திருச்சி ஸ்ரீரங்கம் சங்கர் நகரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார்(40). ஓர் அரசுப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.
இவர், 9-ம் வகுப்பு பயிலும் 14 வயது சிறுமியை, கடந்த 3 மாதங்களுக்கு முன் மிரட்டி, கழிப்பறைக்கு வரச்சொல்லி பாலியல் தொல்லை அளித்துள்ளார். மேலும், சந்திரசேகர் (55) என்பவரது உதவியுடன், அந்த மாணவியை மிரட்டி, வேறு ஒரு இடத்துக்கு அழைத்துச் சென்று, தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதில் அந்த மாணவி 3 மாத கர்ப்பமடைந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் குடும்பத்தினர், இது தொடர்பாக லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் விசாரணை நடத்திய காவல் ஆய்வாளர் கார்த்திகேயினி மற்றும் போலீஸார், போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து, ஆசிரியர் சதீஷ்குமார், சந்திரசேகர் ஆகியோரை நேற்று கைது செய்தனர்.