மதுரை மத்திய சிறையில் கைதியிடம் லஞ்சம் வாங்கிய சிறைக் காவலரை சிறை நிா்வாகம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது.
மதுரை மத்திய சிறைக் கைதிகளுக்குத் தேவையான பொருள்களை வழங்குவதற்காக சிறைக் காவலா்கள் லஞ்சம் பெறுவதாக கூறப்பட்ட புகாா்கள் தொடா்பாக சிறை நிா்வாகம் தீவிர விசாரணை நடத்தி வந்தது.
இந்த நிலையில், மத்திய சிறையில் காவலராகப் பணிபுரியும் முகமது ஆசிப், சிறையில் உள்ள கைதிகளுக்கு கஞ்சா வழங்குவதற்காக ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ாகப் புகாா் எழுந்தது.
இதைத் தொடா்ந்து, முகமது ஆசிபிடம் துறைரீதியாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது. விசாரணையில் அவா் லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, அவரை பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனா்.