பி.மஹேந்திரன் தயாரிப்பில், சிக்கல் ராஜேஷ் இயக்கத்தில், மஹேந்திரா, நீமா ரேய், நிழல்கள் ரவி, சிக்கல் ராஜேஷ், சிசர் மனோகர், சேரன் ராஜ், அன்ஸி சிந்து, அஸ்மிதா, மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘இரவின் விழிகள்’

விமர்சனம்:

சமூக வலைத்தளங்களான யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரபலமாக இருப்பவர்களில் சிலர், தங்கள் வருமானத்திற்காகவும், தங்களின் தளங்களின் பிரபலத்திற்காகவும், சில எல்லை மீறிய செயல்களை செய்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை பட்டியலிட்டு ஒருவர் கொலை செய்கிறார். அவர் யார் ? எதற்காக இப்படி செய்கிறார் ? என்பதே கதை….

சோசியல் மீடியா பிரபலங்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுவது, அந்த பட்டியலில் நாயகன், நாயகி சிக்கிக் கொண்டு தப்பிக்க முயற்சிப்பது என்று திரைக்கதை பரபரப்பாக பயணித்தாலும், கிளைமாக்ஸில் அண்ணன் – தங்கை பாசம் மூலம் செண்டிமெண்ட் காட்சிகளால் இயக்குநர் சிக்கல் ராஜேஷ் பார்வையாளர்களை கலங்க வைத்து விடுகிறார்.

நாயகியாக நடித்திருக்கும் நீமா ரேய் கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார். கவர்ச்சியிலும் தாராளம் காட்டி பார்வையாளர்களை குஷிப்படுத்துகிறார். நிழல்கள் ரவி, சிசர் மனோகர், சேரன் ராஜ் ஆகியோர் தங்களது அனுபவம் வாய்ந்த நடிப்பு மூலம் படத்திற்கு அடையாளமாக பயணப்பட்டிருக்கிறார்கள்.

மைனஸ்: பல காட்சிகள் லாஜிக் மீறல்கள்…. இசையில் கூடுதல் கவனம் தேவை….

மொத்தத்தில் இந்த ‘இரவின் விழிகள்’ கட்டுப்பாடு விழிப்புணர்வு.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here