INDIAN CINE WAY சார்பில் கருணாஸ் மற்றும் கரிகாலன் தயாரிக்க, சத்யதேவி , கருணாஸ், திருமுருகன், பிரியாலயா, ஜானகி , மகேந்திரன் நடிப்பில் மேதகு படத்தை இயக்கிய கிட்டு எழுதி இயக்கி இருக்கும் படம் ‘சல்லியர்கள்’.

விமர்சனம்:

தமிழினத்துக்கு எதிராக திராவிடம், தேசியம், கம்யூனிசம் எல்லாம் கரம் கோர்த்தன. அண்டை மாநில அரசியல்கள் வஞ்சகம் செய்தன. வட இந்தியா தமிழனை விட சிங்களனே தனக்கு சொந்தம் என்று, இறையாண்மை இல்லாத குறையாண்மையோடு செயல்பட்டது. இந்தியாவும் பாகிஸ்தானும், இந்தியாவும் சீனாவும் எதிரி நாடுகள். ஆனால் ஈழத்தை அழிக்கும் விஷயத்தில் இவை எல்லாம் ஒன்றுக்கு ஒன்று ‘தொடுப்பு’ நாடுகளாக மாறி ஈழத்தை அழித்தன.

ஐ நா சபையிலும் இந்திய பாதுகாப்பு ஆலோசகர், வெளியுறவுத் துறை செயலர் பதவிகளிலும் , இலங்கை ராணுவ ஆலோசனை பதவிகளிலும் மலையாளிகள் உட்கார்ந்து , ஒரு பக்கம் தமிழ் நாட்டில் மாய்மாலம் செய்து பிழைத்துக் கொண்டே . தமிழினத்துக்கு எதிராக அவிழ்த்துப் போட்டார்கள். ஏகாதிபத்தியத்துக்கு எதிராக எப்போதும் இருப்போம் என்று வரலாற்றுப் புத்தகங்களை வழித்து நக்கிக் கொண்டிருக்கும் கியூபா, இலங்கைக்கு உதவி செய்ததன் மூலம் நியாயம் துறந்து அம்மணமாக நின்றது. பிரபாகரன் முன்பு பிச்சைக்காரன் ஆனான் பிடல் காஸ்ட்ரோ. இத்தனை ஈன தேசங்கள், ஈனப் பிறவிகள் தமிழினத்தின் மானத்தோடு விளையாடிய அதுதான் மூன்றாம் உலகப்போர்.

இனி ஒரு போர் வந்தால் அது நான்காம் உலகப் போர். உலகமே எதிர்த்து நின்றாலும் அஞ்சாமல் மானத்தோடு மனசாட்சியோடு போர் அறத்தோடு களமாடி தோற்றாலும், வரலாற்றில் வென்று, அந்த அநியாயத்துக்கு துணை போன தேசங்கள் ஒவ்வொன்றும் தனக்கு முகத்தில் தாங்களே காறி உமிழ்ந்து கொள்ளும் நிலைமையை உருவாக்கி வரலாற்றில் நிலைத்தது விடுதலைப் புலிகள் அமைப்பு.

குறைகளே இல்லாத அமைப்பு அல்ல அது. ஆனால் அதை விட சிறப்பான ஓர் இனப் போராளிகள் குழுவை இந்த உலகம் கண்டதில்லை. இனி காணப் போவதும் இல்லை. தனது படையில் இருந்த கடைசி வீரனின் உயிரும் தனது மனைவி மகன்களின் உயிரும் ஒன்று என்று எண்ணிய ஒரு போராளி (வஞ்சகர்கள் பார்வையில் தீவிரவாதி; பயங்கரவாதி) இந்த உலகத்தில் இருந்தான் என்ற உண்மையை, இனி நீங்கள் கற்பனையில் சொன்னாலும் இந்த உலகம் நம்பாது. லாஜிக்கா இல்லையே என்று சொல்லி விட்டு நகர்ந்து விடும்.

ஒரு நாடே ஓர் பெரும்பான்மை இனமே, சுற்றி வளைத்து நிராயுதபாணிகளை ஆயுதத்தால் கொன்று பெண்களை எல்லாம் சீரழித்து அழிக்கும் வன்முறையில் வெறியாட்டம் ஆடிய நிலையில், அண்டை நாடுகள் எல்லாம் வக்கிரத்தோடு வேடிக்கை பார்த்த சூழலில், புலிகள் படையில் காயம்பட்ட போராளிகளை மீட்டு, எந்த வசதிகளும் இல்லாத நிலையில், தரையில் தோண்டப்பட்டு உருவாக்கப்பட்ட – பங்கர்கள் எனும் – அடிப்படை வசதிகள் கூட இல்லாத, சிறிய, மண் சுரங்க அறைகளில், உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடும் அந்த போராளிகளை மீட்க, உயிரைப் பணயம் வைத்து, பசி பட்டினி கிடந்து, குடும்பத்தை இழந்து வாழ்வை இழந்து, போராளிகளைக் காப்பாற்றிய, விடுதலை புலிகள் மருத்துவ அணியின் பணி எப்படிப்பட்டது என்பதை சொல்லும் படம் இது.

ஆம். விடுதலைப் புலிகள் அமைப்பின் மருத்துவ அணியின் பெயர் சல்லியர்கள். சிங்கள மிருகங்களால் அம்மா, அப்பா, உறவுகள், காதல், பாசம் வீடு, வாசல், சொத்து சுகம் இழந்து, எங்கெங்கோ போய் ஒரு வழியாக மருத்துவம் படித்து… அயல்நாட்டுக்கு போய் மருத்துவம் பார்த்தால் கோடி கோடியாக சம்பாதிக்கலாம் என்ற சூழலில் அதை விட்டு விட்டு…

தாய் மண்ணை மீட்கும் போராளிகளைக் காப்பற்ற ஈழம் வந்து…. ஒவ்வொரு நொடியும் மரணத்தை எதிர்பார்த்து வாழ்ந்து… தங்கள் மேல் அதிக ஆத்திரத்தோடு குறி வைக்கும் சிங்களப் படையினரை சமாளித்து, பணியாற்றிய மாவீர மருத்துவர்கள் இந்த சல்லியர்கள்.

எத்தனை சிலுவைகளைப் போட்டாலும் இந்த சல்லியர்கள் சுமந்த சிலுவைகளை செஞ்சிலுவைச் சங்கம் கூட சுமந்தது இல்லை. எனினும் ஒருவன் அடிபட்டு உயிருக்கு ஆபத்து என்று வந்தால் அவன் யாராக இருந்தாலும் ஒரு மருத்துவர் என்ன செய்ய வேண்டும்? அதில் இந்த சல்லியர்கள் எவ்வளவு தெய்வத்தன்மையோடு இருந்தார்கள்.. அதன் விளைவு என்ன? என்பதே இந்தப் படம்.

‘மேதகு’ படத்திலேயே தன்னை நிரூபித்த இயக்குநர் கிட்டு, ‘சல்லியர்கள்’ மூலம் மேக்கிங்கில் அசத்தியுள்ளார். சில இடங்களில் திரைக்கதை யூகிக்கக்கூடியதாக இருந்தாலும், எடுத்துக்கொண்ட கதை, காட்சியமைப்பு, நடிப்பு, மற்றும் கருத்தியல் அம்சங்களில் உயர்ந்து நிற்கிறது. இலங்கை போரை வெறும் வன்முறையாக காட்டாமல், அங்கு உயிர்களை காப்பாற்ற போராடிய ‘சல்லியர்கள்’ எனப்படும் போராட்ட மருத்துவர்களின் வாழ்க்கையை உருக்கமாக சொல்லியுள்ளார் இயக்குநர். படம் திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில், தற்போது OTT Plus என்ற தளத்தில் வெளியாகி பாராட்டுகள் பெற்று வருகிறது.

மைனஸ்: லாஜிக் இல்லாத ரத்த காட்சிகள்! திரைக்கதையில் கூடுதல் கவனம் தேவை!

மொத்தத்தில் இந்த ‘சல்லியர்கள்’ சல்லியர்கள் தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here