ன் பிச்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த், நாகர்ஜுனா, சௌபின் சாஹிர், உபேந்திரா, அமீர் கான், ஸ்ருதி ஹாசன், சத்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ள படம் தான் ‘கூலி’

விமர்சனம்:

விசாகப்பட்டினத்தில் கதை துவங்குகிறது. துறைமுகத்தையே கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பெரும் முதலாளியான சைமன் கப்பல்வழி இறக்குமதியைப் பயன்படுத்தி கடத்தல் தொழில்களில் ஈடுபட்டு வருகிறார். இவரின் வலது கையான சௌபின் சாகீர் கூலிகளைக் கட்டுப்பாட்டில் வைத்து பிரச்னைகள் வந்தால் அவர்களைக் ‘காலி’ செய்யும் பணிகளைப் பார்த்துக்கொள்கிறார். மறுபுறம் சென்னையில் அமைதியாக மேன்ஷன் நடத்திவரும் தேவாவுக்கு தகவல் கிடைத்ததும் விசாகப்பட்டினம் செல்கிறார். மறைந்த ராஜசேகரின் இறப்பில் சந்தேகம் கொள்ளும் தேவா, கொலையாளிகளைத் தேடி பழிவாங்குகிறாரா? இல்லையா? என்பதே கதை….

ரஜினியின் அசத்தலான என்ட்ரியுடன் படம் தொடங்கும்போதே நமக்கும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு விடுகிறது. அது நகர்ந்து நகர்ந்து ஒரு பழிவாங்கும் கதையாக மாறும்போது, ‘இது அதுவல்ல’ என்று வேறொரு குற்றச் சம்பவத்துக்குத் தாவுகிறது, திரைக்கதை. பழிவாங்குகிற கதையில் கடத்தல் ஒருபக்கம் உடல் உறுப்புகளைத் திருடும் செயல் ஒருபக்கம் என இந்தக் கதையின் மையம் எங்கெங்கோ செல்கிறது. முதல் பாதியில், அப்பாவியாக வந்து போகும் கதாபாத்திரங்களுக்கு, பின் பாதியில் வைத்திருக்கும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்டுகள், ரசிக்க வைப்பதோடு கதை மீதான ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன.

முழு திரையையும் ஆக்கிரமித்திருக்கும் ரஜினி, இந்த வயதிலும் எனர்ஜியுடன் நடித்திருக்கிறார். மூன்று மகள்களை வளர்க்கும் தந்தையாக, இயல்பாக வருகிறார் சத்யராஜ். சைமனாக நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நாகார்ஜுனா, ஸ்டைலாக இருக்கிறார். ப்ரீத்தியாக ஸ்ருதி ஹாசன், சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். 

ரஜினிகாந்த் ஒரே இடத்தில் நிற்கிறார், அனைத்து ரவுடிகளும் அவரிடம் சென்று அடி வாங்குகிறார்கள்…. இதெல்லாம் ஓவரா இல்லையாப்பா….. மோனிகா பாடல் தேவையா? என சிந்திக்க வைக்கிறது. படம் முழுவதும் அடியாட்களைக் கொல்வது, பிணங்களை எரிப்பது, புதுமையில்லாத திரைக்கதை என போதும் டா…. சாமி… எப்ப படத்தை முடிக்க போறீங்க என சலிப்பை ஏற்படுத்துகிறது….. கூலியில் ரஜினியைத் தவிர யார் நடித்திருந்தாலும் பெரிய தோல்விப்படமாக அமைந்திருக்கும். அப்ப இது வெற்றி படமா? என கேட்கிறீர்களா? கண்டிப்பா தோல்வி படம் தான் அதில் எந்த மாற்றமும் இல்லை….

மொத்தத்தில் இந்த ‘கூலி’ காலி…..

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here