சிறுமி தூக்கிட்டு தற்கொலை……தந்தை கைது….!

0
6

அரும்பாக்கம்: பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சரஸ்வதி, 36; சமையல் வேலை செய்து வருகிறார். முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து, மகள் தீபிகாவுடன் தனியே வசித்து வந்தார்.பின், 2014ல், விருகம்பாக்கத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்பவரை, இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, தீபிகா, 15, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் அறிந்து வந்த அரும்பாக்கம் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில், பிரபாகரன் மனைவியுடன் சந்தோஷமாக இருப்பதற்கு, தீபிகா இடையூறாக இருப்பதாக, செத்துப்போக கூறி, தினமும் அடித்து துன்புறுத்தியது தெரியவந்தது.இதனால் மனமுடைந்த தீபிகா, துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து, சிறுமியை தற்கொலைக்கு துாண்டிய பிரபாகரன், நேற்று கைது செய்யப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here