Thursday, April 24, 2025
Blog

காவேரி மருத்துவமனையில் O-ARM சாதனம்!

சென்னை:
 
காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் ஒரு அங்கமான ஆழ்வார்பேட்டை, காவேரி மருத்துவமனை மேம்பட்ட மூளை, முதுகுத்தண்டு மற்றும் எலும்பியல் அறுவைசிகிச்சைகளுக்காக நேவிகேஷன் சிஸ்டம் உடன் கூடிய O-ARM சாதனத்தை சென்னையில் முதன்முறையாக அறிமுகம் செய்திருக்கிறது. இஸ்ரோ அமைப்பின் தலைவர் டாக்டர். V நாராயணன், காவேரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு O-ARM அறுவைசிகிச்சை சாதனத்தை தொடங்கி வைத்தார்.
 
செயற்கை நுண்ணறிவால் மேற்கொள்ளப்படும் 2D மற்றும் 3D இமேஜிங் வழியாக இயங்கும் O-Arm சாதனம், மிக அதிக துல்லியத்துடனும், பாதுகாப்புடனும் அதிக சிக்கலான மூளை, முதுகுத்தண்டு மற்றும் எலும்பியல் அறுவைசிகிச்சை செயல்முறைகளை திறம்பட மேற்கொள்ள அறுவைசிகிச்சை நிபுணர்களுக்கு உதவுவதற்காக வடிவமைக்கப்பட்டிருக்கிறோம். அறுவைசிகிச்சையின்போது நிகழ்நேர இமேஜிங் (படங்கள்) -ஐ இது வழங்கி துல்லியமான முடிவு எடுப்பதற்கும் சிறப்பான திசையமைவுக்கும் உதவுகிறது.
 
செயற்கை சாதனங்களை சரியாக பொருத்துவதை உறுதி செய்யும் திறனையும் மற்றும் உடனடியாக முதுகுத்தண்டு ஒத்திசைவையும் இது உறுதி செய்யும். இதில் அமைந்துள்ள மிக நவீன மொபைல் இமேஜிங் செயல்தளமானது, அறுவைசிகிச்சையின்போது 360 டிகிரி சிடி போன்ற தோற்றப்படங்களை வழங்குகிறது. அறுவைசிகிச்சை செய்யும் உடற்பகுதியின் மீது முழுமையான தோற்றக்காட்சியை அறுவைசிகிச்சை நிபுணர்களுக்கு இது வழங்குவதால் நிகழ்நேரத்தில் தகவலறிந்த நிலையில் முடிவுகளை எடுக்கும் அவர்களின் திறனை மேம்படுத்துகிறது. உடலுக்கான ஒரு ஜிபிஎஸ் போன்ற கருவியான ஸ்டெல்த்ஸ்டேஷன் நேவிகேஷன் என்பதுடன் இச்சாதனம் நேர்த்தியாக ஒருங்கிணைகிறது; மிக நுட்பமான முதுகுத்தண்டு அறுவைசிகிச்சையின்போது ஸ்குரூக்கள் மற்றும் செயற்கை இம்பிளாண்ட்கள் மிகத் துல்லியமாக பொருத்தப்படுவதை இச்சாதனம் உறுதி செய்கிறது.
 
சென்னை, காவேரி மருத்துவமனையின் மூளை & முதுகுத்தண்டிற்கான அறுவைசிகிச்சை தலைமை நிபுணரும், நரம்பு அறிவியல் துறையின் இயக்குநருமான டாக்டர். ரங்கநாதன் ஜோதி, O ARM சாதனம் குறித்து பேசுகையில்:
 
“மூளை-நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர்களான நாங்கள், மூளை மற்றும் முதுகுத்தண்டு பகுதிகளில் அடிக்கடி அறுவைசிகிச்சைகளை மேற்கொள்கிறோம்; இதில் துல்லியம் என்பது வெறுமனே முக்கியமானது மட்டுமல்ல; துல்லியம்தான் அனைத்துமே. நாங்கள் அறுவைசிகிச்சை செய்யும்போது உடல் அமைப்பை மிகத்தெளிவாகவும், விரிவாகவும் காண்பதற்கு O ARM எங்களுக்கு உதவுகிறது. சிகிச்சையின் விளைவில் கணிசமான மாற்றத்தை இது செய்கிறது. கையில் ஒரு 3D படத்தை வைத்துக் கொண்டு அறுவைசிகிச்சையை செய்வது போன்றது இது. சிக்கலான முதுகுத்தண்டு ஊனத்தை சரிசெய்தல், புற்றுக்கட்டிகளை வெட்டி அகற்றுதல் மற்றும் மிக குறைவான ஊடுருவலுள்ள செயல்முறைகள் ஆகியவற்றை இந்த O-ARM சாதனத்தின் மூலம் அதிக துல்லியத்தோடும், நம்பிக்கையுடனும் இப்போது செய்ய முடியும். இது வெறுமனே ஒரு தொழில்நுட்ப முன்னேற்றம் மட்டுமல்ல; எமது நோயாளிகளுக்கு அதிக பாதுகாப்பு அளிக்கும் கவசம் என்றே இதைக் கூறலாம். சென்னையில் மூளை நரம்பியல் அறுவைசிகிச்சையில் ஒரு மாபெரும் பாய்ச்சலை இது குறிக்கிறது” என்று கூறினார்.
 
ரேடியல் சாலை காவேரி மருத்துவமனையின் மூளை & முதுகுத்தண்டிற்கான காவேரி மையத்தின் இயக்குநரும், நரம்பு அறிவியல் துறையின் குழு வழிகாட்டியுமான டாக்டர். கிரிஷ் ஶ்ரீதர் பேசுகையில்:
 
“எந்தவொரு மூளை நரம்பியல் மருத்துவச் செயல்முறையின் மைய அம்சமாக இருப்பது நோய்க்கு தீர்வுகாணும் அதே வேளையில் மூளை நரம்பியலின் இயக்கத்தை பாதிப்பின்றி நீடிக்கச் செய்வதற்கான தேவையாக இருக்கிறது. இந்த சமநிலைக்கு மிக நுட்பமான, நேர்த்தியான கருவிகள் தேவைப்படுகின்றன. ஸ்டெல்த் நேவிகேஷன் வசதி கொண்ட O-ARM, அறுவைசிகிச்சைகளை நாங்கள் திட்டமிடுகிற மற்றும் செயல்படுத்துகிற முறையில் மேம்பட்ட மாற்றத்தை ஏற்படுத்துகிறது. நிகழ்நேரத்திலேயே அறுவைசிகிச்சையை அகக்கண்வழியாக காணவும், அறுவைசிகிச்சைக்கான பாதையை கடந்து செல்லவும் மற்றும் உறுதி செய்யவும் தேவையான திறனை இது எங்களுக்கு வழங்குகிறது. நோயாளிகளை பொறுத்தவரை, குறைவான ஊடுருவலுள்ள செயல்முறைகள், குறைவான இடர்கள் மற்றும் விரைவாக குணமடைதல் ஆகிய ஆதாயங்கள் இதனால் சாத்தியமாகின்றன. இச்சாதனத்தை அறிமுகம் செய்வதில் முதல் மருத்துவமனை என்ற பெருமையை பெறுவதற்கும் கூடுதலாக சரியான நடவடிக்கையை எடுப்பது என்பதாகவே இந்நடவடிக்கை அமைகிறது. சென்னையிலேயே இந்த மிக நவீனமான, நோயாளியின் நலனை மையமாகக் கொண்ட நரம்பியல் அறுவைசிகிச்சை சேவையை கிடைக்குமாறு செய்வதற்கு எடுக்கப்பட்ட மிகச்சிறந்த நடவடிக்கையாக இது இருக்கிறது” என்று குறிப்பிட்டார்.
 
மூளை நரம்பியல் அறுவைசிகிச்சையில் ஒரு மில்லி மீட்டர் அளவுகூட மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தக்கூடும். O-ARM-ன் 3D இமேஜிங் மற்றும் நிகழ்நேர பின்னூட்ட தகவல் வசதிகளானது, நிகரற்ற துல்லியத்துடன் அறுவைசிகிச்சையை நாங்கள் செய்வதற்கு கூடுதல் திறனை வழங்குகிறது. எமது நோயாளிகளுக்கு, பாதுகாப்பான அறுவைசிகிச்சைகள், மயக்க மருந்தின் கீழ் குறைவான நேரமே இருப்பது மற்றும் விரைவாக குணமடைந்து இயல்பு நிலைக்குத் திரும்புவது என்ற ஆதாயங்கள் இதில் கிடைக்கின்றன. அறுவைசிகிச்சை நிபுணர்களுக்கு இச்சாதனம் ஒரு சிறப்பான வரமாகவே இருக்கிறது” என்று ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையின் நரம்பியல் அறுவைசிகிச்சை துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். ஷியாம் சுந்தர் கூறினார்.
 
ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையின் முதுகுத்தண்டு அறுவைசிகிச்சை துறையின் தலைவர் டாக்டர். G பாலமுரளி இத்தொழில்நுட்பம் குறித்து கூறியதாவது:
 
“முதுகுத்தண்டின் நுட்பமான, மென்மையான பாகமாக முதுகுத்தண்டு இருப்பதால் அறுவைசிகிச்சையில் ஏற்படும் ஒரு மிகச்சிறிய பிழையும் கூட நோயாளிக்கு நீண்டகால பாதிப்பை விளைவித்து விடும். அத்துடன் சிகிச்சைக்கு பிறகு நோயாளிகளால் அவர்களாகவே எழுந்து நடமாட முடியுமா அல்லது அவர்களின் வாழ்க்கைத்தரம் பாதிக்கப்படுமா என்ற கேள்வியும், அச்சமும் முதுகுத்தண்டு அறுவைசிகிச்சையோடு எப்போதும் சேர்ந்தே எழுகிறது. இந்நாட்டில் வெகு சில மையங்களே இந்த O-ARM சாதனத்தைக் கொண்டிருக்கும் நிலையில் இதனை சென்னையில் அறிமுகப்படுத்தும் முதல் மருத்துவமனை என்ற பெருமையை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை பெறுகிறது. உலகில் கிடைக்கக்கூடிய மிகச்சிறந்த தொழில்நுட்பம் இதுவே; செயற்கை நுண்ணறிவு மற்றும் மெய்நிகர் உணர்வு விரிவாக்கத்துடன் கூடிய ரோபோடிக் முதுகுத்தண்டு அறுவைசிகிச்சைக்கு இது நிகரானதாகும்”.
 
முதுகுத்தண்டு பராமரிப்பில், தண்டுவட இணைப்பு அறுவைசிகிச்சைகள், பக்க வளைவுகளை சரிசெய்தல், இடைத்தட்டுகளை மாற்றுதல், புற்றுக்கட்டிகளை அகற்றுதல் போன்றவற்றிற்கான சிகிச்சைகளில் இது பயன்படுத்தப்படுகிறது. மூளை-நரம்பியல் அறுவைசிகிச்சையில், ஆழமான இடத்திலிருக்கிற மூளைப் புண்கள், மூளைக் காயம், மண்டையோட்டின் அடிப்பகுதியில் பழுதுநீக்கல்கள் ஆகியவை தொடர்பான அறுவைசிகிச்சைகளுக்கு ஆதரவளிக்கிறது. எலும்பியல் சிகிச்சைகளில், இடுப்புக்கூடு எலும்பு முறிவுகளுக்கான சிகிச்சைகளிலும், சிக்கலான எலும்பு மறுக்கட்டமைப்புகளிலும், மூட்டுகளில் திருத்தங்கள் செய்வதற்கும், எலும்பு புற்றுநோய்களை துல்லியமாக அகற்றுவதற்குமான சிகிச்சைகளிலும் இது உதவுகிறது. 
 
காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் இணை-நிறுவனரும், செயலாக்க இயக்குநருமான டாக்டர். அரவிந்தன் செல்வராஜ் இது குறித்து கூறியதாவது:
 
“நோயாளிகளின் பாதுகாப்பே எமது முதன்மையான முன்னுரிமையாக எப்போதும் இருந்து வருகிறது. நாங்கள் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையிலும் இந்த பொறுப்புறுதியே அடிப்படை காரணமாக இருக்கிறது. சென்னையில் முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் O-ARM அறுவைசிகிச்சை சாதனத்தின் மூலம், நோயாளியின் நலனை முதலிடத்தில் வைக்கும் ஒரு நவீன தொழில்நுட்பத்தை வழங்குவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். அறுவைசிகிச்சையின் துல்லியத்தை இச்சாதனம் மேம்படுத்துகிறது, இடர்வாய்ப்புகளை குறைக்கிறது மற்றும் அறுவைசிகிச்சைக்கு பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பும் காலஅளவை கணிசமாக மேம்படுத்துகிறது. சென்னையில் ஸ்டெல்த் நேவிகேஷன் உடன் கூடிய O-ARM சாதனத்தை அறிமுகம் செய்திருப்பதன் வழியாக இன்றைய காலகட்டத்தில் கிடைக்கக்கூடிய அதிக பாதுகாப்பான, அதி நவீன சிகிச்சை பராமரிப்பு எமது நோயாளிகள் பெறுவதை நாங்கள் உறுதி செய்கிறோம். உலகத்தரம் வாய்ந்த புத்தாக்கத்துடன் கனிவான சிகிச்சையையும், ஒருங்கிணைத்து வழங்கும் எமது இலட்சியத்தையும், குறிக்கோளையும் இச்சாதனத்தின் அறிமுகம் வலுவாக எடுத்துக் கூறுகிறது.”

வல்லமை விமர்சனம்

VALLAMAI MOVIE REVIEW SOON…

இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள்!

சென்னை:

இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கம் திருவள்ளூர் தெற்கு மாவட்டம் மாதவரம் மத்திய சர்க்கிள் 20 ஆவது வட்ட சார்பில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 135 வது பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாதவரம் நாகராஜ் தலைமை தாங்கினார்.

பிரசன்னா வெங்கடேஷ், பாலசுப்பிரமணி, பிரகாஷ் குமார், புரசை ரமேஷ் கண்ணா, குமார், ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். நிகழ்ச்சிக்கு தாஸ், வெங்கடேசன், சகாதேவன், அருண் பிரசாத், மதன், சதீஷ்குமார், லட்சுமி ஜெகன்மோகன், ராஜேஸ்வரி, ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். ஜெஸிதிருமலை வரவேற்புரை வழங்கினார். சம்பத், டில்லி பாபு நிகழ்ச்சி ஏற்பாடு செய்தனர். இந்த நிகழ்ச்சியில் அப்பகுதி மக்கள் பலர் கலந்து கொண்டு ஊக்குவித்தனர். 

சூரி நடிக்கும் மண்டாடி படம்!

சென்னை: 

ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் 16வது தயாரிப்பாக உருவாகும் “மண்டாடி”. சூரி ஹீரோவாக நடிக்க, மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் Sports Action Drama படமாக உருவாகிறது. 

பிரபலமான தயாரிப்பு நிறுவனமான ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட், திரு எல்ரெட் குமார் தலைமையில், தனது 16வது தயாரிப்பு முயற்சியாக “மண்டாடி” எனும் புதிய திரைப்படத்தை உருவாக்குவதை பெருமையுடன் அறிவிக்கிறது. உணர்வும் உறுதியும் கலந்த, ஆழமான கதையுடன் கூடிய இந்த விளையாட்டு ஆக்‌ஷன் டிராமா திரைப்படம், பாரம்பரிய சூழலோடு எதிர்பார்ப்புகளை தூண்டும் படமாக அமையவிருக்கிறது.

“செல்ஃபி” என்ற தனது முதல் படத்தின் மூலம் பாராட்டைப் பெற்ற இயக்குநர் மதிமாறன் புகழேந்தி, இப்படத்தையும் எழுதி இயக்குகிறார். கடந்த படத்தைவிட பெரிய களம் மற்றும் ஆழமான உணர்வுகளை மையமாகக் கொண்டு இந்த படத்தில் களம் இறங்கி இருக்கிறார். 

இப்படத்தில்  கதாநாயகனாக சூரி நடிக்கவுள்ளார். கதையம்சம் கொண்ட  திரைப்படங்களில் தனது நடிப்புத்திறனை நிரூபித்து வரும் அவர், இப்படத்தினால் மேலும் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்வார். இப்படத்தின் மூலம் தெலுங்கு நடிகர் சுஹாஸ் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார், இதனால் படம் தெற்கிந்தியாவில் பரந்த வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.கதா நாயகியாக மஹிமா நம்பியார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சத்யராஜ், ரவீந்திரா விஜய், அசுத் குமார், சாச்சனா நமிதாஸ் ஆகியோர் தங்களது திறமையான நடிப்பின் மூலம்  உணர்வுப்பூர்வான இந்த கதைக்கு பலமளிக்க போகின்றனர்.

இயக்குநர் மதிமாறன் புகழேந்தி படத்தை பற்றி கூறியதாவது:

“எனது கனவைப் புரிந்து கொண்டு, என் கதையை கேட்பதற்கு, இந்த வாய்ப்பை அளித்த எல்ரெட் சார் மற்றும் வெற்றிமாறன் சார்க்கு நான் மனமார்ந்த நன்றி தெரிவிக்கிறேன். சூரி sir ன் காமெடியன் to கதாநாயகன் நடிப்பு என்னை வெகுவாக கவர்ந்தது. அவருக்கென்று எழுதப்பட்ட இந்த கதாபாத்திரம் எனக்கே  நெகிழ்ச்சியாக இருந்தது. சூரி சாரின்  விஷன் மற்றும் அவர் கதை தேர்ந்தெடுக்கும் விதம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.  ‘மண்டாடி’ திரைப்படம் அவருடைய நடிப்பு வாழ்க்கையில் ஒரு முக்கியமான படியாக அமையும். மேலும் இந்த கதையில் வரும் கதாபாத்திரத்திற்கு வெறும் நடிப்பு மட்டும் போதாது. கூடவே ஒரு நடிகரின் உடல் மற்றும் மன வலிமையும் அதிகம் தேவைப்பட்டது — அதை சூரி sir போன்றவர்களால் மட்டுமே பூர்த்தி செய்ய முடியும்.

வெற்றிமாறன் sir, படத்தின் கிரியேட்டிவ் புரொட்யூசராக இருக்கின்றது எனக்கு ஒரு ஊக்கமும் வழிகாட்டுதலுமாக இருக்கிறது. ஜி.வி. பிரகாஷ் இசையும், எஸ்.ஆர். கதிர் அவர்களின் ஒளிப்பதிவும் சேர்ந்து, உண்மையான உணர்வுகளைத் தரும் விளையாட்டு ஆக்‌ஷன் படமாக உருவாகிக்கொண்டு வருகிறது.”

படத்தின் முக்கிய தொழில்நுட்பக் குழு:

இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்

ஒளிப்பதிவு: எஸ்.ஆர். கதிர் ISC

கலை இயக்கம்: டி.ஆர்.கே. கிரண்

எடிட்டிங்: பிரதீப் ஈ. ராகவ்

ஆக்‌ஷன்: பீட்டர் ஹைன்

சத்த ஒலி வடிவமைப்பு: பிரதாப்

VFX: ஆர். ஹரிஹரசுதன்

மற்ற குழுவினர்:

இணை தயாரிப்பு: வி. மணிகண்டன்

உடை வடிவமைப்பு: தினேஷ் மனோகரன்

நடன அமைப்பாளர்: ஆசர்

கூடுதல் எழுத்து: ஆர். மோகனவசந்தன், திரள் சங்கர்

மேக்கப்: என். சக்திவேல்

உடைதாரர்: நாகு

DI: கிளெமெண்ட்

பப்ளிசிட்டி ஸ்டில்ஸ்: கபிலன்

ஸ்டில் புகைப்படம்: ஜி. ஆனந்த் குமார்

விளம்பர வடிவமைப்பு: எஸ்தடிக்ஸ் குஞ்சம்மா

தயாரிப்பு நிர்வாகி: எஸ்.பி. சொக்கலிங்கம்

நிர்வாக தயாரிப்பாளர்: ஜி. மாகேஷ்

பி.ஆர்.ஓ: ரேகா

மண்டாடி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏப்ரல் 19ஆம் தேதி ஊடகங்களின் முன்னிலையில் மிக விமர்சையாக வெளியிடப்பட்டது. அதன் தாக்கம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

ஏற்கனவே இப்படத்தின் look test  முடிந்த கையோடு pre production பணிகளுக்காக பட குழு ராம்நாடு சுற்றியுள்ள கடற்கரை பகுதிகளில் குழுமி இருக்கிறது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது. காதல், விடாமுயற்சி, மீட்பு மற்றும் உறவுகளின் பின்னணியுடன் விளையாட்டு உலகத்தை மையமாகக் கொண்ட உணர்ச்சிப்பூர்வமான பயணமாக, இது உருவாகிறது. 

பத்திரிகையினருக்காக “மண்டாடி” படக்குழுவால் தயாரிக்கப்பட்ட படகுப் பந்தய உலகம் குறித்த ஒரு ஆவண வீடியோ வெளியிடப்பட்டது. அதில் உள்ள டிராமா, இப்படத்தின் வித்தியாசமான பின்னணியைக் காட்டியது.

மண்டாடி என்றால் என்ன?

காற்றையும், அலையையும், கடல் நீரோட்டத்தையும் நன்கு கணித்து, மீன்களின் வரத்தையும் அவற்றின் திசைவழிப் போக்கையும் பற்றிய நல்ல அறிவையும்  அனுபவத்தையும் பெற்ற ஒருவர், மீன்பிடிக்கச் செல்லும்போது படகை வழிநடத்தக்கூடிய தலைமை நிலையில் இருப்பார். அவரையே இராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் மண்டாடி என்று அழைக்கின்றனர்.

மீன்பிடிக்கப் போகும் போது படகையும் உடன் வரும் மீனவர்களையும் வழிநடத்துவதைப் போல, பாய்மரப் படகுப் போட்டியின் போதும் வழிநடத்தக்கூடியவர் மண்டாடி.

ஆளுநர் தமிழ்நாட்டிற்கு எதற்கு?- இந்திய சுயராஜ்ய கட்சி தலைவர் ராம்குமார் கேள்வி!

சென்னை:
 
இந்திய சுயராஜ்ய கட்சியின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னை வடபழனியில் தலைவர் ராம்குமார் தலைமையில்  நடைபெற்றது. அதில்
 
நிறுவனர் & தலைவர் ராம்குமார் கூறுகையில்: 
 
இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு ஆளுநர் பதவி என்பது தேவையற்றது. காலம் காலமாக ஒன்றியத்தில் எந்த ஆட்சி வருகின்றதோ யாருடைய ஆட்சி கைக்கு வருகின்றபோது அவர்களின் கைப்பாவையாக அவர்கள் ஆளாத மாநிலங்களில்  ஆளுநர்களை கொண்டு ஆட்சியைப் பிடிக்க பார்க்கின்றனர் அல்லது எல்லா விதத்திலும் இடைஞ்சல்களை தருகின்றனர். மாநிலத்திற்கு கவர்னர்கள் என்பதே தேவையற்றதாகின்றது. மாநில அரசின் ஆட்சியை கண்காணிக்க ஜனாதிபதி உள்ளார். மாநிலத்திற்கு ஒத்திசைவாகவும் உதவியாகவும் இருக்க வேண்டிய ஆளுநர், மாறாக பெரும் தலைவலியாக இருந்துள்ளார் என்பதே வரலாறு. மத்தியில் ஆளாத அரசு மாநிலத்திற்கு எதிராக ஆளுநர் மூலம் எதிர்க்கட்சித் தலைவரை விட மிக மிக மோசமான துரோகியாக செயல்பட வைக்கிறது. மிக முக்கியமாக ஆளுநர்களுக்கு என்று மாநிலத்தில் எந்த அதிகாரமும் இல்லாத போது எதற்காக கவர்னர் பதவி என்பது கேள்விக்குறியாக உள்ளது. எனவே ஆளுநர் பதவியை ஒட்டுமொத்தமாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.
 
நடிகர் விஜய், அரசியலில் திடீர் எம்ஜிஆர் ஆக முயற்சிக்கிறார். தங்க ஸ்பூனால் சாப்பிட்டு எப்போதும் ஏசியில் இருந்து வளர்ந்தவரால் எப்படி ஏழை மக்களின் துயர் துடைக்க பொது வாழ்வில் ஈடுபட முடியும். இதுவரையில் பொதுவெளியில் வந்து அவர் எந்த ஒரு போராட்டமும் பேரணியோ ஊர்வலமோ மறியலோ நடத்தியதே இல்லை. நேரடியாக ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு இதுவரையில் நடந்தது இல்லை. முதலாளித்துவ அடிப்படையில் விஜய் செயல்படுகின்றார். 
 
என்று கூறினார்.

டென் ஹவேர்ஸ் விமர்சனம் RATING 3/5

அறிமுக இயக்குநர் இளையராஜா கலியபெருமாள் இயக்கத்தில் சிபிராஜ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘டென் ஹவர்ஸ்’.

விமர்சனம்:

படத்தின் ஆரம்பத்திலேயே இளம் பெண் ஒருவர் கடத்தப்படுகிறார், அதை தொடர்ந்து அவரது தாய் மற்றும் தாத்தா இருவரும் காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளிக்கின்றனர். அதன் அடிப்படையில் உடனடியாக விசாரணை செய்கிறார் இன்ஸ்பெக்டர் சிபிராஜ். உடன் சப் இன்ஸ்பெக்டராக கஜராஜ் தோள் நின்று பலம் சேர்க்கிறார். பெண் கடத்தப்பட்ட வழக்கை சிபிராஜ் விசாரித்துக் கொண்டு இருக்கும்போதே, கண்ட்ரோல் ரூமுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் போன் கால் ஒன்று வருகிறது. இதில் தனியார் பேருந்தில் பெண் ஒருவர் கொடுமைப்படுத்தப்படுகிறார், அவரை காப்பாற்றுங்கள் என ஆண் ஒருவர் தகவல் தெரிவிக்கிறார். இதை அறிந்து அந்த பேருந்தை செக்போஸ்டில் போலீஸ் பிடிக்கிறார்கள். பேருந்திற்குள் சிபிராஜ் சென்று பார்க்க, அங்கு கண்ட்ரோல் ரூமிற்கு போன் செய்த நபர் இறந்து கிடக்கிறார். பிறகு அந்த பெண் கிடைத்தாரா? காரணம் என்ன?! என்பதே மீதி கதை…..

சிபிராஜ், போலீஸ் அதிகாரியாக கலக்கி இருக்கிறார். நெற்றியில் விபூதி பூசி விசாரணைக்கு புறப்படும் இடங்களில் கைதட்டல் பெறுகிறார். புலிக்கு பிறந்தது பூனையாகுமா? என்ற வரிகள் நியாபகம் வருகிறது. ராஜ் அய்யப்பா, ஜீவா ரவி, முருகதாஸ், திலீபன், உதயா, தங்கதுரை, சரவண சுப்பையா, சாருமிஷா, நிரஞ்சனா என அனைவருமே தங்கள் கதாபாத்திரங்களுக்கு சிறப்பு சேர்த்துள்ளனர். ஜெய் கார்த்திக்கின் ஒளிப்பதிவில் காட்சிகள் பரபரப்பாய் நகருகிறது. பஸ்சுக்குள்ளேயே பயணிக்கும் உணர்வை தந்துள்ளார். கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் இசை படத்துக்கு உயிரோட்டம் தருகிறது.

சஸ்பென்ஸ் சை இன்னும் கூடுதலாக வைத்திருக்கலாம்…. வில்லன் கதாபாத்திரம் மாஸ் இல்லை…

மொத்தத்தில் இந்த ‘டென் ஹவேர்ஸ்’ விறுவிறுப்பு….

RAJ KUMAR- CINEMA REPORTER

‘நாங்கள்’ விமர்சனம் RATING 2.9/5

‘கலா பவஸ்ரீ கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில், ஜி.வி.எஸ் ராஜு தயாரிப்பில், இயக்குனர் அவினாஷ் பிரகாஷ் எழுதி இயக்கியிருப்பதோடு, ஒளிப்பதிவினையும் செய்திருக்கும் படம் தான் ‘நாங்கள்’

விமர்சனம்:

ஊட்டியில் தனியார் பள்ளி நடத்தி வருபவரான அப்துல் ரபே, கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்கிறார். அப்துல் ரபே வுக்கு கார்த்திக், கெளதம், துருவ் என மூன்று மகன்கள் இருக்கிறார்கள். தந்தையின் மிரட்டலுக்கு பயந்து வேலையாட்கள் போல நடந்து கொள்ளும் குழந்தைகள், ஒருகட்டத்தில் வெகுண்டு எழுகிறார்கள். கேரளாவில் உள்ள தாய் பிரார்த்தனாவிடம் செல்கிறார்கள். ஆனால் தாயின் கஷ்டத்தை உணர்ந்து மீண்டும் தந்தையிடம் திரும்புகிறார்கள். மகன்களின் எதிர்காலத்துக்காக சில முடிவுகளை தைரியமாக அப்துல் ரபே எடுக்கும்போது பிரார்த்தனா வந்து சேருகிறார். பிறகு அப்துல் ரபே என்ன செய்தார் என்பதே கதை…

கண்டிப்பான, மகன்களை அடிக்கும், மிரட்டும்  தந்தையாக அப்துல் ரபே நடிப்பு  மிரட்டுகிறது.  மிதுன், ரித்திக், நிதின் ஆகியோரின் அப்பாவித்தனமான நடிப்பு எதார்த்தமாக இருக்கிறது. சோகமான காட்சிகளை மட்டும் கருப்பு-வெள்ளையில் காட்டி அவினாஷ் பிரகாஷ் ஒளிப்பதிவில் புதுமை செய்துள்ளார். பின்னணி இசை ஓகே. வளர்க்கும் நாயை அப்துல் ரபே அடிக்கும் போது சிறுவன் தந்தையிடம் கோபம் கொள்ளும் காட்சி எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்துகிறது. 

கதை ஒரே குழப்பமாக இருக்கிறது…. பல காட்சிகள் பொறுமையை சோதிக்கிறது…. இருட்டு வீடு ஏன்? என்று சிந்திக்க வைக்கிறது….

மொத்தத்தில் இந்த ‘நாங்கள்’ பொறுமை இருந்தால் பார்க்கலாம்.

RAJ KUMAR- CINEMA REPORTER

சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி! டோனிக்கு விசில் அடித்து பாராட்டு!!

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. குறிப்பாக, உலகெங்கிலுமுள்ள சென்னை அணியின் தீவிர ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். 

லக்னௌவில் நடைபெற்ற 30-ஆவது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்று பந்துவீசிய சென்னை அணி, லக்னௌவை ரன் திரட்ட முடியாமல் நன்றாக கட்டுப்படுத்தினர். சென்னை அணியில் நூர் அகமது 4 ஓவர்கள் பந்துவீசி வெறும் 13 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 166 ரன்களை எடுத்த்து.

அடுத்து களமிறங்கிய சென்னை அணி பவர்- ப்ளே ஓவர்களில் 50 ரன்களுக்கு மேல் திரட்டி அசத்தியது. 6 பௌண்டரிகள் விளாசிய ஷேக் ரஷீத் 27 ரன்களுக்கு ஆட்டமிழக்க அதன்பின் சென்னையின் ரன் வேகம் கட்டுக்குள் வந்தது.

ஃபார்முக்கு திரும்புவார்கள் என்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ராகுல் திரிபாதி 9 ரன்களுக்கு(10 பந்துகளில்) நடையைக் கட்டினார்.) அடுத்து வந்த ஜடேஜா (7 ரன்கள்), தமிழக வீரர் விஜய் ஷங்கர்(9 ரன்கள்) ஆட்டமிழக்க தோனி களத்திற்கு வந்தார். அவருடன் துபே ஸ்ட்ரைக்கில் இருந்தார்.அப்போது கடைசி 5 ஓவர்களில் சென்னை அணிக்கு 56 ரன்கள் தேவைப்பட்டது.

கடைசி 2 ஓவர்களில் 24 ரன்கள் தேவைப்பட்டபோது, ஷர்துல் தாக்கூர் வீசிய 19-ஆவது ஓவரின் முதல் பந்து பௌண்டரி, இரண்டாவது பந்து (நோ-பால்) அதில் ஆஃப் சைடில் சிக்ஸர் பறக்கவிட்டார் ஷிவம் துபே. அதே ஓவரில் ஒரு வைட் பந்தும் வீசப்பட 19-ஆவது ஓவரில் சென்னை அணி 19 ரன்கள் திரட்டியது; டென்ஷனும் விட்டுப்போனது… கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 5 ரன்கள்தான் தேவை என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இறுதியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது.

போலி மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது!

கோவை மேட்டுப்பாளையம் சாலை, துடியலூரை அடுத்துள்ள ஜி.என்.மில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் ஜெபராஜ்(37). இவர், கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் உள்ள, கிறிஸ்துவ ஜெபக் கூடத்தில், மதபோதகராக பணியாற்றி வருகிறார். தவிர, கிறிஸ்துவ பாடல்களையும் இசை நிகழ்ச்சி நடத்தி பாடி வருகிறார். இவர், தமிழ்நாடு மட்டுமின்றி, வெளி மாநிலங்களிலும், வெளி நாடுகளிலும் தொடர்ந்து இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். இந்நிலையில், இவர் மீது 2 சிறுமிகள் பாலியல் புகார் கூறினர்.

அதாவது, கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள, ஒரு வீட்டில் கடந்த 11 மாதங்களுக்கு முன்னர், ஒரு விழா நடந்தது. இதில் ஜான் ஜெபராஜ் கலந்து கொண்டார். அப்போது அந்த விழாவுக்கு வந்திருந்த 17 வயது சிறுமி மற்றும் 14 வயது சிறுமி ஆகியோருக்கு ஜான்ஜெபராஜ் பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதை வெளியே யாரிடமும் கூறக்கூடாது என அவர் மிரட்டியதால், அச்சிறுமிகளும் இதுதொடர்பாக வெளியே யாரிடமும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், கடந்த 6-ம் தேதி இந்த தகவல் கோவை சைல்டு லைன் பிரிவு அதிகாரிகளுக்கு தெரியவந்தது. தொடர்ந்து அவர்கள் கோவை மாநகர காவல்துறையின், மத்தியப் பகுதி அனைத்து மகளிர் போலீஸாரிடம் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீஸார் போக்சோ பிரிவின் கீழ் மதபோதகர் ஜான் ஜெபராஜ் மீது வழக்குப்பதிந்தனர். இதையறிந்த அவர் தலைமறைவானார். மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில், தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸார் அவரை தேடி வந்தனர். பெங்களூரு, தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் தனிப்படை போலீஸார் முகாமிட்டு ஜான் ஜெபராஜை தேடி வந்தனர். அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீசும் வழங்கப்பட்டது.

இச்சூழலில், மூணாறு பகுதியில் அவர் பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸார் அங்கு சென்று கண்காணித்து இன்று (ஏப்.13) அவரைப் பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரை கோவை, காந்திபுரத்தில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தனர். தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஜான் ஜெபராஜ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

அரசு பேருந்து – கார் மோதி 4 பேர் உயிரிழப்பு!

திருவண்ணாமலையை அடுத்த சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சோமாசிப்பாடி அருகே காட்டுக்குளம் என்ற இடத்தில் சென்னையில் இருந்து வந்த அரசு பேருந்தும், பெங்களூருவில் இருந்து வந்த காரும் இன்று அதிகாலையில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 4 பேரும் உயிரிழந்தனர்.

விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற கீழ்பென்னாத்தூர் காவல்துறையினர், பொதுமக்களுடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காரில் உயிரிழந்த 4 பேரது உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அவர்களது விவரங்களை சேகரித்தனர்.

இந்த விபத்தில் உயிரிழந்த 4 பேரும் புதுச்சேரியைச் சேர்ந்த சதீஷ்குமார்(52), சைலேஷ்குமார்(38), ஸ்டாலின்(42), சரோப்(47) ஆகியோர் என்பதும், 4 பேரும் லாரி உரிமையாளர்கள் என்பதும், தொழில் ரீதியாக பெங்களூரு சென்றுவிட்டு புதுச்சேரிக்கு திரும்பியபோது விபத்தில் சிக்கி உயிரிழந்ததும் தெரியவந்தது.