பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் வெற்றியாளராக முத்துக்குமரன் தேர்வாகியுள்ளார். பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி எப்போதும்போல மிகுந்த எதிர்பார்ப்புடன் கடந்த ஆண்டு அக்டோபர் 6-ஆம் தேதி தொடங்கியது.
24 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இறுதி நாளில் விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா ஆகிய 3 போட்டியாளர்கள் இருந்தனர். 3ஆவது இடத்தை விஷால் பிடித்துள்ளார். இரண்டாம் இடத்தை சௌந்தர்யா நஞ்சுண்டான் பிடித்தார்.
பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக முத்துக்குமரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு கோப்பையுடன் ரூ.40.50 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. பெற்றோர் இதை பார்த்து நெகிழ்ச்சி அடைந்தனர்.









