போலீஸ் இன்ஸ்பெக்டர் கிச்சா சுதீப் சஸ்பெண்டுக்கு பிறகு மீண்டும் பணியில் சேர புதிய ஸ்டேஷனுக்கு வரும் வழியில் இரண்டு முக்கிய புள்ளிகளின் மகன்கள் ஒரு பெண் போலீசை பாலியல் துன்புறுத்தல் செய்கின்றனர். இதனைக் கண்டு வெகுண்டு எழும் கிச்சாசுதீப் அவர்களை அடித்து உதைத்து லாக்கப்பில் தள்ளுகிறார். அவர்கள் மிகப்பெரிய புள்ளியின் மகன்கள் என்பதால் எவரும் FIR போட பயப்படுகின்றனர்.
இந்நிலையில் இரவோடு இரவாக பாலியல் துன்புறுத்தல் செய்தவர்கள் லாக்கப்பில் இறந்து கிடக்கின்றனர். இறந்தவர்களின் செல்போனில் சில முக்கிய ஆதாரங்கள் இருப்பதால் அவர்களை எப்படியாவது இரவுக்குள் வெளியே எடுத்து விட வேண்டும் என முக்கிய புள்ளியின் அடியாட்கள் வரிசையாக ஸ்டேஷனை நோக்கி படையெடுக்கின்றனர். பிறகு என்ன நடந்தது என்பதே கதை….
வழக்கம்போல் கிச்சா சுதீப் தனது அதிரடி ஆக்சன் காட்சிகளால் படத்தை தூக்கி நிறுத்தி இருக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் மற்றொரு போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் வரலட்சுமி சரத்குமார் காட்சிக்குக் காட்சி மிரட்டி இருக்கிறார். சேகர் சந்திரா ஒளிப்பதிவில் ஆக்சன் காட்சிகள் தெறிக்கவிட்டுள்ளார்.
இரவு நேரக் காட்சிகளை தனது கேமரா மற்றும் லைட்டிங் மூலம் உலகத் தரத்தில் காட்சிகளைக் கொடுத்திருக்கிறார். சில இடங்களில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி, விக்ரம் 2 பட காட்சிகள் நினைவுக்கு வருகின்றன. அஜனீஷ் லோக்நாத் இசை படத்திற்கு பலம்.
என்ன தான் சண்டை படமாக இருந்தாலும் நிறைய லாஜிக் மீறல்கள் இருக்கின்றன…. கதையில் இன்னும் கவனம் தேவை. இந்த ‘மேக்ஸ்’ அதிரடி மாஸ்
ராஜ்குமார்- சினிமா நிருபர்

















