அருண்குமார் இயக்கத்தில் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷரா விஜயன், சித்திக் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் தான் ‘வீர தீர சூரன்’
விமர்சனம்:
மதுரை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் செல்வாக்கு மிக்க குடும்பத்தின் தலைவராக இருக்கும் ப்ரித்வி மற்றும் அவரது மகன் சுராஜ் வெஞ்சரமூடு ஆகியோர் ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொள்கின்றனர். அந்தப் பிரச்சினை எஸ்.பி. ஆபிஸர் எஸ்.ஜே சூர்யா காதுக்கு செல்கிறது. எப்பொழுது வாய்ப்பு கிடைக்கும் அப்பொழுது அவர்களை போட்டுத் தள்ள வேண்டும் என வெறியோடு சுற்றி கொண்டிருக்கும் எஸ்.ஜே. சூர்யா அவர்கள் மேல் என்கவுண்டர் பிளான் போடுகிறார். எஸ்.ஜே. சூர்யாவிடம் இருந்து தப்பிக்க ப்ரித்வி மற்றும் சுராஜ் ஆகியோர் முன்னாள் ரவுடியான விக்ரமிடம்(காளி) தஞ்சம் அடைகின்றனர். விக்ரம் இவர்களுக்கு உதவி செய்ய களத்தில் குதிக்கிறார். ஏற்கனவே விக்ரமுக்கும் எஸ்.ஜே. சூர்யாவுக்கும் முட்டல் மோதல் இருக்கிறது. அதைப் பயன்படுத்தி அவரை போட்டுத் தள்ள ப்ரித்வி மற்றும் சுராஜ் ஆகியோர் சூழ்ச்சி செய்து விக்ரமை ஏவி விடுகின்றனர். பிறகு என்ன நடந்தது என்பதே கதை…..
விக்ரமின் காளி கதாபாத்திரம் நன்றாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்தக் கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்திருக்கிறார் விக்ரம். குடும்பம், சென்டிமென்ட்டை கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குநர் அருண்குமார். புதுமையாக இரண்டாம் பாகத்தை முதலில் வெளியிட்டு முடிவுரையைத் திரைக்கதையாக்கி இருக்கிறார். ஒரு இரவில் நடக்கும் கதையாக இப்படம் அமைந்துள்ளது. ஊர் பெரியவரின் அடியாட்களிடமிருந்தும் குடும்பத்தைக் காக்க நாயகன் சிக்கிக் கொள்ளும் காட்சியும், போலீஸ் உயரதிகாரி ஆடும் கண்ணாமூச்சி ஆட்டமும் ரசிக்க வைக்கின்றன. விக்ரம் ரசிகர்கள் எந்த மாதிரியான படத்தை நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்களோ அப்படியான ஒரு படத்தை விக்ரமுக்கு கொடுத்திருக்கிறார் இயக்குனர். குறிப்பாக விக்ரம் உடனேயே பயணிக்கும் நண்பர் கதாபாத்திரமான முக்கிய கதாபாத்திரத்தில் அருண்குமாரின் சகோதரர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல நடிகராக அறிமுகமாகி இருக்கிறார்.
ஜி.வி. பிரகாஷ் வழக்கம்போல் பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார். படத்தின் விறுவிறுப்புக்கு இவரது இசையே மிக முக்கிய காரணமாக இருக்கிறது. தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில் இரவு நேர காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. விக்ரமின் காளி கதாபாத்திரம் நன்றாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்தக் கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்திருக்கிறார் விக்ரம். குடும்பம், சென்டிமென்ட்டை கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குநர் அருண்குமார். புதுமையாக இரண்டாம் பாகத்தை முதலில் வெளியிட்டு முடிவுரையைத் திரைக்கதையாக்கி இருக்கிறார். ஒரு இரவில் நடக்கும் கதையாக இப்படம் அமைந்துள்ளது.
ஊர் பெரியவரின் அடியாட்களிடமிருந்தும் குடும்பத்தைக் காக்க நாயகன் சிக்கிக் கொள்ளும் காட்சியும், போலீஸ் உயரதிகாரி ஆடும் கண்ணாமூச்சி ஆட்டமும் ரசிக்க வைக்கின்றன. விக்ரம் ரசிகர்கள் எந்த மாதிரியான படத்தை நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்களோ அப்படியான ஒரு படத்தை விக்ரமுக்கு கொடுத்திருக்கிறார் இயக்குனர். குறிப்பாக விக்ரம் உடனேயே பயணிக்கும் நண்பர் கதாபாத்திரமான முக்கிய கதாபாத்திரத்தில் அருண்குமாரின் சகோதரர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல நடிகராக அறிமுகமாகி இருக்கிறார். ஜி.வி. பிரகாஷ் வழக்கம்போல் பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார். படத்தின் விறுவிறுப்புக்கு இவரது இசையே மிக முக்கிய காரணமாக இருக்கிறது. தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில் இரவு நேர காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
ஹீரோ ஈசியாக எஸ்கேப் ஆகும் காட்சி மற்றும் பிளாஸ்பேக் காட்சிகளில் கூடுதல் கவனம் தேவை…..
மொத்தத்தில் இந்த ‘வீர தீர சூரன்’ விறுவிறுப்பு…..
RAJKUMAR- CINEMA REPORTER