நாயகி பூர்ணிமா ரவி அப்பா டெல்லி கணேஷ், தாய் மற்றும் தங்கையுடன் வாழ்ந்து வருகிறார். திடீரென்று டெல்லி கணேசுக்கு உடல் நலம் குன்றியதால், குடும்ப பொறுப்பினை அவர் ஏற்கிறார். அதன் பிறகு காதல் தோல்வி, பிடிக்காத வேலை, மன அழுத்தம், ஒவ்வொரு நாளுமே துயரமாக கடந்து செல்கிறது. இதன் காரணமாக, பூர்ணிமா தன்னுடைய சிறு வயதில் பழகிய நபர்களை தேடிச் செல்கிறார். பயணம் என்ன ஆனது? வாழ்க்கை நிலைமை எப்படி போனது என்பதே கதை… 

பெரிய அளவில் விளம்பரம் இல்லை. பெரிய பெரிய ஸ்டார்கள் இல்லை. ஆனால் பயணத்தை பற்றிய யெல்லோ படம் நம்மை பெரிதும் கவர்கிறது. ஒரு மாற்றத்தை தேடி பயணம் செய்வது குறித்து பல படங்கள் வந்த போதிலும் யெல்லோ தனித்து தெரிகிறது. வாழ்க்கைச் சூறாவளியில் ஒவ்வொருவருக்கும் ஓர் இடைவெளியும், ஒரு துணையும் தேவை என்ற செய்தியை மென்மையாகச் சொல்ல முற்பட்டிருக்கிறார் இயக்குநர். 

படத்தில் நாயகியாக நடித்திருக்கும் பூர்ணிமா ரவி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தந்தையாக நடித்திருக்கும் டெல்லி கணேஷ் அனுபவ நடிப்பையும், சிறு வயது தோழியாக வரும் நமிதா கிருஷ்ணமூர்த்தி அழகான நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அபி ஆத்விக்கு ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.

மைனஸ்: கதை சுவாரஸ்யமாக இல்லை… வசனங்களில் கூடுதல் கவனம் தேவை…

மொத்தத்தில் இந்த ‘யெல்லோ’ வலியின் உணர்வு.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here