அற்புத சிலையை தன் கோயிலுக்குள் வைத்திருக்கும் மலையின் மேல் வசிக்கும் செங்கோட்டையன் குழுவினருக்கும் மலையின் அடிவாரத்தில் வசிக்கும் கங்கா குழுவினருக்கும் கோயில் சிலை சம்பந்தமாக அவர்களது முன்னோர்கள் காலத்திலிருந்தே பிரச்சனை இருந்து வருகிறது பலமுறை மேல்மலையிலிருந்து சாமி சிலையை திருட அடிவாரத்தில் இருக்கும் குழுவினர் திட்டமிடுகிறார்கள் அதை எடுக்க முடியாததால் வனத்துறை அதிகாரியான ஜான் விஜயுடன் கூட்டுசேர்ந்து கொள்கிறார்கள்.
அடிவார மக்களுக்கு தெரியாமல் வனத்துறை அதிகாரி ஜான் விஜய் வேறொருவருக்கு அந்த சிலையை எடுத்து கொடுப்பதாக வாக்கு கொடுக்கிறார் மேல்மலையில் இருக்கும் சிலையை வனத்துறை அதிகாரி எடுத்தாரா? அடிவாரத்திற்கு மக்களுக்கு அந்த சிலை கிடைத்ததா? என்பது இப்படத்தின் மீதிக்கதை.
கிங் ஆஃப் காட்ஸ் கதாபாத்திரத்தில் ஒரு வஞ்சக மிக்க வில்லனாக கபீர் துஹான் சிங், பழங்குடித் தலைவி கங்காவாக மஹிமா குப்தா, இடும்பனாக விஜய் சேயோன், கல்லூரி பேராசிரியர் காமராஜாக அல்ஃப்ரெட் ஜோஸ், கல்லூரி மாணவியும் பிரதாப்பின் மகள் மைதிலியாக சுபாங்கி ஜா, காளியாக சிவகிருஷ்ணா, மற்றும் செங்குட்டுவன் மகள் அல்லியாக இலக்கியா உட்பட அனைத்து நடிகர்களும் நேர்த்தியான நடிப்பு வெளிப்படுத்தி தங்களது கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்துள்ளனர். கதையின் நாயகனாக பழங்குடியினராக நடித்திருக்கும் விமல், வழக்கம் போல் அலட்டிக் கொள்ளாமல் தனது கதாபாத்திரத்தை சாதாரணமாக கையாண்டுள்ளார்.
மைனஸ்: காமெடியில் கூடுதல் கவனம் வேண்டும், யானை காட்சிகள் பெரிய அளவில் இல்லை.
மொத்தத்தில் இந்த ‘மகாசேனா’ மதம் பிடிக்கும்.

















