நாயகன் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது நண்பர்கள் வார விடுமுறையை கழிப்பதற்காக ஊட்டிக்கு செல்ல முடிவு செய்கிறார்கள். உடன் விலை மாதுவான சிருஷ்டி டாங்கேவையும் அழைத்து செல்கிறார்கள். சிருஷ்டி டாங்கே மீது காதல் கொள்ளும் ஸ்ரீகாந்த், அவரை தனது நண்பர்கள் தொடாதவாறு பார்த்துக் கொள்கிறார். அதே சமயம், சிருஷ்டி டாங்கே உடன் உல்லாசமாக இருக்க அவரது நண்பர்கள் துடிக்கிறார்கள்.
இந்த நிலையில், சிருஷ்டி டாங்கே திடீரென்று மாயமாகி விடுகிறார். மறுநாள் நான்கு நண்பர்களில் ஒருவரும் காணாமல் போய்விடுகிறார். மாயமான இருவரையும் நண்பர்கள் ஊட்டி முழுவதும் தேடுகிறார்கள். அவர்கள் கிடைத்தார்களா? இல்லையா? என்பதே கதை.
எழுதி இயக்கியிருக்கும் எஸ்.மணிபாரதி, உணர்வுப்பூர்வமான காதல் கதை அதே சமயம் யூகிக்க முடியாத சஸ்பென்ஸ் திரில்லர் என இரண்டு ஜானர்களை அளவாக கையாண்டு இரண்டு மணி நேரம் போனதே தெரியாதவாறு படத்தை நகர்த்தி செல்கிறார். ஸ்ரீகாந்தின் நண்பர்களாக நடித்திருக்கும் பிளாக் பாண்டி, விஜே பப்பு, விக்ரம், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஜான் விஜய், நாயகியின் அம்மாவாக நடித்திருக்கும் திவ்யா, போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் தேவி பிரியா ஆகியோர் அளவாக நடித்து கதாபாத்திரங்களுக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள். கே. கோகுல் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைக்கிறது.
மைனஸ்: மதுவின் கும்மாளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம்…
மொத்தத்தில் இந்த ‘தி பெட்’ கலவை கதை.

















