நடிகர் மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின் ஆகியோர் நடிப்பில் சசிகாந்த் இயக்கத்தில் இன்று நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான படம் ‘டெஸ்ட்’
விமர்சனம்:
சித்தார்த் ஒரு கிரிக்கெட் வீரராக உள்ளார். அவர் முன்னாளில் கொண்டாடப்பட்ட ஆட்டக்காரர், இந்நாளில் ஃபார்ம் இழந்துவிட்டார் என விமர்சனங்களுக்கு நடுவே தன்னை மீண்டும் நிரூபிக்க போராடுகிறார். மாதவன் நீரில் ஓடக்கூடிய எஞ்சினை வடிவமைத்து, அதற்கு அரசாங்க அனுமதி பெற போராடி வருகிறார். மாதவனின் மனைவி நயன்தாரா குழந்தை பேறுக்காக ஏங்கி அதற்கான சிகிச்சைகள் எடுத்து வருகிறார். இது ஒரு புறம் இருக்க கிரிக்கெட் போட்டியில் பெட்டிங் மூலம் பல கோடி சம்பாதிக்க திட்டமிடுகிறது ஒரு கும்பல். இவை அனைத்தையும் சுற்றி தான் கதை நகருகிறது. இதற்கு முடிவு தான் என்ன? என்பதே கதை…..
கடன் பிரச்சனை, மனைவியின் அழுத்தம் என உண்மையாக மனசோர்வு வந்தால் எப்படி இருப்பார்களோ அப்படியே மாதவன் நடித்து காட்டியுள்ளார். நயன்தாராவின் நடிப்பில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை என்றே சொல்லலாம். சித்தார்த் தனக்கு கொடுத்த வேலையை அப்படியே செய்துள்ளார். ஒரு பக்கம் நல்ல முறையில் வெற்றி பெற நினைக்கும் குழு, இன்னொரு பக்கம் அதில் மேட்ச் ஃபிக்சிங்க் செய்ய நினைக்கும் குழு. இப்படி கதையில் எல்லா சாத்தியங்களுக்கும் இரு பக்கங்களைக் கொடுத்திருக்கிறார்கள் எழுத்தாளர்கள் சுமந்த்குமார் மற்றும் சசிகாந்த். பின்னணி இசை ஓகே. விராஜின் ஒளிப்பதிவு உழைப்பை காட்டுகிறது.
படத்தில் தண்ணீரில் இருந்து பெட்ரோல் கண்டுபிடிப்பவர்களை மாதவன் கேலி செய்யும் காட்சி எதற்கு? என சிந்திக்க வைக்கிறது. கதை அழுத்தமாக இல்லை… சில காட்சிகள் பொறுமையை சோதிக்கிறது என்றே சொல்லலாம்.
மொத்தத்தில் இந்த ‘டெஸ்ட்’ ஒரு டிராமா கலவை…..
RAJKUMAR- CINEMA REPORTER

















