அறிமுக இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில் விவேக் பிரசன்னா, பூர்ணிமா ரவி, ஆனந்த் நாக், சாந்தினி தமிழரசன், நிழல்கள் ரவி, மாரிமுத்து, பிரதோஷ், வையாபுரி, ரமா, நமோ நாராயணன், பிரதீப் கே. விஜயன், ‘ஸ்மைல்’ செல்வா, மதனகோபால் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் தான் ‘ட்ராமா’
விமர்சனம்:
விவேக் பிரசன்னா மற்றும் அவரது மனைவியாக நடித்திருக்கும் சஞ்சனா அவர்களுக்கு திருமணமாகி நான்கு வருடமாகியும் குழந்தை இல்லாமல் இருக்கிறது. பல்வேறு மருத்துவமனையை நாடி சென்றாலும் பலன் கிடைக்காமல் போகிறது. இவர்களின் நண்பனாக ஆனந்த் நாக் இருக்கிறார். ஆட்டோ ஓட்டுநராக வரும் மாரிமுத்துவின் மகள் பூர்ணிமா ரவி பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து கொண்டிருக்கும் போது பார்த்தோஷ் என்ற நபருடன் காதல் வலையில் சிக்கி கற்பமாகிறார். பல வருடங்களுக்கு பிறகு சஞ்சனாவும் கற்பமாகிறார். அப்போது சஞ்சனாவுக்கு மர்ம நபரால் ஒரு வீடியோ அனுப்பப்படுகிறது. அந்த நபர் போனில் உன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு அப்பா? யார் தெரியுமா? என கேட்க அதிர்ச்சியில் உறைகிறார் சஞ்சனா. பிறகு என்ன நடந்தது? என்பதே கதை…
செயற்கை கருத்தரிப்பு என்கிற பெயரில் நடக்கும் மோசடியை மையமாக வைத்து த்ரில்லர் ஜானரில் இக்கதையை சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர். விவேக் பிரசன்னா, வையாபுரி , நிழல்கள் ரவி , மாரிமுத்து ராமா சஞ்சீவ் ஆகியோர் தங்கள் கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார்கள். காதலர்களாக வரும் பூர்ணிமா ரவி மற்றும் பார்த்தோஷ் ஆகிய இருவரின் நடிப்பு எதார்த்தம். கார் மெக்கானிக்காக ஈஸ்வர் நடித்துள்ளார். அவர் நண்பர்களுக்கு காரில் உள்ள பொருட்களை திருடுவதை விட காரையை திருடினால் அதிகமாக சம்பாதிக்கலாம் என்று பேராசை காட்டுகிறார். குழந்தையின்மை , திருட்டு, காதல் என மூன்று கதையையும் ஒன்றாக சொல்லியிருக்கிறார் புதிய இயக்குனர் தம்பிதுரை மாரியப்பன். இசையமைப்பாளர் ஆர்.எஸ்.ராஜ்பிரதாப் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
மருத்துவமனை ஏமாற்றும் காட்சியை இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம்…
மொத்தத்தில் இந்த ‘ட்ராமா’ ஏமாற்று வேலை.
RAJKUMAR- CINEMA REPORTER