நடிகர்கள்: தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா, நசீருதீன் ஷா, இந்திரன்ஸ்.
இயக்கம்: ராஜ்குமார் பெரியசாமி
இசை: சாய் அபயங்கர்
 
தமிழகத்திற்கும் ஆந்திராவிற்கும் இடையே நடைபெறும் செம்மரக் கடத்தலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் தான் ஓம் .
 
விமர்சனம்:
 
ஆந்திராவில் மிகப்பெரிய அளவில் செயல்பட்டு வரும் செம்மரக் கடத்தல் கும்பலைக் காவல்துறை எப்படிக் கண்டுபிடிக்கிறது என்பதையும், அந்தக் கும்பலுக்குள் ஊடுருவி ரகசியமாகப் புலனாய்வு செய்யும் காவல்துறை அதிகாரியின் சவால்களையும் மையமாகக் கொண்டு கதை நகர்கிறது.
 
தனுஷ்-பழனிவேல் என்ற காவல்துறை அதிகாரி, தனது உண்மையான அடையாளத்தை மறைத்துக்கொண்டு திருக்குமரன் என்ற பெயரில் கடத்தல் கும்பலுக்குள் நுழைகிறார். அங்கே ஏற்படும் எதிர்பாராத சம்பவங்கள், உறவுகளுக்கு இடையிலான உணர்வுப் போராட்டங்கள், உயிரைப் பணயம் வைத்து மேற்கொள்ளும் ரகசிய நடவடிக்கைகள் என அடுத்தடுத்த திருப்பங்களுடன் திரைக்கதை பயணிக்கிறது.
 
தனுஷ் தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற உடல்மொழி, அதிரடியான நடிப்பு, உணர்ச்சிப்பூர்வமான வெளிப்பாடு என அனைத்திலும் கவனம் ஈர்க்கிறார். மம்மூட்டி தனது அனுபவம் வாய்ந்த நடிப்பால் திரையில் தனி முத்திரை பதிக்கிறார்.
 
சாய் பல்லவி- நித்யா ரெட்டி என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் கம்பீரமாகவும், துணிச்சலாகவும் நடித்துள்ளார். ஸ்ரீலீலா தனது கதாபாத்திரத்தின் மூலம் நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகளைக் கொண்டுவருகிறார்.
 
சாய் அபயங்கரின் பின்னணி இசை படத்தின் விறுவிறுப்பை அதிகரிக்கிறது. குறிப்பாக, அதிரடிக் காட்சிகளிலும் புலனாய்வு தொடர்பான காட்சிகளிலும் பின்னணி இசை கூடுதல் பலம் சேர்க்கிறது.
ஒளிப்பதிவு, சண்டைக்காட்சிகள், படத்தொகுப்பு ஆகியவை படத்தின் கதைக்களத்திற்கு உறுதுணையாக அமைந்துள்ளன.
 
பலம்:
சாய் பல்லவியின் வலுவான கதாபாத்திரம்.
 
பலவீனம்: 
சில இடங்களில் திரைக்கதை மெதுவாக நகர்கிறது.
 
இறுதி தீர்ப்பு:
வணிக சினிமா பாணியிலிருந்து விலகி, செம்மரக் கடத்தல், காவல்துறை புலனாய்வு, ரகசிய நடவடிக்கை அதிரடியையும், புலனாய்வையும், உணர்ச்சிகளையும் விரும்பும் ரசிகர்களுக்கு ஓம் ஒரு திரையரங்க அனுபவம்!
 
M.GIRIJA- CINEMA REPORTER

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here