வனிதா விஜயகுமார் இயக்கத்தில், ஜோவிகா விஜயகுமார் தயாரிப்பில், வனிதா விஜயகுமார், ராபர்ட் மாஸ்டர், ஷகீலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார் சீனிவாசன் என பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’
விமர்சனம்:
ராபர்ட்டும் வனிதாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டு தாய்லாந்தில் இருக்கும் பாங்காக்கில் வாழ்ந்து வருகின்றனர். ராபர்ட்டுக்கு 45 வயது வனிதாவுக்கு 40 வயது இருவரும் அங்கிள் ஆன்ட்டியாக இருக்கும் இந்த சமயத்தில் திடீரென வனிதாவிற்கு தான் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. இந்த வயதில் வேண்டாம் என ராபர்ட் மறுக்கிறார். இருந்தும் வனிதா விடாப்பிடியாக எப்படியாவது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என அரைகுறை ஆடையுடன் தன் கணவரை கவர முயற்சி செய்கிறார். பிறகு வனிதா கர்ப்பம் ஆனாரா? இல்லையா? என்பதே கதை.
படம் முழுவதும் ஆரம்பம் முதல் இறுதி வரை ஓவர் ரொமன்ஸ் தான். வனிதா 40 வயதைக் கடந்தும் ரொமான்டிக் காட்சிகள் மற்றும் அம்மாவாகத் துடிக்கும் காட்சிகள் அதற்கு அவர் போடும் திட்டங்கள் கொஞ்சம் பார்க்க வைக்கிறது. வனிதாவின் அம்மாவாக வரும் சகிலா தெலுங்கு பேசிக்கொண்டு நடிக்கும் காட்சிகள் நன்றாக காமெடி இருக்கிறது. நடிகை ஆர்த்தி அவரது வேலையை நிறைவாகச் செய்திருக்கிறார். பவர்ஸ்டார் ஒரு சீனில் வந்தாலும் சிரிக்க வைக்கிறார். கணேஷ் தனக்கு கொடுத்த வேலையை செய்திருக்கிறார். இந்த படத்தை குடும்பத்துடன் பார்க்க முடியாது…..
மைனஸ்: இசை சரியாக இல்லை, ஓவர் கிளாமர் காட்சிகள், இனி கதையை தேர்வு செய்யும் போது கூடுதல் கவனத்துடன் வனிதா தேர்வு செய்தால் நல்லது….
மொத்தத்தில் இந்த MRS&MR படம் ஓவர் கிளாமர்.

















