ஸ்ரீலக்ஷ்மி ட்ரீம் ஃபேக்டரி சார்பில் பிரபாகர் ஸ்தபதி தயாரிக்க, கவுசிக் , பிரதிபா , அருள் சங்கர், சிங்கம் புலி, கஞ்சா கருப்பு மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’
விமர்சனம்:
கதிர்வேலன் என்ற இளைஞன் (கௌஷிக்) கிறிஸ்டினா (பிரதிபா) என்ற பெண்ணை ஒரு கோவில் திருவிழாவில் பார்த்து, அவள் மேல் காதல் கொள்கிறான் . அவளும் அவனை கவனிக்கிறாள். வெளிநாட்டுக்கு வேலைக்குப் போவதற்கான ஏற்பாடுகளில் இருக்கும் கதிர்வேலன், கிறிஸ்டினா ஒரு கல்லூரியில் படிப்பதை அறிந்து, வெளிநாடு போகும் எண்ணத்தைக் கைவிட்டு, அவளது கல்லூரியில் சேர்ந்து அவளது வகுப்புக்கே போகிறான். அவளும் அவனிடம் பேசுகிறாள். அவன் காதலிப்பதும் அவளுக்குத் தெரிகிறது. அவள் மறுக்கவும் இல்லை. ஏற்கவும் இல்லை.
இந்நிலையில் கல்லூரியில் படிக்கும் வேறு ஒரு மாணவனும் மாணவியும் காதலிக்க, சாதி வேறுபாடு காரணமாக அவர்களது பெற்றோர்கள் கல்யாணத்துக்கு மறுக்க, அவர்கள் குடும்பங்களுக்குத் தெரியாமல் பதிவுத் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள். சாட்சிக் கையெழுத்துப் போடுவதற்காக கதிர்வேலனும் கிறிஸ்டினாவும் தங்களது ஆதார் கார்டு , மற்றும் ரேஷன் கார்டைத் தருகிறார்கள். இந்த நிலையில் கிறிஸ்டினாவுக்கு குடும்பத்தார் பார்த்தபடி ஒரு கிறிஸ்தவ மணமகனோடு சர்ச்சில் நிச்சயதார்த்தம் நடக்கிறது. இந்நிலையில் கதிர்வேலனுக்கும் கிறிஸ்டினாவுக்கும் பதிவுத் திருமணம் நடந்ததாக சான்றிதழ் உறவினர் ஒருவருக்கு கிடைக்கிறது. பிறகு பூகம்பம் வெடித்ததா? மரணம் நிகழ்ந்ததா? என்பதே கதை….
கதையின் ஆரம்பத்தில் இது ஒரு சராசரி காதல் படமாக இருக்கும் என்று நினைத்த நேரத்தில் எதிர்பாராத ட்விஸ்ட் வைத்துள்ளார் இயக்குனர் அலெக்ஸ் பாண்டியன். இரண்டாம் பாதியில் படம் சுவாரஸ்யமாகவும், கிளைமேக்ஸில் செண்டிமென்டாகவும் படத்தை நிறைவு செய்துள்ளார். காதலை வெளிப்படுத்த தெரியாத 90களில் பிறந்தவர்களின் நிலைமையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம்.
திருவிழாவில் தனது உயிரை காப்பாற்றிய கதாநாயகியை ஒரு தலை பட்சமாக காதலிக்கும் இளைஞரின் கதை.தனது காதலை எந்த விதத்திலும் சொல்ல முடியாமல் தவிக்கும் கதாபாத்திரத்தில் கதாநாயகன் சிறப்பாக நடித்து இருக்கிறார். படத்தின் நாயகி கண்களாலேயே காதல் மொழி பேசுகிறார். நாம் இதுவரை பார்த்த படங்கள் சொல்லாமல் இருக்கும் காதல்.காதல் கடிதம் கொடுத்து வரும் காதல் பார்த்திருக்கிறோம்.இந்தத் திரைப்படம் கண்களாலேயே காதல் பேசும் புதுமையை செயல்படுத்தி உள்ளார் இயக்குனர்.
மைனஸ்: கதை தெளிவாக இல்லை…. இசையில் கூடுதல் கவனம் தேவை…
மொத்தத்தில் இந்த ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ அசைவு காதல்.

















