சென்னை:
ஸ்ருதிலயா வித்யாலயாவின் மாணவி ஹர்ஷினி பாஸ்கர் அவர்களின் பரத நாட்டிய அரங்கேற்றம் நிகழ்ச்சி டாக்டர். பார்வதி பாலசுப்ரமணியன் (குரு) அவர்கள் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் நீதியரசர் S.பாஸ்கரன், சினிமா இயக்குனர் கலைமாமணி S.P முத்துராமன், கலைமாமணி டாக்டர் G.மணிலால், கலைமாமணி V.பிரபாகர், நடிகை மீனா, லாவண்யா வேணுகோபால், V. இன்சுவை, மாணவியின் ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கலைமாமணி டாக்டர். பார்வதி பாலசுப்ரமணியன் (குரு) கூறுகையில்:
மாணவி ஹர்ஷினி பரத நாட்டிய வகுப்புக்கு சரியான நேரத்தில் வருவார். இதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவரின் விடா முயற்சியாலும் இறைவனின் அருளாலும் தொடர்ந்து வெற்றி பெறுவார் என வாழ்த்தினார். குழந்தைகள் இந்த தலைமுறையில் மிகுந்த ஒழுக்கத்துடனும், படிப்பில் ஆர்வம் காட்ட வேண்டும் என்று அறிவுரை கூறினார்.
மாணவி ஹர்ஷினி பாஸ்கர் கூறுகையில்:
முதலில் என் குரு கலைமாமணி பார்வதி அம்மாவுக்கும், தந்தை பாஸ்கர், தாய் வசந்தி பாஸ்கர், என் பாட்டி இவர்களுக்கு முதலில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவர்கள் இல்லையென்றால் என்னால் இந்த அரங்கேற்றத்தை நடத்திருக்க முடியாது. தொடர்ந்து இறைவனின் அருளால் குருவின் துணையால் என்னுடைய அரங்கேற்றம் தொடரும் என கூறிய மாணவி நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவருக்கும் மிக்க நன்றி என கூறினார்.
பெற்றோர்கள் பாஸ்கர், வசந்தி பாஸ்கர் கூறுகையில்:
முதலில் கலைமாமணி டாக்டர். பார்வதி பாலசுப்ரமணியன் (குரு) அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். சிறந்த குருவாக இருந்து பொறுமையாக என் மகளுக்கு பரத நாட்டியத்தை கற்று கொடுத்தார்கள். என் மகள் பரத நாட்டியம் மீது மிகுந்த ஆர்வமாக இருப்பார். எங்கள் மகளுக்கு தொடர்ந்து உறுதுணையாக இருப்போம் என்று கூறிய பெற்றோர்கள் வருகை தந்த அனைத்து சிறப்பு விருந்தினர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், பத்திரிகையாளர்கள் என அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மிக்க நன்றி என்று கூறினார்கள்.
இரவு விருந்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.