சேலம் மாவட்டம், ஆத்தூர் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் 30 வயதுடைய கணேசன். இவருக்கும் தென்னங்குடி பகுதியை சேர்ந்த 22 வயதுடைய நந்தினி என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. கணேசன் விவசாய கூலி தொழில் செய்து வந்த நிலையில் மனைவி நந்தினி அருகில் உள்ள தனியார் மில் பகுதியில் வேலை பார்த்து வருகிறார். கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்த நிலையில் கணேசன் நந்தினியை அடித்து துன்புறுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது.


தொடர்ந்து கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் கணவனை பிரிந்து வாழ முடிவு செய்த நிலையில் மனைவி நந்தினி குழந்தையை தன்னுடன் அழைத்துக் கொண்டு தென்னங்குடி பாளையம் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் வேலை முடிந்து வீட்டுக்குச் சென்ற கணவன் வீட்டில் மனைவி இல்லாததால் உடனடியாக தென்னங்குடி பாளையத்தில் உள்ள தனது மாமியார் சங்கீதா வீட்டிற்கு சென்று மனைவி மற்றும் குழந்தையை அழைத்துக் கொண்டு கோட்டை பகுதியில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளார்.


பின்னர் வீட்டில் வைத்து மனைவி நந்தினி கணேசனை தாக்கியதாக சொல்லப்படுகிறது. அப்போது நந்தினி சத்தமிட்டு அலறவே கணேசன் மனைவியை அழைத்துக்கொண்டு உப்பேடை பகுதியில் உள்ள அய்யனார் கோயில் ஏரி பகுதிக்கு அழைத்து சென்று அவரை கல்லால் தலை மற்றும் கால்களில் தாக்கியுள்ளார். மேலும் அவரது ஆடைகளையும் கலைத்து கடுமையாக தாக்கியதில் வலி தாங்காமல் மனைவி நந்தினி அங்கிருந்து தப்பி ஓடி அருகே உள்ள ஒரு வீட்டில் துணி வாங்கி அணிந்து கொண்டு தந்து தாய் வீட்டிற்கு சென்று நடந்தவற்றை கூறியுள்ளார்.

அதனை தொடர்ந்து அவர்கள் நந்தினியை ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கணேசன் மீது வழக்கு பதிவு செய்து நந்தினியிடம் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து இது குறித்த புகாரின் அடிப்படையில் ஆத்தூர் நகர போலீசார் கணேசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மனைவியை கொடூரமாக ஆடைகளை கலைந்து தாக்கிய கொடூர கணவன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here