பிரேம் ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சந்தானம், மொட்டை ராஜேந்திரன், நிழல்கள் ரவி, கஸ்தூரி, யாஷிகா ஆனந்த் ஆகியோர் நடித்துள்ள படம் தான் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’
விமர்சனம்:
ஒரு தயாரிப்பாளர் தனது படத்திற்கு மோசமான விமர்சனம் எழுதிய கிருஷ்ணா கிஸா47 என்ற விமர்சகரிடம் பழி வாங்க வேண்டும் என்று திட்டமிடுகிறார். திரை விமர்சகர்களை குறிவைத்து தன்னுடைய பாழடைந்த தியேட்டருக்கு வரவழைத்து கொல்லும் பேய் ஹிட்ச்காக் இருதயராஜ் ஹீரோ கிஸாவை தனது திரையரங்குக்கு வரவழைக்கிறார். ஆனால் அவருக்கு முன்பாகவே ஹீரோவின் குடும்பத்தினர் நிழல்கள் ரவி, கஸ்தூரி, யாஷிகா ஆனந்த் அங்கு சென்று மாட்டிக் கொள்கின்றனர்.
ஹீரோவும் அவரது நண்பரும் மொட்டை ராஜேந்திரன் திரைக்குள் இழுக்கப்பட்டு அதில் ஓடும் திரைப்படத்துக்குள் சென்று பார்க்கும்போதுதான் தெரிகிறது, அதில் இருக்கும் நடிகர்களாக ஹீரோவின் குடும்பத்தினர் இருப்பது. திரைக்குள் ஹீரோவின் காதலி கீதிகா திவாரி பேயாக மாறி இருக்கிறார். அவர் ஏன் பேயாக மாறினார்? திரைக்குள் இருந்து தனது குடும்பத்தை ஹீரோ எப்படி வெளியே கொண்டு வந்தார் என்பதே கதை..
சந்தானம் கதையோடு பொருந்தி நடித்திருக்கிறார் என்றே சொல்லலாம். மெட்டா காமெடியும், சினிமா விமர்சன உலகையும் கலந்த ஒரு முயற்சி இந்த படம். இந்த ‘டிடி’ பட வரிசையில் இது நான்காவது படம். இதுவரை வெளியான மூன்று படங்களுமே நல்ல வரவேற்பை பெற்றிருந்தன. குறிப்பாக கடைசியாக வெளியான ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும் பாராட்டப்பட்டது.
இப்படியான சூழலில் ‘கோவிந்தா’ பாடல் சர்ச்சை, படக்குழுவின் தொடர் புரோமோஷன் உள்ளிட்ட வெளிச்சத்துடன் வெளியாகியிருக்கிறது இப்படம். படத்தின் க்ளைமாக்ஸில் வரும் ‘மெல்ல சாவ்’ பாடல் சிறப்பு. சந்தானம், மொட்டை ராஜேந்திரன், நிழல்கள் ரவி, கஸ்தூரி, கவுதம் மேனன் உள்ளிட்டோர் ஒரு காமெடி படத்துக்கு எது தேவையோ அதை கொடுத்திருக்கின்றனர். பின்னணி இசை ஓகே. கதை யோசனை புதுமையாக இருக்கிறது என்றே சொல்லலாம். தீபக் குமார் பதியின் ஒளிப்பதிவில் கலர்ஃபுல்லான காட்சிகள் ஈர்க்கின்றன.
மைனஸ்: காமெடி இந்த படத்தில் செட் ஆகவில்லை…. சிஜியில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்….. இரண்டாம் பாதி சலிப்பை ஏற்படுத்துகிறது……
மொத்தத்தில் இந்த ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ சுமார் தான்…..