தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்த நிலையில், மார்ச் 14 முதல் அமலுக்கு வரவுள்ளது. அச்சுறுத்தல் தொடர்பான உளவுத் துறையின் அறிக்கையின் அடிப்படையில், நாட்டியுள்ள அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள் உள்ளிட்டோருக்கு மத்திய அரசு பாதுகாப்பு வழங்கி வருகின்றது.

இந்த நிலையில், நடிகர் விஜய் கட்சி தொடங்கியுள்ள நிலையில், தேர்தலை முன்னிட்டு பல்வேறு பொது இடங்களுக்கு அவர் பயணம் செய்விருக்கிறார். இதனிடையே, விஜய்க்கு சமூக ஊடகங்களில் அச்சுறுத்தல் எழுந்த நிலையில், அவரின் பாதுகாப்பு கருதி ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க உள்துறை அமைச்சகம் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவானது வருகின்ற மார்ச் 14 முதல் அமலுக்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது வெளிநாட்டு பவுன்சர்கள் விஜய்யின் பொது நிகழ்ச்சிகளில் அவருக்கான பாதுகாப்பை உறுதி செய்து வரும் நிலையில், இனி மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை கமாண்டோக்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் விஜய் இருப்பார். சுழற்சி முறையில் துப்பாக்கி ஏந்திய 8 முதல் 11 மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை கமாண்டோக்கள் தமிழகத்தில் மட்டும் விஜய்க்கு பாதுகாப்பு அளிக்கவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here