் கவனம் தேவை….

இந்த ‘பயாஸ்கோப்’ – ஒற்றை பார்வை

ராஜ்குமார் – சினிமா நிருபர் 

    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here