11 மணிக்கு மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்குச் செல்கிறார்.
பெரியார் திடலுக்குச் சென்று அங்குள்ள பெரியார் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செய்வதாகவும் கூறப்படுகிறது. இப்படி சில நிகழ்வுகளுக்குப் பிறகு பகல் 12 மணிக்கு மேல் தலைமைச் செயலகத்திற்கு வந்து 3 முக்கிய கோப்புகளில் கையெழுத்திடுகிறார்.
அதில், கொரோனா நிவாரணத் தொகை ரூ.4 ஆயிரம் வழங்குவது, நகர பஸ்களில் மகளிருக்கு இலவச பயணம் ஆகிய திட்டங்கள் இடம் பெறுவதாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு அமைச்சரவையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டுகிறார்.
இந்த அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டமாக அது இருக்கும். அதில், கொரோனா பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பற்றி சில முடிவுகள் எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் கலந்தாலோசனை மேற்கொள்கிறார். இந்தக் கூட்டம் தலைமைச் செயலக வளாகத்தில் அமைந்துள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெறுகிறது.